"இவர்"தான் அடுத்த மேயரா.. ஸ்டாலினின் கனவு திட்டம்.. "சூறாவளி"யின் பரபர பின்னணி.. யார்னு பாருங்க!
சென்னை: கொரோனா தொற்று பரவல் மெல்ல மெல்ல குறைந்து வரும் சூழலில், அரசியல் பரபரப்பு எகிறி அடித்து கொண்டிருக்கிறது.. அந்த வகையில், அடுத்த சென்னை மேயர் யார் என்பது குறித்த பேச்சுதான் தற்போது கிளம்பி உள்ளது..!
கொரோனா குறைந்த பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று ஆளுநர் உரையில் நேற்று தெரிவித்திருந்தார்.. அதேபோல, தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித்தேர்தல் நடத்த சென்னை ஹைகோர்ட்டும் இன்றைய தினம் உத்தரவிட்டுவிட்டது..
அதன்படி, செப்டம்பர் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த ஹைகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.. ஆனால், இதற்கு முன்னதாகவே, சென்னை மாநகராட்சியில் மீண்டும் சிங்கார சென்னை 2.0 திட்டத்தைச் செயல்படுத்தவிருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியதுதான் இந்த பரபரப்புக்கெல்லாம் முக்கிய காரணமாக அமைந்து வருகிறது.

மேயர்
அந்த வகையில், சென்னையில் மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது.. உலகிலுள்ள பழம்பெரும் மாநகராட்சிகளில் ஒன்றுதான் சென்னை மாநகராட்சி.. கடந்த 20 ஆண்டுகளில், மேயர் என்றாலே டக்கென நம் கண்முன் வந்து நிற்பது ஸ்டாலின் பெயர்தான்.. இதற்கு காரணம், " மக்களால் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர்" என்ற பெருமையை பெற்றவர் முக ஸ்டாலின்தான்.

சீர்திருத்தங்கள்
ஸ்டாலின் மேயராக இருந்தபோது சென்னைக்கு செய்த சீர்திருத்தங்கள் ஏராளம்.. மேயராக அவர் பொறுப்பேற்றதுமே, சென்னையை "சிங்காரச் சென்னை"யாக மாற்றுவேன் என்று சொன்னார்.. அவர் சொன்னபடியே செய்தும்காட்டினார்.. ஜவகர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஸ்டாலினின் சிங்காரச் சென்னை திட்டம் செயல்படுத்தப்பட்டது.

மேயர் யார்?
அன்று மேயர் ஸ்டாலின் மட்டும் இல்லையென்றால், இன்று சென்னையில் இத்தனை பாலங்கள், மேம்பாலங்கள், சாலை விரிவாக்கம், நடைபாதை அமைத்தல், சாலைப் பராமரிப்பு, பூங்காக்கள் அமைத்தல், கடற்கரை சீரமைப்பு இப்படி பல்வேறு பணிகள் நடந்திருக்காது.. சென்னையும் பூத்து குலுங்கி இருக்காது.. இந்த நேரத்தில் ஸ்டாலினுக்கு அடுத்து, மேயராக இருந்த மா.சுப்பிரணியத்துக்கும் நாம் நன்றிகளை சொல்ல வேண்டி உள்ளது.. அன்று மா.சு. ஏற்படுத்திய பார்க்குகள், பாலங்கள் சென்னையை மேலும் பொலிவாக்கியது.

அதிமுக
ஆனால், அதோடு சரி.. 2001-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு மொத்த திட்டமும் அப்படியே அமுங்கிவிட்டது.. பிறகு மறுபடியும் திமுக ஆட்சிக்கு வந்ததுடன், மெட்ரோ ரயில் திட்டத்தையும் சேர்த்து அமலாக்கியது.. மறுபடியும் சென்னையை யாருமே கவனிக்கவில்லை.. இந்த 10 வருட ஆட்சியில், அதிமுகவின் உட்கட்சி பிரச்சனைகளே மேலோங்கி எழுந்தன.. அவர்களுக்குள் உட்கட்சி விவகாரமும் இன்னமும் தீர்ந்தபாடில்லை..

