மிகப்பெரும் பொறுப்பு.. முக்கிய அசைன்மென்டுடன் களமிறங்கும் உளவுத்துறை எஸ்.பி-2.. பெரிய பிளான்?!

சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் உளவுத்துறைக்கு கூடுதலாக ஒரு எஸ்.பி. நியமனம் செய்யப்பட்டது இருப்பது அதிக கவனம் பெற்றுள்ளது. அதோடு பல முக்கியமான பொறுப்புகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளதும் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. முறையான திட்டத்தோடுதான் உளவுத்துறைக்கு கூடுதலாக ஒரு எஸ்.பி. நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Recommended Video

    முக்கிய பொறுப்புடன் களமிறக்கப்பட்ட உளவுத்துறை எஸ்.பி 2

    தமிழ்நாட்டில் புதிய அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே உளவுத்துறை மீது தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. உளவுத்துறையில் புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும். திறமைமிக்க முக்கிய அதிகாரிகளை கொண்டு வர வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு கவனமாக உள்ளது.

    தமிழ்நாடு உளவுத்துறையில் ஐஜி பொறுப்பு காலியாக உள்ளது. டி.ஐ.ஜி.யாக ஆசியம்மாள், எஸ்.எஸ்.பி.யாக அரவிந்தன், உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் ஆகியோர் இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் உளவுத்துறை கூடுத

    ஏன் முக்கியம்?

    ஏன் முக்கியம்?

    தமிழக போலீஸ் வரலாற்றில் உளவுத்துறைக்கு கூடுதலாக ஒரு எஸ்.பி. நியமிக்கப்படுவது இதுதான் முதல் தடவை. இப்படி ஒரு போஸ்டிங் உருவாக்கி, அதற்கு எஸ்பியாக சரவணன் நியமிக்கப்பட்டு இருப்பது காவல்துறை வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. இவருக்கான பொறுப்புகள் என்னென்ன என்று டிஜிபி தரப்பில் இருந்தும் விளக்கமாக உத்தரவு வெளியிடப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட பெரும் பொறுப்புகளோடு கூடுதல் எஸ்.பியாக சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    முக்கிய பணிகள் காத்திருக்கும் பொறுப்பு

    முக்கிய பணிகள் காத்திருக்கும் பொறுப்பு

    உளவுத்துறையில் முக்கிய பணிகளில் எவைகள் எல்லாம் கண்காணிக்கப்பட வேண்டுமோ, கிட்டத்தட்ட அந்த பணிகளில் பல எஸ்பி 1 மற்றும் எஸ்பி 2 இடையே பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது எஸ் அரவிந்தன், எஸ்பி சரவணன் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இதில் புதிய கூடுதல் எஸ்பிக்கு பல முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அரசு தொடர்பான உளவு ரிப்போர்ட்களை இனி இவர்கள்தான் தயார் செய்வார்கள். அதோடு உளவுத்துறை யூனிட் அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவுகளை இனி இவர்கள் கவனிப்பார்கள். விஐபி, விவிஐபி நபர்களுக்கு பாதுகாப்பு மேற்கொள்வது, அவர்களுக்கு ஆபத்து உள்ளதா என்பதை கணித்து ரிப்போர்ட் அளிக்கும் பணியை இவர்கள் கவனிப்பார்கள்.

    முக்கிய பணிகள்

    முக்கிய பணிகள்

    இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்றால் அது அரசியல்தான். அரசியல் தொடர்பான உளவு தகவல்கள், பாதுகாப்பு தகவல்கள் அனைத்தையும் எஸ்பி 2 கவனித்துக்கொள்வார். முக்கியமாக அரசியல் கட்சித் தலைவர், முக்கியஸ்தர்களின் பர்சனல் விவரங்கள் அடங்கிய கோப்புகளை இவர்தான் இனி கண்காணிப்பார். அரசியல் ரீதியான மோதல்கள் குறித்து உளவு ரிப்போர்ட் கொடுப்பது, யாருக்கு யார் உறவு, எதிரி என்பது குறித்து கண்காணிப்பது. அரசியல் மோதல்களை முன்கூட்டியே கண்காணித்து அரசுக்கு ரிப்போர்ட் தருவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்.

