Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'அய்யா போயிட்டான்யா'.. ரஜினியை பார்த்த உடன் உடைந்து அழுத எம்.எஸ்.பாஸ்கர்

நடிகர் மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் ரஜினியை கண்ட உடன், தேம்பி தேம்பி அழுத நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், 'அய்யா போயிட்டான்யா..!'விட்டுட்டு போயிட்டான்' என கூறினார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் ரஜினியை கண்ட உடன், தேம்பி தேம்பி அழுத நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், 'அய்யா போயிட்டான்யா..!'விட்டுட்டு போயிட்டான்' என கூறினார். அப்போது ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சிவராத்திரி நிகழ்ச்சியில் நடிகர் மயில்சாமி பங்கேற்றார். பின்னர் அங்கிருந்து திரும்பும் வழியில் நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. அவரை மருத்துவமனைக்கு உடன் வந்தவர்கள் கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

நடிகர் மயில்சாமியின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த திரைபிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். உதவும் குணம் கொண்ட நடிகர் மயில்சாமியின் மறைவு பலருக்கும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

எம்ஜிஆரின் தீவிர ரசிகரான நடிகர் மயில்சாமி, அவரைப்போலவே பலருக்கும் உதவிகளை செய்து வந்தார். அவரால் உதவி பெற்ற பலர், நேற்று அஞ்சலி செலுத்தி கண்ணீருடன் நினைவுகளை பகிர்ந்தனர். இதேபோல் பல நடிகர்கள் மயில்சாமியின் உதவும் குணத்தை பற்றி பேசியுள்ளனர். இதனிடையே மயில்சாமியின் நெருங்கிய நண்பரும் அவரோடு பல படங்களில் ஒன்றாக நடித்த மறைந்த நடிகர் விவேக் மயில்சாமியின் உதவும் குணத்தை பற்றி பேசிய பழைய வீடியோ தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

எம்ஜிஆர் டாலர்

எம்ஜிஆர் டாலர்

அந்த வீடியோவில் விவேக் எம்ஜிஆர் என்ற ஒரு மனிதரை ரோல் மாடலாக கொண்ட மயில்சாமி அவரைப் போலவே பலருக்கும் ஓடி சென்று உதவும் குணம் கொண்டவர். மயில்சாமியை பார்க்கும்போது இவர் இளிச்சவாயனா? அல்லது நல்லவரா? என்று ஒரு சந்தேகம் வரும். அப்படிப்பட்ட ஒருத்தர், தான் கஷ்டப்பட்ட காசை எல்லாம் ஒரு செயின் வாங்கி அதில் ஒரு எம்ஜிஆரின் பதக்கம் வச்சு பெரிய செயின் அதுவும் தொப்புளுக்கு கீழே வரைக்கும் தொங்கும் அந்த அளவுக்கு பெரிய செயின் அதை போட்டு இருப்பார். ஒருமுறை கடலூர் பக்கம் சுனாமி பாதிப்பின் போது ஹாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் மக்களுக்கு உதவிகளை செய்து இருக்கிறார். அதை பார்த்து நெகிழ்ந்து போன மயில்சாமி தன் பங்கிற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று விரைந்து சென்று அங்கிருந்த விவேக் ஓபராயை சந்தித்து அவருடைய கழுத்தில் தான் ஆசையாக அணிந்திருந்த எம்ஜிஆர் டாலர் பதித்த தங்க சங்கிலியை அவருடைய கழுத்தில் மாட்டிவிட்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் வந்து விட்டார். யாருக்கு உதவி செய்யணும் என்று தோன்றுகிறதோ அதை உடனே செய்து விடுவது தான் அவருடைய பழக்கம். அடுத்த நாள் சாப்பாட்டுக்கு கூட பணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இன்று இருப்பதை அனைவருக்கும் கொடுத்துவிடுவது மயில்சாமியின் குணம்.

சத்யராஜ்க்கு போன்

சத்யராஜ்க்கு போன்

இன்று பத்தாயிரம் ரூபாய் அவருக்கு சம்பளம் கிடைக்கிறது என்றால், அதை அவருக்கு இவருக்கு என எல்லோருக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு அடுத்த நாள் செலவுக்கு ஒரு ரூபாய் கூட இல்லாமல் இருப்பது மயில்சாமியின் வாழ்க்கையில் பலமுறை நடந்து இருக்கிறது. அதுபோல ஒரு புத்தாண்டு இரவு கொண்டாட்டத்தின் போது நாங்கள் எல்லோரும ஒரு இடத்தில் இருந்தோம். அப்போது அங்கே நிகழ்ச்சி ஒன்றில் ஹிந்தி பாடலுக்கு வாசித்த இசை கலைஞருக்கு தனது கையில் இருந்த மொத்த பணத்தையும் அன்பளிப்பாக கொடுத்துவிட்டு, பிறகு தனக்கு வீட்டுக்கு செல்வதற்கு ஆட்டோக்கு கூட பணம் இல்லாமல் என்னிடம் வாங்கி சென்றார். அது மட்டுமல்லாமல் யாருக்காவது படிப்புக்கு உதவி தேவை என்றால் தன்னிடம் பணம் இல்லாத நேரத்தில் நடிகர் சத்யராஜ்க்கு போன் செய்து அவரை தொந்தரவு செய்வார். அது மட்டுமல்லாமல் நடிகர் கமலுக்கு அடுத்ததாக போன் பண்ணுவார், நான் சத்யராஜ் இடம் பணம் கேட்டு இருக்கிறேன் நீங்களும் கொஞ்சம் உதவுங்கள் என்று அப்படி பலரிடமும் பணம் வாங்கி உதவி செய்யும் குணம் கொண்டவர்தான் இந்த மயில்சாமி " என நடிகர் விவேக் பேசியிருந்தார்.

சிவனின் கணக்கு

சிவனின் கணக்கு

பல்வேறு திரைபிரபலங்கள் நடிகர் மயில்சாமியின் குணம் குறித்து நேற்றும் இன்றும் பேசிய நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சென்று மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய ரஜினி, "மயில்சாமி எம்ஜி.ஆரின் தீவிர ரசிகர், சிவனின் அதி தீவிர பக்தரும் கூட. என்னுடைய நீண்டகால நண்பர். கடந்தமுறை மயில்சாமி என்னை போனில் தொடர்பு கொண்ட போது என்னால் பேச முடியவில்லை. ஒவ்வொருமுறை கார்த்திகை தீபத்தின் போது திருவண்ணாமலையில் இருந்து எனக்கு போன் செய்வார். மயில்சாமி சிவராத்திரி அன்று இறந்தது தற்செயல் கிடையாது. அது சிவனின் கணக்கு. சிவராத்திரி அன்று சிவபெருமான் தன்னுடைய தீவிர பக்தரை அழைத்து சென்று விட்டார். சிவன் கோவிலில் ரஜினி பால் அபிஷேகம் செய்வதே எனது ஆசை என்று கூறியிருக்கிறார். மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன்" என ரஜினிகாந்த் கூறினார்.

உடைந்து அழுதார்

உடைந்து அழுதார்

முன்னதாக ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்த வந்த போது, நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மிகுந்த சோகத்துடன் உடைந்து அழுதபடி இருந்தார். அப்போது ரஜினிகாந்த் அங்கிருந்தவர்களிடம் துக்கம் விசாரித்தார். திடீரென அப்போது உடைந்து அழுத எம்எஸ் பாஸ்கர், 'அய்யா போயிட்டான்யா..!'விட்டுட்டு போயிட்டானே என உடைந்து அழுதார். அவருக்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.

உடல் தகனம்

உடல் தகனம்

தொடர்ந்து மயில்சாமியின் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டு வடபழனியில் உள்ள மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது மயில்சாமியின் குடும்பத்தினர், நண்பர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலத்தின் போது பொதுமக்கள் வழி நெடுகிலும் நின்று நடிகர் மயில்சாமிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள், திரைத்துறையினர் பங்கேற்றனர். இறுதி ஊர்வலத்தில் நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், அப்பு குட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். வடபழனி மின்மயானத்தில் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+