விஜயகாந்த் பதவியில் பிரேமலதா.. அண்ணியார் பதவியில் யாரோ? தேமுதிகவின் அடுத்த பொருளாளர் யார்?
சென்னை: தேமுதிகவின் பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வான நிலையில் அவர் வகித்து வந்த பொருளாளர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
உடல்நிலை பாதிக்கப்பட்டு விஜயகாந்த் மியாட் மருத்துவமனையிலிருந்து அண்மையில் வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் டிசம்பர் 14 ஆம் தேதியான இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விஜயகாந்தை பார்க்க பலர் ஆர்வம் காட்டி திருவேற்காடு அருகே உள்ள திருமண மண்டபத்தில் குவிந்தனர்.

இந்த நிலையில் விஜயகாந்த் விழா மேடைக்கு வந்ததும் அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டது. கேப்டன் கேப்டன் என முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து பொதுக் குழு கூட்டம் கூடியது. தேமுதிக நிறுவனத் தலைவரும் பொதுச் செயலாளராக இருந்தவருமான விஜயகாந்த் அங்கு நாற்காலியில் பிரேமலதாவுக்கு பக்கத்தில் உட்கார வைக்கப்பட்டார்.
அவர் பிரத்யேக நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவர் முன்பை விட தற்போது தெம்பாகவே உள்ளார். அருகே இருந்த நிர்வாகி பார்த்தசாரதியிடம் பேசினார். இந்த நிலையில் தேமுதிக பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் பிரேமலதாவை பொதுச் செயலாளராக அறிவித்து விஜயகாந்த் உத்தரவிட்டார்.
இதையடுத்து பிரேமலதாவின் கைகளை பிடித்து விஜயகாந்த் உயர்த்தினார். பிறகு பிரேமலதா, விஜயகாந்தின் காலில் விழுந்து வணங்கினார். இந்த நிலையில் பிரேமலதா வகித்து வந்த பொருளாளர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜயகாந்த் கட்சியில் செயல்பட முடியாத போது பிரேமலதாவுடன் பக்க பலமாக இருந்து வருபவர்கள் இருவர்.
அவர்கள் சுதீஷ், விஜய பிரபாகரன் ஆவார்கள். இன்றைய பொதுக் கூட்டத்திலேயே விஜய பிரபாகரனுக்கு தலைவர் பதவி வழங்கப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் இதற்கு விஜயகாந்தின் உண்மையான தொண்டர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதை அறிந்து கொண்டே அந்த அறிவிப்பை விடவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் அந்த பதவி விஜய பிரபாகரனுக்கு கொடுக்கப்படுமா இல்லை சுதீஷுக்கு கொடுக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து அரசியல் நிபுணர்கள் கூறுகையில், பொதுச் செயலாளராக பதவியேற்ற பிரேமலதா இனி கட்சியின் பொருளாளர் பதவியை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வார்.
தம்பியா, மகனா என எடுத்துக் கொண்டால் பிரேமலதாவின் சாய்ஸ் மகனாத்தான் இருக்கும். தம்பி சுதீஷுக்கு பொருளாளர் பதவி வழங்காமல் தனது மகனுக்கு வழங்கினாலும் வழங்குவார் என சொல்லப்படுகிறது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications