விஜய் பயன்படுத்தும் எல்லா வாகனங்களுக்கும் ஒரே எண்கள்.. பின்னணியில் இருக்கும் உருக்கமான காரணம்!
சென்னை: விஜய் குறித்து தினமும் ஏதேனும் செய்திகள் பரவி வரும் நிலையில் தற்போது விஜய் பயன்படுத்தும் கார்களின் எண்கள் பற்றிய ஒரு தகவல் பரவி வருகிறது. விஜய் பயன்படுத்தும் எல்லா வாகனங்களுக்கும் 0277 என்ற ஒரே எண்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பது குறித்தும், இதற்கு பின்னால் இருக்கும் உருக்கமான காரணம் குறித்த தகவலும் பரவி வருகிறது.
தமிழ் திரையுலகின் டாப் நடிகர்களில் ஒருவராகவும் அரசியல் தலைவராகவும் உருவெடுத்துள்ள விஜய்யிடம் பிஎம்டபிள்யூ, ரோல்ஸ் ராய்ஸ் என 10 க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் உள்ளன. அரசியலுக்கு வந்த பிறகு தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியாகவும் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வரும் விஜய், சமீப நாட்களாக செய்திகளில் அடிபடாத நாளே இல்லை என்ற அளவிற்கு அவரைப்பற்றிய தகவல்கள் வலம் வருகின்றன.

விஜய்யிடம் உள்ள கார்கள்
ஜனநாயகன் பட ரிலீஸ் பிரச்சினை, மனைவி சங்கீதா விவகாரத்து கோரிய விவகாரம், சிபிஐ விசாரணை என அடுத்தடுத்து நெருக்கடிகளை சந்தித்து வருகிறார் விஜய். இவரைப்பற்றி சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ஏதாவது ஒரு தகவல் பரவிக்கொண்டே இருக்கும். அந்த வகையில், விஜய் பயன்படுத்தும் கார்களின் எண்கள் பற்றிய ஒரு தகவல் பரவி வருகிறது.
அதாவது, விஜய் தன்னிடம் உள்ள கார்கள் அனைத்திற்கும் 0277 என்று ஒரே விதமான எண்களையே பயன்படுத்தி வருகிறார். விஜய்யிடம் பிஎம்டபிள்யூ, லெக்ஸஸ், ரோல்ஸ் ராய்ஸ், டொயோட்டா நிறுவனத்தின் வெல்ஃபைர் என பல்வேறு சொகுசு கார்களையும் பிரசாரத்திற்கு என தனியாக பேருந்து, வேன்களையும் வைத்துள்ளார்.
ஒரே மாதிரியான எண்கள்
இந்த அனைத்திற்குமே ஒரே மாதிரியான வாகன எண்களே உள்ளன. உதாரணத்திற்கு விஜய்யின்
* பிஎம்டபிள்யூ காரின் எண் - TN 14 AH 0277,
* லெக்ஸஸ் - TN 14 AL 0277 ,
* டொயோட்டா வெல்ஃபைர் கார் - TN 14 AM 0277,
* பிரசார பேருந்துக்கு - TN 14 AS 0277 என்ற வாகன பதிவு எண்களே உள்ளன.
மிகவும் எமோஷனலாக பாதித்தது
சொகுசு கார்கள் முதல் பிரசார வாகனங்கள் வரை அனைத்திற்கும் இந்த எண்களையே விஜய் பயன்படுத்தி வரும் நிலையில், இதற்கு பின்னால் நெகிழ்ச்சியான ஒரு காரணம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
இது தொடர்பாக அவரது ரசிகர்கள் மத்தியில் ஒரு பேச்சு எழுந்து வருகிறது. விஜய்யின் வாழ்க்கையில் 14.02.77 என்ற எண் மிகவும் எமோஷனலாக நெருக்கமான எண்ணாக உள்ளதாம். ஏனெனில் விஜய்யின் தங்கை வித்யா பிறந்த நாள் என்பதால் இந்த நாளை விஜய் மறக்காமல் வைத்து இருக்கிறார். தனது அன்பு தங்கை வித்யா இளம் வயதில் இறந்துவிட்டாலும் அவரை பற்றிய உருக்கமான நினைவுகளை சுமந்து வரும் விஜய், இந்த நாளின் நினைவாக தனது வாகனங்களுக்கு இதே எண்ணை பயன்படுத்தி வருவதாக சொல்கிறார்கள்.
மகளுக்கு பெயர் வைத்தது கூட இதற்கு தான்
விஜய் இதற்கு முன்பாக பல பேட்டிகளிலும் தனது தங்கை குறித்து உருக்கமாக பல முறை பேசியுள்ளார். விஜய்யின் தங்கை வித்யா தன்னுடைய மூன்றரை வயதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். எனது வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய விஷயம், தங்கை வித்யாவின் உயிரிழப்புதான். அதிலிருந்து மீள்வது கடினம். ஆனால் ஒன்று எனது தங்கையை நாங்கள் புதைக்கவில்லை.
விதைத்திருக்கிறோம். அதனால்தான் எனக்கு இவ்வளவு தங்கைகள் இருக்கிறார்கள்" என்று தனது தங்கை வித்யா குறித்து விஜய் உருக்கமாக நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். தனது மகளுக்கு திவ்யா ஷஷா என்று பெயரிட்டதும் கூட வித்யா பெயரின் நினைவாகத்தான் என்று விஜய்யின் தாயார் சோபா பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை.. ஜூலையில் கூடும் சட்டசபை? பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வரும்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன?












Click it and Unblock the Notifications