உங்கள் காரில் இப்படி இருந்தால் உடனே மாற்றுங்க.. சென்னையில் எங்கு பார்த்தாலும் அபராதம் தான்!
சென்னை : உங்கள் கார் நம்பர் பிளேட் தெளிவாக இல்லாமல், எழுத்துக்கள் சில பெரிதாகவும், சில எழுத்துக்கள் சிறியதாக இருந்தால் உங்களுக்கு அபராதம் விதிப்பார்கள். சென்னையில் உங்க கார் நம்பர் பிளேட் சரியில்லை என யார் புகைப்படம் எடுத்து அனுப்பினாலும் கண்டிப்பாக உடனே அபராதம் விதிப்பார்கள்.
சென்னையில் கார் ஓட்டுபவர்கள் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு அபராதத்தில் சிக்கி கொள்ளாதீர்கள். சென்னையில் இப்போது சிக்னலில் மீறி செல்வோருக்ககு அபராதம் விதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. விதிமீறி செல்வதை பார்த்து யாராவது புகைப்படம்எடுத்து அனுப்பினால் கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படுகிறது.

சென்னையில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படுகிறது. போலீஸ் சோதனையில் இல்லை என்றாலும் ஆன்லைன் முறையில் அபராதம் விதிக்கப்படுகிறது. அதாவது போலீசிடம் சிக்காமல் பொதுமக்களிடம் சிக்கினாலும் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
எனவே அலட்சியத்துடன் ஹெல்மெட் அணியாமல் பயணித்தால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும் போது உயிர் போகும் அபாயம் உள்ளது. அத்துடன் விதிமீறலில் சென்றதற்காக அபராதமும் செலுத்த வேண்டியதிருக்கும். நீங்கள் மட்டுமல்ல உங்கள் பின்னால் அமர்ந்து செல்பவரும் கண்டிப்பாக ஹெல்மட் அணிய வேண்டும். அப்படி அணியாமல் சென்றால் உங்களுக்கு 1000 ரூபாயும், உங்களுடன் செல்வோர் அணியாததற்காக ஒரு ஆயிரம் என இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிப்பார்கள்.
காரை பொறுத்தவரை சீட் பெல்ட் அணியாமல் போனால் கண்டிப்பாக அபராதம் விதிப்பார்கள். அதேபோல் நம்பர் பிளேட் விஷயத்திற்காகவும் கார் மற்றும் பைக்கிற்கு அபராதம் விதிக்கப்படுகிறது. உங்கள் நம்பர் பிளேட் சரியாக இல்லை அதாவது அரசு அனுமதிக்கப்பட்ட வகையில் இல்லாமல், சில எழுத்துகள் பெரியதாகவோ அல்லது சில எழுத்துக்கள் சிறியதாகவோ இருந்தால் அபராதம் நிச்சயம். இதனை போலீஸ் பார்த்து அபராதம் விதிக்க வேண்டும் என்ற நிலை இப்போது இல்லை.
பொதுமக்கள் யாராவது நீங்கள் சாலைகளில் செல்லும் போது, சிக்னலில் நிற்கும் போது புகைப்படம் எடுத்து சென்னை போலீஸை ட்விட்டரில் டேக் செய்து புகார் அளித்தாலே போதும். உங்களுக்கு கண்டிப்பாக அபராதம் விதிப்பார்கள். எனவே நம்மை யார் கேட்க போகிறார்கள் என்று நினைத்து நம்பர் பிளேட்டை இஷ்டத்திற்கு எழுதாதீர்கள். ஒருவேளை அப்படி எழுதி இருந்தால் உடனே மாற்றிவிடுங்கள். இல்லாவிட்டால் சென்னையில் எங்கு பார்த்தாலும் உங்களுக்கு 500 ரூபாய் அபராதம் நிச்சயம் விதிப்பார்கள்.
சென்னையில் ஈசிஆர் சாலையில் பாலவாக்கம் சிக்னல் அருகே ஒரு காரின் நம்பர் பிளேட்டில் எழுத்துக்கள் சிறியதாகவும் பெரியதாகவும் மாறி மாறி இருந்தது. அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் இன்னொரு முக்கியமான விஷயம் சாலைகளில் சிக்னலை மீறி செல்வதை யாராவது வீடியோ எடுத்து அனுப்பினால் கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படுகிறது. கார் மற்றும் பைக் இருவருக்குமே விதிக்கப்படுகிறது. தவறான பார்க்கிங்கிற்கும் அபராதம் கார் மற்றும் பைக்கிற்கு விதிக்கப்படுகிறது. எனவே மக்களே சென்னையில் கவனமாக இருங்கள் விதிமீறிலில் ஈடுபட வேண்டாம்.












Click it and Unblock the Notifications