தமிழ்நாடு மட்டுமல்ல.. அமெரிக்க அரசியலையும் உலுக்கிய "அணில்".. கமலா ஹாரிஸுக்கு சிக்கல்.. பதறுதே!
சென்னை: தமிழ்நாட்டில் நடிகர் விஜய் ரசிகர்களை.. அணில் என்று அழைப்பது அஜித் ரசிகர்களின் வழக்கம். 2011ல் அதிமுகவிற்காக தேர்தல் நேரத்தில் அணில் போல வேலை செய்ய வேண்டும் என்று விஜய் சொன்னது அவருக்கு எதிராகவே திரும்ப.. அவரை அணில் என்று கிண்டல் செய்வது வழக்கம்.
இதையடுத்து விஜய் ரசிகர்கள்.. அஜித் பல படங்களில் நடப்பதை வைத்து ஆமை என்று பெயர் வைத்தனர். இந்த மோதல் இத்தனை காலம் நடக்க இப்போது மீண்டும் அணில் ஆமை மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த முறை ஆமை கதை சொன்னதால் சீமான் ஆதரவாளர்களை ஆமை என்று விஜய் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் தமிழ்நாட்டில் இப்போது மீண்டும் அணில் ஆமை மோதல் ஏற்பட்டு உள்ளது.

இதற்கு இடையில்தான் அமெரிக்காவிலும் அணில் விவகாரம் உச்சம் அடைந்து உள்ளது. ஆனால் அமெரிக்காவில் நடக்கும் அணில் விவகாரத்திற்கு பின் வேறு சில காரணங்கள் உள்ளன.
அமெரிக்காவில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்த "Peanut" என்ற பிரபலமான அணில் அந்நாட்டு அரசால் கொலை செய்யப்பட்டு உள்ளது. நியூயார்க் மாநில அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு.. அந்த அணில் கொலை செய்யப்பட்டது. ரேபிஸ் நோய் பாதிப்பு இருக்கலாம் என்ற அச்சம் காரணமாக அந்த அணில் கருணைக்கொலை செய்யப்பட்டது.
நியூயார்க் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறைக்கு (DEC) வந்த ரகசிய புகார்களுக்குப் பிறகு அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
"Peanut" என்ற பிரபலமான அந்த அணிலுக்கு 540,000 இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்கள் மற்றும் ரசிகர்கள் இருந்தனர். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு சில நாட்கள் உள்ள நிலையில், அந்த அணிலின் மரணம் கமலா ஹாரிஸின் ஜனநாயக கட்சிக்கு எதிராக திரும்பி உள்ளது.
அந்த அணிலின் மரணம் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மார்க் லாங்கோ என்பவர் அந்த அணிலை வளர்த்து வந்தார். கடந்த அக்டோபர் 30 அன்று, நியுயார்க் மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையின் (டிஇசி) அதிகாரிகள் மார்க் லாங்கோவின் வீட்டில் சோதனை நடத்தினர், அந்த அணியில் மற்றும் பிரெட் என்ற பெயர் கொண்ட ரக்கூன் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
நியூயார்க் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறைக்கு (DEC) வந்த ரகசிய புகார்களுக்குப் பிறகு அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். நியூயார்க் மாநில அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு.. அந்த அணில் கொலை செய்யப்பட்டது. ரேபிஸ் நோய் பாதிப்பு இருக்கலாம் என்ற அச்சம் காரணமாக அந்த அணில் கருணைக்கொலை செய்யப்பட்டது. அந்த அணில் மூலம் ஒருவர் கடிக்கப்பட்டதாக வந்த புகாரை தொடர்ந்து அந்த அணிலை கைப்பற்றி.. கொலை செய்துள்ளனர் அதிகாரிகள்.
நாட்டில் சட்ட ஒழுங்கை சரி செய்ய முடியவில்லை.. துப்பாக்கி கலாச்சாரத்தை பிடனால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் ஒரு அணிலை மட்டும் கொலை செய்கிறார் என்று பிடனுக்கு எதிராக திரும்பி உள்ளது. அந்த அணிலின் மரணம் கமலா ஹாரிஸின் ஜனநாயக கட்சிக்கு எதிராக திரும்பி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவாக இருக்கும் எலான் மஸ்க்.. இந்த விவகாரத்தில் கடுமையான கருத்துக்களை போஸ்ட் செய்து வருகிறார். நாட்டில் சட்ட ஒழுங்கை சரி செய்ய முடியவில்லை.. ஆனால் கமலா ஹாரிஸின் அதிகாரிகள் என்னவெல்லாம் செய்கிறார் பாருங்கள். ஒரு அணிலை கொலை செய்வதில் இவர்களுக்கு என்ன வந்துவிடப்போகிறது என்று விமர்சனங்களை வைத்து வருகிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications