"செங்கல் கூட..” அண்ணாமலை லுலு மால் மேட்டரில் “சைலண்ட்” ஆனது ஏன்? திமுக எம்பி செந்தில்குமார் கேள்வி
சென்னை: லுலு மால் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது என்று பேசிய அண்ணாமலையிடம், அமைதியான காரணம் என்ன என்று திமுக எம்பி செந்தில் குமார் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் அரசு முறை பயணமாக துபாய் சென்றார். அங்கு தொழிலதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அவர் தமிழ்நாட்டிற்கான முதலீடுகளை ஈர்த்தார். அதில் குறிப்பாக லுலு இண்டெர்நேஷனல் குழுமம் தமிழ்நாட்டில் ரூ.3,500 கோடியை முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது.

சர்வதேச அளவில் ஹைபர் மால்களை நடத்தி வரும் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் யூசுப் அலிக்கு சொந்தமான லுலு குழுமம் கேரளாவின் கொச்சின் உட்பட உலகளவில் சுமார் 22 நாடுகளில் 230 க்கும் அதிகமான பிரம்மாண்ட ஹைபர் மால்களை நடத்தி வருகிறது. இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் பெரிய மால்களை கட்ட இந்த குழுமம் திட்டமிட்டு இருக்கிறது.
அதன்படி தமிழ்நாட்டின் கோவையில் புதிய மால் ஒன்றை லுலு குழுமம் தொடங்க முடிவு செய்து இருக்கிறது. அப்போது, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் லுலு ஹைபர் மால் தொடங்க எதிர்ப்பு தெரிவித்தார். சிறு வணிகர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் எனக்கூறிய அவர், இந்த விவகாரத்தில் சிறுவணிகர்களுக்கு ஆதரவாக பாஜக இருக்கும் என்றார்.
லுலு மாலின் ஒரு செங்கல்லை கூட தமிழ்நாட்டில் வைக்க பாஜக அனுமதிக்காது எனவும் அவர் பேசினார். அண்ணாமலை இவ்வாறு கூறிய நிலையில் லூலு மாலின் கட்டுமானப் பணிகள் கடந்த ஓராண்டாக கோவையில் நடைபெற்று வந்தது. ஆனால், பாஜக தரப்பில் அந்த கட்டுமானப் பணிக்கு எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை.
ஓர் வருடத்திற்கு முன் தமிழகத்தில்
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) June 18, 2023
Lulu mall ஒரு செங்கலை கூட வைக்க முடியாது என்று வீர வசனம் பேசிய திரு.அண்ணாமலையிடம்
Lulu mall கோவையில் திறக்கப்பட்டுள்ள சூழலில்
அதற்க்கு பின் அதை பற்றி வாய் திறக்காத காரணம் என்ன என்று அடுத்த பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்டு பதில் பெற்று தரவும்.
கோவை லட்சுமி மில் பகுதியில் லுலு மால் கட்டுமானப் பணிகள் தொடங்கி துரிதமாக நடைபெற்றன. கடந்த பிப்ரவரி மாதமே கோவை லுலு மாலின் புகைப்படங்கள் வெளியாகின. ஆனால், அறிவிப்பு வெளியானபோது எதிர்ப்பு தெரிவித்த அண்ணாமலையை அப்போது எந்த எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை.
இந்த நிலையில் 1.20 லட்சம் சதுர அடி பரப்பளவில் லுலு ஹைபர் மார்க்கெட் கட்டுமான பணி முழுமையாக நிறைவடைந்துவிட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் கோவையில் லுலு ஹைபர் மார்க்கெட்டை தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா திறந்து வைத்தார்.
அப்போதும் அண்ணாமலை தரப்பிலோ, பாஜக தரப்பிலோ எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இதுபற்றி திமுக எம்பி செந்தில் குமார் ட்விட்டரில், "ஓர் வருடத்திற்கு முன் தமிழகத்தில் லுலு மால் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது என்று வீர வசனம் பேசிய திரு.அண்ணாமலையிடம் லுலு மால் கோவையில் திறக்கப்பட்டுள்ள சூழலில் அதற்க்கு பின் அதை பற்றி வாய் திறக்காத காரணம் என்ன என்று அடுத்த பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்டு பதில் பெற்று தரவும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!











Click it and Unblock the Notifications