செந்தில் பாலாஜியின் ராஜினாமா பாஜகவிற்கு கிடைத்த வெற்றி.. கொண்டாடும் அண்ணாமலை.. காரணம் என்ன?
சென்னை: செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது பாஜகாவிற்கு கிடைத்த வெற்றி என்று அண்ணாமலை கூறியுள்ளார். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தால் மட்டுமே ஜாமின் கிடைக்கும் என்று அண்ணாமலை கூறியிருந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் செந்தில் பாலாஜி. இதனையே தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று கொண்டாடுகிறார் அண்ணாமலை.
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்று செந்தில் பாலாஜி படாத குறையாக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என தொடர் சோதனைகளாக இருக்கிறது. தலைமறைவான அவரது தம்பியை தேடி வருகின்றனர். சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 15ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்தாலும் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் செந்தில் பாலாஜி. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று சொல்வது போல கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கம்பீரமாக வலம் வந்தவர் தற்போது நீதிமன்றத்திற்கும் புழல் சிறைக்கும் அலைந்து கொண்டிருக்கிறார். கூடவே உடல் நலக்குறைபாடும் வாட்டி வதைக்கிறது. இதய அறுவை சிகிச்சை செய்த நிலையில் கால் வலியும் இருப்பதாக கூறி வருகிறார் செந்தில் பாலாஜி.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 19வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நீட்டிக்கப்பட்டது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுக்கள் சென்னை முதன்மை நீதிமன்றம், உயர்நீதிமன்றமும் நிராகரித்தது.
இதனிடையே, அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு பின்னர் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்ந்து நீடித்து வந்தார். அவர் வகித்து வந்த பொறுப்பு மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமிக்கும் பிரித்து கொடுக்கப்பட்டது.
இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வந்த செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். முன்பு ஜாமின் மனு மீதான விசாரணையின்போது, அமைச்சர் பதவி குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பியிருந்தார். கடைநிலை ஊழியர் ஒருவர் குற்ற வழக்கில் 48 மணி நேரம் சிறையில் இருந்தாலே உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுகிறார்.
ஆனால், செந்தில் பாலாஜி கடந்த 243 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். எந்த அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக பதவியில் நீடிக்கிறார்? இதன்மூலம் சமூகத்துக்கு அரசு என்ன சொல்ல வருகிறது என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில், புழல் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வரும் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, அந்த கடிதத்தை முதல்வருக்கு அனுப்பி வைத்தார். அதில், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுகிறேன் என கூறியிருந்தார். இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
அதன்படி, முதலமைச்சர் முக ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று செந்தில் பாலாஜியின் ராஜினாமா கடிதத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார் ஆளுநர்.
இதனிடையே செந்தில் பாலாஜியின் ராஜினாமா பாஜகவிற்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார் அண்ணாமலை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்காமல் இருப்பது பற்றி கருத்து கூறிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, அவர் தமிழக அமைச்சராக நீடிப்பதால்தான் ஜாமின் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் நீக்க வேண்டும் என்று கூறிய அண்ணாமலை, அப்போதுதான் அவருக்கு ஜாமின் கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளது பாஜகவிற்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!











Click it and Unblock the Notifications