ராதிகாவுக்கு ஏன் கொடுக்கல.. மேடையிலேயே அப்செட்டான சரத்குமார்.. எதற்காக தெரியுமா?
சென்னை: சிறந்த நடிகை என்று சொன்னால், இந்திய திரைத்துறையில் என் மனைவி தான் சிறந்த நடிகைகளில் ஒருவர், ஆனால் அவருக்கு ஏன் தேசிய விருது கொடுக்கப்படவில்லை? என்று நடிகர் சரத்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
நடிகர் சரத்குமார் குடும்பத்தில், சரத்குமார், நடிகை, ராதிகா, நடிகை வரலட்சுமி ஆகியோர் திரைத்துறையில் வேறவெலலில் கலக்கி வருகிறார்கள். நடிகை ராதிகா தற்போது குணச்சித்திர வேடங்களில், அம்மா உள்ளிட்ட வேடங்களில் நடித்து வருகிறார். பல வருடங்களாக நடித்து வரும் ராதிகாவிற்கு இதுவரை சிறந்த நடிகைக்கான தேசிய விருது தரவில்லையா என்பது தெரியவில்லை. ஆனால் அவருக்கு விருது தராதது குறித்து நடிகர் சரத்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

நடிகர் சரத்குமார் திரைப்பட விழா ஒன்றில் பேசுகையில், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். சரத்குமார் கூறுகையில், ஒரு காலக்கட்டத்தில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு கதாபாத்திரம் அமையும் போது, அதை மற்றொரு விஷயத்துடன் ஒப்பிட்டு பார்க்க முடியாது. நான் இந்த மேடையிலேயே சொல்கிறேன்.
இன்றைக்கு இருக்கிற கதாநாயகிகளில் சிறந்த நடிகை என்று சொன்னால் அது என் மனைவி ராதிகா தான். ராதிகா தான் இந்திய சினிமா துறையில் ஒரு தலை சிறந்த நடிகைகளில் ஒருவர் ஆவார். ஆனால் இன்று வரை அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது தரப்படவில்லை, ஏன் என்று கேட்கிறேன்.
வரலட்சுமியை பற்றி சொல்வதென்றால், அவர் தன்னை தயார் செய்து கொண்டார். கிரியேட்டிவ்வாக வித்தியாசமான பாதையில் பயணிக்கிறார், அது நிந்தரமாக இருக்கும் என்று தனது பாதையை தேர்வு செய்துள்ளார். சினிமாவை முழுமையாக படித்துவிட்டு நடித்துக்கொண்டிருக்கிறார் வரலட்சுமி. நான், ராதிகா, வரலட்சுமி மூன்று பேருமே ஒருவரையொருவர் மிஞ்சிக் கொண்டு நடிக்கவில்லை. நாங்கள் எங்கள் பணியை சிறப்பாக செய்கிறோம் அவ்வளவே..
அடுத்தது வந்து வெங்கட்பிரபு மற்றும் அரவிந்த்சாமியுடன் படம் பண்ணுகிறேன். சிறந்த இயக்குனர் வெங்கட் பிரபு. என் நெருங்கிய நண்பர் அரவிந்த் சாமி. எனக்கும் ராதிகாவிற்கும் திருமணம் நடந்த போது, வாழ்த்துக்களை படித்து திருமணத்தை நடத்தி வைத்தவர் அரவிந்த் சாமி. அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்து பெரிய சந்தோஷம்" இவ்வாறு சரத்குமார் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications