கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி?
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளுக்குமே மிக முக்கியமான ஒன்று. உட்கட்சி பிரச்சனை, அதிகாரப்போட்டி என பல்வேறு பிரச்சனைகளால் தள்ளாட்டத்தில் இருக்கும் அதிமுக இந்த முறை ஆட்சியைப் பிடிக்காவிட்டால் அதன் எதிர்காலம் என்னவாகும் என ரத்தத்தின் ரத்தங்களே சந்தேகப் பார்வை பார்க்கும் நேரத்தில் இந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பது அதிமுகவின் கட்டாயம்.
அதேநேரம் பாஜக, அதிமுக எதிர்ப்புகளை மீறி இரண்டாம் முறை ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் திமுக மிக முனைப்போடு செயல்பட்டு கொண்டிருக்கிறது. இரண்டு முகாம்களிலுமே இன்னும் கூட்டணி கட்சிகளை சமரசம் செய்யும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதிலும் கூடுதலாக அதிமுக கூட்டணியில் இன்னும் எந்த கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள், எந்த தொகுதிகள் என்பதை யார் முடிவு செய்வது என்பதிலேயே குழப்பம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பாஜகவிற்கு குடைச்சல் கொடுப்பதற்காகவே குமரி மாவட்டத்தில் இருந்து கிளம்பி இருக்கிறார் த பா ஜி என்னும் த.பாலசுப்பிரமணியன்.

இவர் அகில பாரத இந்து மகா சபா என்னும் அரசியல் கட்சியின் மாநில தலைவராக இருக்கிறார். வரும் தேர்தலில் த பாஜி நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாஜக முழுமையாக நம்பி இருக்கும் மாவட்டங்களில் ஒன்று கன்னியாகுமரி மாவட்டம். அதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தே பாஜகவிற்கு குடைச்சல் கொடுக்க தயாராகிவிட்டார் த பா என்கிறார்கள் கள விவரம் அறிந்தவர்கள்.
நாகர்கோவில் முழுவதும் அகில பாரத இந்து மகா சபா கட்சியின் சார்பில் த. பாலசுப்பிரமணியம் போட்டியிட உள்ளதாக ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டர்களால் பரபரத்துக் கொண்டிருப்பது என்னவோ பாஜக தான். அதிலும் த. பாலசுப்பிரமணியம் முன்னெடுத்து வைக்கும் அரசியல் மிக வித்தியாசமானதும், நுட்பமானதாகவும் இருக்கிறது. அதாவது பாஜக என்பது சங்கபரிவார்கள் என்றும், நாங்கள் இந்து பரிவார்கள் என்றும் ஒரு புதிய விளக்கத்தை தமிழக அரசியலில் கொடுத்திருக்கிறார் த.பாலசுப்பிரமணியம். மேலும் பாஜக சாதி பார்த்து அரசியல் செய்யும் கட்சி என்றும் ஆனால் நாங்கள் சமத்துவத்தோடு அரசியல் செய்யும் கட்சி என்றும் தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார் த. பாலசுப்பிரமணியம்.
இந்தியா முழுவதும் அயோத்தி பிரச்சனை மிக முக்கிய பிரச்சினையாக இருந்த காலத்தில், தமிழகத்தில் அயோத்தி பிரச்சனையை மூளை முடுக்கெல்லாம் கொண்டு சென்றவர்களில் முக்கியமானவர் த. பாலசுப்பிரமணியம். ஆனால் அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கு தங்களின் உழைப்பை பயன்படுத்திக்கொண்ட பாரதிய ஜனதா கட்சி பின்னாளில் தங்களை கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டை முன் வைக்கிறார் த.பாலசுப்பிரமணியன் அதோடு பாஜக இந்துத்துவத்திற்கு எதிரான கட்சி என்ற பஹீர் குற்றச்சாட்டை முன் வைக்கும் த.பாலசுப்பிரமணியன், இந்துக்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பதற்காக பாஜக இந்துத்துவ கட்சி ஆகிவிட முடியாது. திமுக, அதிமுக என இரண்டு திராவிட கட்சிகளிலும் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடும் இந்துக்கள் அதிகம் இருக்கிறார்கள்.
அதனால் திமுகவும் அதிமுகவும் இந்துத்துவ கட்சியா என கேள்வி எழுப்புகிறார் த. பாலசுப்பிரமணியன். பாஜக தங்கள் அமைப்பை அங்கீகரிக்கவில்லை என்ற குமுறலோடு இருக்கும் த. பாலசுப்பிரமணியன், வரும் சட்டமன்ற தேர்தலில் புதிதாக கட்சி தொடங்கி இருக்கும் சசிகலாவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காண உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் 105 இடங்களில் தங்களது வேட்பாளர்களை களம் இறக்க உள்ளதாகவும் த.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குறிப்பாக பாஜக தனக்கு செல்வாக்கு அதிகம் இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோயில், விளவங்கோடு, பத்மநாபபுரம், கிளியூர், குளச்சல் என ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் இந்து மகா சபா போட்டியிடும் என அறிவித்திருப்பதன் மூலம் பாஜகவிற்கு நேரடி சவால் விடுகிறாரா தபா ஜி என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தை பொருத்தவரை பாஜகவும் திமுகவும் கூட்டாளிகள் தான் என அடித்து கூறும் த. பாலசுப்பிரமணியன், கடந்த நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் பாஜகவும் திமுகவும் எப்படி தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்து மாறி மாறி வாக்களித்து தங்களுக்கு தேவையானவர்களை வெற்றி பெறச் செய்தார்கள் என்பதை இந்துக்கள் அறிவார்கள் என விமர்சனத்தை முன் வைக்கும் த. பாலசுப்பிரமணியன், பாஜகவை எதிர்த்தே அரசியல் செய்ய உள்ளதாக விளக்கம் அளித்து இருக்கிறார்.
அதனால் சசிகலாவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள அவருடன் முதல் கட்ட சந்திப்பை நடத்தி முடித்து இருப்பதாகவும், வரும் தேர்தலில் சசிகலாவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாகவும் த. பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் தாமரையை மலர வைத்தே தீர்வோம் என பாஜக கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. இதற்காக அதிமுக என்னும் பேரியக்கத்தை வளைத்து போட்டு அதன் செல்வாக்கோடு எப்படியாவது இந்த முறை தமிழகத்தில் கணிசமான சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என பாஜக காய் நகர்த்தி வரும் நிலையில், இந்துத்துவ அடையாளத்தோடு இருக்கும் ஒரு அரசியல் கட்சி பாஜகவிற்கு எதிராக களம் இறங்கி இருப்பது பாஜகவிற்கு சேதாரத்தை ஏற்படுத்துமா என்பதற்கு தேர்தல் களம் தான் சரியான பதிலைச் சொல்லும்.
- சிறப்பு நிருபர்
-
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications