அதிமுக மீட்டிங் தொடங்கியதும் ஷாக்! மாறி மாறி முறைத்துக்கொண்ட 2 மாஜிக்கள்! பதறும் எடப்பாடி! என்னாச்சு
சென்னை: சென்னை அதிமுக அலுவலகத்தில் நடந்து வரும் கட்சி கூட்டத்தில் அதிமுகவின் 2 மாஜிக்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக பாஜக மோதல் கிட்டத்தட்ட கிளைமேக்ஸை எட்டிவிட்டது. அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மூத்த தலைவர்கள் உடன் எடப்பாடி பழனிசாமி தற்போது ஆலோசனை செய்து வருகிறார்.
இந்த ஆலோசனைக்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன. அதிமுகவின் எதிர்காலத்தை கிட்டத்தட்ட நிர்ணயிக்க போகும் கூட்டமாக இன்று நடக்க போகும் கூட்டம் இருக்க போகிறது என்றுதான் கூற வேண்டும். அதிமுக கூட்டணிக்கு பின்வரும் காரணங்கள் உள்ளன.

காரணங்கள்: அதிமுக - பாஜக கூட்டணி தொடரலாமா வேண்டாம்? அதிமுக பாஜக கூட்டணி தொடர்ந்தால் யாருக்கு நல்லது? யாருக்கு கேட்டது.
அதிமுக பாஜக கூட்டணி முறியும் பட்சத்தில் புதிதாக கூட்டணி யாருடன் வைக்கலாம். கூட்டணி வைத்தால் அதற்கு என்ன பெயர் வைப்பது.
அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தால் டெல்லியின் பிரஷரை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதை எப்படி சமாளிப்பது. முக்கியமாக பல்வேறு வழக்குகளை எப்படி சமாளிப்பது.
கூட்டணி வைப்பதாக இருந்தால் அண்ணாமலையை எப்படி எதிர்கொள்வது. அண்ணாமலையின் பேச்சுகளுக்கு எப்படி பதிலடி கொடுப்பது.
( சூதானமா இருங்க.. பெரிய சூழ்ச்சி இது! அதிமுக - பாஜக கூட்டணி மோதல்.. திமுகவிற்கு போன ரெட் அலர்ட்! )
உள்ளிட்ட விஷயங்களை ஆலோசனை செய்ய உள்ளனராம். அதோடு இல்லாமல் கட்சியில் பலர் தான்தோன்றி தனமாக பேசுகிறார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது. முக்கிய விஷ்யங்களில் நிர்வாகிகள் பொதுவில் கருத்து தெரிவிக்காமல் அமைத்து காப்பது தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்க இருக்கிறாராம்.
கட்சியில் சில மாஜி அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்படுவதாக கூறப்படுகிறது. அவர்கள் யார் என்பது குறித்தும் எடப்பாடி பழனிசாமி தீவிர விசாரணைகளை இன்றைய கூட்டத்தில் செய்வார் என்று கூறப்படுகிறது.
கூட்டம் தொடக்கம்: இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம் தற்போது தொடங்கி உள்ளது. அதிமுக - பாஜக இடையே மோதல் உச்சமடைந்துள்ள நிலையில், சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி உள்ளது.
கூட்டணி முறிவு அல்லது கூட்டணி தொடர பாஜகவுக்கு நிபந்தனை விதிப்பது பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. அதிமுக 2ம் கட்ட தலைவர்களில் ஒரு தரப்பினர் பாஜகவுடன் கூட்டணியைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்துவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
( கண்ட்ரோலே இல்லையே.. மாறி மாறி பேசும் அதிமுக தலைகள்.. அப்போ எடப்பாடி? பாஜகவும் குழம்பிடுச்சே!)
கூட்டணி இல்லை என ஜெயக்குமார் திட்டவட்டமாகக் கூறும் அதே நேரத்தில், அதிமுக - பாஜக இடையே எந்த பிரச்னையும் இல்லை என செல்லூர் ராஜு பேட்டி அளித்ததால் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பெரிய மாஜிக்கள் மாறி மாறி முறைத்து வருகிறார்களாம். பாஜகவை விரும்பாத ஒரு எம்பியும், பாஜகவை நம்பும் ஒரு எம்எல்ஏவும் மாறி மாறி முறைத்துக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.
பாஜக ஷாக்: இந்த கூட்டத்தில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் சகோதரர் நயினார் வீரபெருமாள் அதிமுகவில் இணைகிறார் என்று கூறப்படுகிறது. அதிமுக - பாஜக இடையே மோதல் உச்சமடைந்துள்ள நிலையில், நாகேந்திரனின் சகோதரர் கட்சி மாறுவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அதேபோல் தென்காசி முன்னாள் எம்பி வசந்தி முருகேசன் அதிமுகவில் இணைகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications