இந்த சனிக்கிழமை பத்திரப்பதிவுக்கு ஸ்பெசல் டே.. நிலம், வீடு வாங்க போறீங்களா.. இது உங்களுக்குதான்!
வரும் 25-ம் தேதி சனிக்கிழமையன்று தமிழகத்தில் உள்ள அனைத்து சார்ப்பதிவாளர் அலுவலகங்களும் செயல்பட வேண்டும் என்று பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: இந்த நிதியாண்டு வரும் 31ம் தேதி உடன் முடிகிறது.புதிய நிதியாண்டில், பத்திரப்பதிவு கட்டணம் உயரப்போகிறது. அதேபோல் வருமான வரி கட்டும் சிலர்வீடு வாங்கியிருப்பார்கள், அதற்கான ரிஜிஸ்ட்ரேசனை வரும் 31ம் தேதிக்குள் முடித்தால் தான் அதனை வருமான வரியில் காட்ட முடியும்.
எனவே இப்படியான 3 காரணங்களால் வரும் 25-ம் தேதி சனிக்கிழமையன்று தமிழகத்தில் உள்ள அனைத்து சார்ப்பதிவாளர் அலுவலகங்களும் செயல்பட வேண்டும் என்று பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பத்திரப்பதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்படுவதாக தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், " 01.04.2012 அன்று உயர்த்தப்பட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, 09.06.2017 அன்று முதல் ஒரே சீராக 33 சதவீதம் குறைக்கப்பட்டது.

வழிகாட்டி மதிப்பு
மேலும், விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணங்களுக்கான பதிவுக் கட்டணம் ஒரு சதவீதத்திலிருந்து நான்கு சதவீதமாக உயர்த்தப்பட்டது. சந்தை மதிப்பிற்கு ஏற்ப வழிகாட்டி மதிப்பை உயர்த்தவும், பதிவுக் கட்டணத்தைக் குறைக்கவும் பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த கோரிக்கைகளை ஏற்று, வழிகாட்டி மதிப்பில் திருத்தத்தைப் பரிந்துரைக்க ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது.

கணிசமாக அதிகரிக்கும்
இக்குழு நிலஅளவை எண் வாரியாக திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் தேவைப்படும். ஆகவே, வெளிச்சந்தையில் சொத்துகளின் மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதால், இக்குழுவின் அறிக்கை பெறும்வரை, வழிகாட்டி மதிப்பை 08.06.2017 வரை கடைபிடிக்கப்பட்டு வந்த வழிகாட்டி மதிப்பிற்கு ஈடாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. நிலம் வாங்குபவர்களின் சுமையைக் குறைக்க, பதிவு கட்டணத்தை 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

பிடிஆர் பேச்சு
இனி சொத்து விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் ஆகிய ஆவணங்களுக்கு, 8-6-2017 வரை கடைப்பிடிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பில் 5 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் சொத்து மாற்று வரி மற்றும் 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணத்திற்கு 7 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகள் எளிய, நடுத்தர மக்களுக்கு, குறிப்பாக வங்கிக் கடன் மூலம் வீடு வாங்குபவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும்" என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

இந்த வாரம் உயரும்
ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால், பத்திரப்பதிவு கட்டணம் பிடிஆர் அறிவித்த நடைமுறையால் அதிகரித்துள்ளது. இந்த உத்தரவு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரப்போகிறது. எனவே பத்திரப்பதிவினை பலரும் இந்த வாரத்தில் முடிக்க வாய்ப்பு உள்ளது.

நிலம் வாங்குவோர்
அதேபோல் புதிய வழிகாட்டி மதிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. எனவே புதிய வழிகாட்டு மதிப்பு அறிவித்தால், பத்திரப்பதிவு கட்டணம் இப்போது உள்ளதை விட பெரிய அளவில் அதிகரிக்கும். எனவே நிலம் வாங்க விரும்புவோர், வீடு வாங்க விரும்புவோர் இந்த 10 நாட்களுக்குள் செய்தால் பத்திரப்பதிவு கட்டணம் கணிசமாக குறைவாக இருக்கும். ஆனால் ஏப்ரல் மாதத்தில் செய்தால் கணிசமாக உயர்ந்துவிடும்.

மக்கள் ஆர்வம்
இதேபோல் வருகிற மார்ச் மாதத்துடன் 2022-2023-ம் நிதி ஆண்டு முடிவடைகிறது. வழக்கமாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 01-ம் தேதி தொடங்கும் புதிய நிதி ஆண்டில், நில மதிப்புகள் 5% வரை கணிசமாக உயரும் என்பதாலும், ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்பே வீடு வாங்கி இருந்தால் தான் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது காட்ட முடியும் என்பதாலும் மக்கள் பத்திரப்பதிவு செய்ய இந்த மாதம் இறுதி வரை ஆர்வம் காட்டுவார்கள்.

அமைச்சர் உத்தரவு
எனவே தான் வரும் 25-ம் தேதி சனிக்கிழமையன்று தமிழகத்தில் உள்ள அனைத்து சார்ப்பதிவாளர் அலுவலகங்களும் செயல்பட வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிக வரித்துறை அலுவலகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் துணை பதிவுத்துறை தலைவர்களின் ஆய்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர்,வரும் நாள்களில் பத்திரப் பதிவுக்கு ஆவணங்கள் மிக அதிகமாக எதிர்பார்க்கப்படுவதால் டோக்கன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் வரும் 25ம் தேதி சனிக்கிழமையும் தமிழகம் முழுவதும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் செயல்படவேண்டும் என்றும் அமைச்சர் உத்தரவிட்டார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications