Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பனையூரில் என்ன நடந்தது.. ஏன் கதவை பூட்டினார் விஜய்... வெளியான பரபர தகவல்!

ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார் விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் பண்ணை வீட்டு கதவு நேற்று அடைக்கப்பட்ட நிலையில், நேற்றைய ஆலோசனை கூட்டம் ஏன் ரத்தானது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

நேற்று ரசிகர் மன்ற நிர்வாகிகளை விஜய் சந்தித்து பேச உள்ளதாக சொல்லப்பட்டது.. வழக்கமாக பனையூரில் உள்ள தன்னுடைய பண்ணை வீட்டில்தான் நிர்வாகிகளை சந்தித்து பேசுவது வழக்கம்..

அதன்படியே நேற்றும் திருச்சி, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட 30 மாவட்ட நிர்வாகிகளை விஜய் சந்தித்து பேச போவதாக தகவல் வெளியானது.

காலை 11 மணிக்கே ஆலோசனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாலை 5 மணியை கடந்தும் விஜய் அங்கு வராமல் இருந்தார்.. எப்படியும் மதியத்துக்கு மேல் வந்துவிடுவார் என்பதால், நிர்வாகிகளும், ரசிகர்களும் அங்கே திரண்டு காத்திருந்தனர்.. ஆனால், ஆலோசனை கூட்டம் ரத்து என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு என்ன காரணம் என்று தற்போது சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

 விஷயம் இதுதான்:

விஷயம் இதுதான்:

புதிதாக கட்சி தொடங்கி உள்ள எஸ்ஏ சந்திரசேகரன், விஜய் ரசிகர் மன்றத்தை கட்டுப்பாட்டில் புஸ்ஸி வைத்திருக்கிறார் என்றுகூறியதுடன், பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக சொல்லி வருகிறார்.. கிரிமினல்களின் பிடியில் தன் மகன் சிக்கிஉள்ளார், இது விஜய்க்கே தெரியாது என்றும் புஸ்ஸியை தாக்கி பேசி வருகிறார்.

பனையூர்

பனையூர்

அதனால்தான் மக்கள் இயக்க பொறுப்பாளர்கள் 50 பேரை அழைத்து முதல்கட்டமாக இது சம்பந்தமாக ரகசியமாக ஆலோசனை நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளார்.. அதற்காகவே தன்னுடைய பனையூர் பங்களாவுக்கும் வரசொல்லி உள்ளார்.. அதன்படியே பொறுப்பாளர்களும் சென்றனர்.. ஆனால் இந்த விஷயம் எப்படியோ மீடியாவுக்கு தெரிந்துவிட்டது.

 சாப்பாடு

சாப்பாடு

அதனால் செய்தியாளர்கள் பண்ணை வீட்டிற்கு திரண்டு வந்துவிட்டனர்.. மீடியா வருவதை கண்டதுமே பண்ணை வீட்டு கதவுகள் காலையில் 10 மணிக்கே மூடப்பட்டுவிட்டதாம்.. 10 மணிக்கு மேல் வந்த நிர்வாகிகளும் வீட்டிற்குள் செல்ல முடியவில்லை.. அதேசமயம் விஜய்யும் அங்கு வரவே இல்லை.. நாளெல்லாம் நிர்வாகிகள் காத்திருந்தனர்.. மதிய சாப்பாடும் வெளியே இருந்து வாங்கி சாப்பிட்டுவிட்டு, அங்கேயே விஜய்க்காக காத்திருந்தனர்.

மோதல்

மோதல்

சாயங்காலம் ஆகியும் விஜய் வரவே இல்லை.. பிறகுதான் ஆலோசனை கூட்டம் ரத்து என்ற தகவல் அவர்களிடம் சொல்லப்பட்டுள்ளது.. இதற்கு காரணம் மீடியாதான்.. ரகசியமாக தன்னுடைய நிர்வாகிகளிடம் மனம்விட்டு விஜய் பேச இருந்த நிலையில், மீடியாவுக்கு தகவல் பறந்துவிட்டதாலேயே கூட்டம் ரத்து என்ற தகவலும் வெளியாகி உள்ளது.. இது ஒரு பக்கம் இருந்தாலும், அப்பா - மகன் இடையே அரசியல் மோதல் விஸ்வரூபமெடுத்துவருவதுதான் இதன்மூலமும் தெரியவருகிறது.

ரசிகர்கள்

ரசிகர்கள்


மற்றொரு பக்கம், விஜய்யின் ரசிகர்களை தன்னுடைய கட்சிக்கு வாருங்கள், எல்லாருக்கும் நல்ல பதவி தருகிறேன் என்று ஆசைவார்த்தையும் காட்டி வருகிறாராம் எஸ்ஏசி. இந்த விஷயம்தான் விஜய்க்கு தெரிந்துள்ளது.. எக்காரணத்தை கொண்டும், ஒரு ரசிகர் கூட தன் அப்பாவின் கட்சி பக்கம் போய்விடக்கூடாது என்பதற்காக ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்ய விரும்பி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+