மீண்டும் ஆட்சி
இப்படிப்பட்ட சூழலில்தான், திமுக ஆட்சிக்கு வந்துள்ளது.. மறுபடியும் "சிங்காரச் சென்னை திட்டம் 2.0" என்ற பெயரில் கையில் எடுக்கப்பட்டுள்ளது... இந்த திட்டத்தின்கீழ், சென்னை மாநகராட்சியை சர்வதேசத் தரத்துக்கு உயர்த்த உள்ளதாகவும், கலை, கலாசாரம், கல்வி, சுகாதாரம், விளையாட்டு போன்ற பல்வேறு சிறப்பம்சங்களோடு இந்த திட்டம் தயாராகி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

புராஜக்ட் ப்ளூ
சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் "புராஜக்ட் ப்ளூ" என்ற முக்கிய திட்டமும் செயல்படுத்தப்படவிருக்கிறது அதன்படி, சென்னையிலுள்ள பீச்கள் மேம்படுத்தப்படவுள்ளன.. மேலும் பூங்காக்களை சீரமைப்பதும், புதிதாக பார்க்குகளை கட்டுவதும், அதிகமான மேம்பாலங்களை கொண்டு வருவது, ரயில் நிலையங்களை மேம்படுத்துவது இப்படி பல திட்டங்கள் கையில் உள்ளன... இது எல்லாவற்றையும்விட ஹைலைட், கூவத்தை சுத்தப்படுத்த போகிறார்களாம்.

திட்டம்
அதையும்விட முக்கியம், இந்த சிங்கார சென்னையின் பொறுப்பு யாரிடம் செல்ல போகிறது? அடுத்த மேயராக பொறுப்பேறப்பது யாராக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு எழுகிறது.. காரணம், இது ஸ்டாலினின் கனவு திட்டமாகும்.. அதனால், இந்த முக்கிய பொறுப்பை யாருக்கு வழங்குவது என்ற ஒருசில பெயர்களும் அடிபடுகின்றன.. அந்த வகையில்தான் உதயநிதி பெயரும் அடிபடுகிறது.

உதயநிதி
உதயநிதியை பொறுத்தவரை, தான் எம்எல்ஏவாக பொறுப்பேற்றது முதலே, தன் தொகுதியை கண்ணுக்குள் வைத்து பார்த்து வருகிறார்.. குடிசைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என ஒன்றையும் விடுவதில்லை.. தெருக்கள், சந்துகள், குப்பை கூளங்கள் பகுதிகள் என மொத்த இடங்களுக்கும் நேரடியாகவே சென்று ஆய்வு செய்கிறார்.

குடிசை - கூரை
நேற்றுமுன்தினம்கூட ஒரு குடிசை வீட்டுக்குள் நுழைந்து அந்த கூரையின் மேற்பகுதியை பார்த்துள்ளார்.. அப்போது ஒரு வயதான பெண், "சாமி படங்கள் இங்கே இருக்கு..ப்பா, செருப்பு போட்டுட்டு வரக்கூடாது" என்று சொல்லவும், "ஓ.. ஸாரி.. நான் கவனிக்கல" என்று சொல்லி, செருப்பையும் வெளியே கழட்டிவிட்டு வந்து மீண்டும் கூரையை ஆய்வு செய்ததை அங்கிருந்தோர் மலைத்து பார்த்தனர்.. அந்த வீட்டிலேயே ஒரு பெண்மணி, தான் சுட்டுக் கொண்டிருந்த தோசையை உதயநிதிக்கும் பாசமாக வழங்கியபோது, அதை வாஞ்சையுடன் உதயநிதி வாங்கி சாப்பிட்டதையும் விக்கித்து பார்த்தனர் அந்த பகுதி மக்கள்.

வாரிசு அரசியல்
இது ஒரு உதாரணம்தான்.. உண்மையை சொல்லபோனால், பதவியேற்றது முதலே உதயநிதியின் செயல்பாடுகள் ஆச்சரியத்தை தந்து கொண்டிருக்கின்றன.. வாரிசு அரசியல் என்ற வழக்கமான வாதத்தை இவைகள் உடைத்து கொண்டிருக்கின்றன.. அந்த வகையில், ஸ்டாலினின் கனவு திட்டத்தை நிறைவேற்ற உதயநிதியும் ஒரு சாய்ஸாக இருப்பதாக கூறப்படுகிறது.. பார்ப்போம்..!
-
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி












Click it and Unblock the Notifications