தவறா இருக்கு.. அப்செட்.. தீவிர பாஜக ஆதரவாளர்களே கோவப்படுறாங்களே! கலங்கடித்த பட்ஜெட்.. பெரிய ட்விஸ்ட்
சென்னை: மத்திய அரசின் பட்ஜெட் காரணமாக தீவிரமான பாஜக ஆதரவாளர்களே கடுமையான விமர்சனங்களை வைக்க தொடங்கி உள்ளனர். அரசின் பட்ஜெட் மோசமாக உள்ளதாக கூறி கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
மத்திய அரசு 2024 மத்திய பட்ஜெட்டில் வரி விதிப்பு முறைகளில் மாற்றங்களை செய்து உள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி விதிப்பில் புதிய மாற்றங்களை செய்துள்ளார். ட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ள வருமான வரி மாற்றம் புதிய வருமான வரி முறையை தேர்வு செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மாத ஊதியம் பெறுவோருக்கு நிரந்தர கழிவு ரூ50,000-ல் இருந்து ரூ75,000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் - ரூ7 லட்சம் பெறுவோருக்கு 5% வரி விதிக்கப்படும்.
ஆண்டு வருமானம் ரூ. 7 லட்சம் - ரூ10 லட்சம் பெறுவோருக்கு 10% வரி விதிக்கப்படும்.
ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சம் - ரூ12 லட்சம் பெறுவோருக்கு 15% வரி விதிக்கப்படும்.
ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சம் - ரூ15லட்சம் பெறுவோருக்கு 20% வரி விதிக்கப்படும், என்று சிறிய அளவிலான மாற்றங்களே செய்யப்பட்டு உள்ளன.

அதிக வரி: வருமான வரி (வருமான வரி) மற்றும் கார்ப்பரேட் வரி என இரண்டு கூறுகளைக் கொண்ட நேரடி வரிகளில் இந்தியா தொடர்ந்து உயர்வை கண்டு வருகிறது. இதில் கவலை அளிக்கும் விஷயம் 2022-2023ல் கார்ப்பரேட் வரிகளை முந்தி உள்ளது தனிநபர் வருமான வரி. கார்ப்பரேட் நிறுவனங்களை விட, பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், வரிகளில் அதிக பங்களிப்பு செய்கின்றனர்.

அதாவது நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறீர்கள். நீங்கள் வரி செலுத்துவீர்கள். உங்கள் நிறுவனம் வரி செலுத்தும். உதாரணமாக உங்களின் வருமானம் 2 லட்சத்திற்கு நீங்கள் செலுத்தும் வரியை விட.. உங்கள் நிறுவனம் செலுத்தும் வரி குறைவாக இருக்கும். வரி அடிப்படை அதிகமாக இருக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கார்ப்பரேட் வரியை விட வருமான வரி குறைவு. அமெரிக்காவில் 43% மக்கள் வரி செலுத்துகிறார்கள், இந்தியாவில் 2% பேர் வரி செலுத்துகிறார்கள்.

ஜிஎஸ்யை விட அதிகம்: 2019-ல் கார்ப்பரேட் வரியை அரசாங்கம் குறைத்துள்ளது, இதனால் ஆண்டுக்கு ரூ. 1.44 லட்சம் கோடி இழப்பு ஏற்படுகிறது. 2020 முதல் 2023 நிதியாண்டு வரை, கார்ப்பரேட் லாபம் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019ம் ஆண்டு கார்ப்ரேட் வரியை மத்திய அரசு குறைத்த நிலையில், 2023-24ம் நிதியாண்டில் அரசுக்கு ரூ.922,675 கோடி கார்ப்ரேட் வரியாகவும், ரூ.1,022,325 கோடி தனி நபர் வருமான வரியாகவும் கிடைத்தது. மக்கள் தொகையில் 2% உள்ள வருமான வரி செலுத்துவோர், கார்ப்ரேட்களை விட அதிக வரியை செலுத்துகிறார்கள்.

தனிநபர் வருமான வரி (30%) கார்ப்பரேட் வரியை (27%) விட அதிகமாகவும், ஜிஎஸ்டியை விட (28%) அதிகமாகவும் உள்ளது.
மூலதன ஆதாய வரி: இது போல நீண்ட கால மூலதன ஆதாய வரியில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.சொத்துகள் மீதான நீண்ட கால மூலதன ஆதாய (எல்டிசிஜி) வரியை 12.5% ஆகக் குறைத்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தனது பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார். ஆனால், சொத்து விற்பனையின் போது அதன் மதிப்பை கூட்டிக்காட்ட LTCG வரிக் கணக்கீட்டிற்கான குறியீட்டை நீக்கியுள்ளார். இதனால் வரும் காலங்களில் நீங்கள் சொத்துக்களை விற்கும் போது அதனால் பாதிக்கப்படுவீர்கள்.

பாஜக அப்செட்: இந்த அதீத வரி விதிப்பு காரணமாக மத்திய அரசின் பட்ஜெட் காரணமாக தீவிரமான பாஜக ஆதரவாளர்களே கடுமையான விமர்சனங்களை வைக்க தொடங்கி உள்ளனர். அரசின் பட்ஜெட் மோசமாக உள்ளதாக கூறி கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
நாங்கள் இத்தனை காலம் மோடிக்கு வாக்களித்தோம். இனி வாக்களிக்க மாட்டோம். இந்த வருமான வரி உயர்வை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. வாங்கும் சம்பளத்திற்கு வரி வாங்குகிறீர்கள். அதன்பின் வாங்கும் பொருட்களுக்கும், சொத்துக்களுக்கு ஜிஎஸ்டி வாங்குகிறார்கள், அதை விற்கும் போது சொத்துக்களுக்கு வரி விதிக்கிறார்கள்.
இந்த கொடுமையை ஏற்க முடியாது என்று தீவிர பாஜக ஆதரவாளர்களே கமெண்ட் அடிக்க தொடங்கி உள்ளனர் .












Click it and Unblock the Notifications