    அரசியல்

    அரசியல்

    அதாவது அரசியல் ரீதியாக மிகப்பெரிய உளவுத்துறை பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. சட்டசபை நிகழ்வுகள் தொடர்பான ரிப்போர்ட்கள், அது தொடர்பான உளவுத்தகவல்கள் ஆகியவற்றை இனி எஸ்பி 1 கவனித்துக்கொள்வார். ஸ்பெஷல் சிஐடியின் கண்ட்ரோல் ரூமை இனி எஸ்பி 1 அரவிந்தன் கட்டுப்பாட்டில் இருக்கும் . ஜாதி மத ரீதியான மோதல்கள் குறித்த ரிப்போர்ட் தயாரிப்பது, அதை கண்காணித்து உளவு ரிப்போர்ட் கொடுப்பது ஆகிய பணிகளை இரண்டு எஸ்பிக்களும் மேற்கொள்வார்கள்.

     முதல்வர்

    முதல்வர்

    முதல்வர் சட்டசபையில் அறிவிக்க போகும் பல்வேறு பதில்கள் தொடர்பான கோப்புகளுக்கான தகவல்களை அனுப்பும் பொறுப்பும் புதிய எஸ்.பி.2 வுக்கு வழங்கப்பட்டுள்ளது. முதல்வரின் அறிவிப்புகளை ஆங்கிலத்தில் வெளியிடும் பொறுப்பும் இவருக்கு கீழ்தான் உள்ளது. இதெல்லாம் போக மீடியாக்களில் வரும் செய்திகளை கவனிப்பது, மீடியாக்களுக்கு ரிப்போர்ட் அனுப்பவது உள்ளிட்ட மீடியா கண்காணிப்பு ரீதியான பணிகளையும் உளவுத்துறை எஸ்.பி -2 தான் இனி கவனிக்க போகிறார்.

    எப்படி

    எப்படி

    ஒருபக்கம் கண்ட்ரோல் ரூம் உள்ளிட்ட, நான்கு மண்டல உளவுத்துறை பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியமான பல பிரிவுகளை எஸ்பி 1 எப்போதும் போல கவனிப்பார். இன்னொரு பக்கம் அரசியல், மீடியா உள்ளிட்ட உளவுத்துறை கண்காணிப்பு பணிகள் எஸ்பி-2க்கு வழங்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவல்கள் சரியாக இல்லை, முறையாக தரப்படுவது இல்லை என்று கடந்த சில வாரங்களாக பேச்சுக்கள் அடிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்துதான் இப்போது கூடுதலாக எஸ்பி கூடுதல் அதிகாரத்துடன் நியமிக்கப்பட்டு உள்ளார். இவரின் பதவி இன்னொரு விஷயத்திற்காகவும் கவனிக்கப்படுகிறது.

    உளவுத்துறை

    உளவுத்துறை

    பொதுவாக உளவுத்துறையில் ஏடிஜிபி போன்ற உயர் அதிகாரிகள் பலர் இருந்தாலும் எஸ்எஸ்பி என்றழைக்கப்படும் எஸ்.பி பதவிக்குதான் நிறைய தகவல்கள் கிடைக்கும். இவர்களுக்குத்தான் பொறுப்பும், அணுகுதலும் அதிகம்.ஏனென்றால் உள்ளூர் அளவில் தகவல்கள், நிகழ்வுகள் குறைத்த ரிப்போர்ட்கள் எல்லாம் இவர்களுக்கே கிடைக்கும். இப்படி ஒரு பொறுப்பிற்குதான் கூடுதலாக எஸ்பி நியமனம் செய்யப்ப்பட்டுள்ளார். அதோடு இவர் கூடுதல் அதிகாரத்துடன் நியமிக்கப்பட்டு இருப்பது அதிக கவனம் பெற்றுள்ளது. அரசு பெரிய திட்டத்தோடு இவரின் நியமனத்தை மேற்கொண்டு இருக்கலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+