ஈரோட்டில் வெல்லப்போவது யார்? அதிமுக ஆற்றல் அசோக்குமாரா.. திமுகவா? தந்தி டிவி பரபர சர்வே ரிசல்ட்
சென்னை: ஈரோடு லோக்சபா தொகுதியில் அதிமுக -திமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்த தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்து தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால், இறுதி கட்ட அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு உள்ளது என்பது தொடர்பாக பல்வேறு கருத்துக்கணிப்புகளும் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள லோக்சபா தேர்தல் தொடர்பாக தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு லோக்சபா தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது? என்பது குறித்த முடிவுகள் வெளியாகியுள்ளது. அது பற்றி இங்கே பார்க்கலாம்.
ஈரோடு லோக்சபா தொகுதியில் திமுக - அதிமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. திமுக சார்பில் கேஇ பிரகாஷ் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் பி விஜயகுமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் கார்மேகன் போட்டியிடுகிறார்.
தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி திமுக வேட்பாளர் அதிக வாக்கு சதவிகிதம் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது திமுகவிற்கு 41 சதவிகிதம் முதல் 47 சதவிகிதம் வரையும், அதிமுகவிற்கு 38 சதவிகிதம் முதல் 44 சதவிகிதம் வரையும் , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 சதவிகிதம் முதல் 11 சதவிகிதம் வரையும், நாம் தமிழர் கட்சிக்கு 6 சதவிகிதம் முதல் 9 சதவிகிதம் வரையும் மற்ற கட்சிகளுக்கு 1 சதவிகிதம் முதல் 3 சதவிகிதம் வரையும் வாக்குகள் கிடக்கலாம் என்று கருத்துக்கணிப்பு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்பு முடிவுகள்:
திமுக - 41 - 47 சதவிகிதம்
அதிமுக - 38 - 44 சதவிகிதம்
பாஜக - 5 - 11 சதவிகிதம்
நாம் தமிழர் கட்சி - 6 - 9 சதவிகிதம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications