கழக உடன்பிறப்புகளே.. 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமா? அதிமுக அழைப்பு
சென்னை: திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடராம் உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 24ம் தேதி விருப்ப மனு வழங்கலாம் என அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வேலூரைத் தவிர 38 மக்களவை தொகுதிகளுக்கும், ஆண்டிபட்டி, பெரியகுளம், தஞ்சை, ஆம்பூர், உள்பட 18 சட்டமன்ற தொகுதிகளும் நேற்று தேர்தல் நடந்து முடிந்தது.

வரும் மே 19ம் தேதி திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடராம் உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடராம் உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட விரும்பும் உடன்பிறப்புகள், வரும் 21.4.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பக் கட்டணத் தொகையாக ரூ.25,000 த்தை செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அன்றைய தினமே(21.4.2019) வழங்க வேண்டும்" என கூறப்படுள்ளது.
-
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications