ஒரு வார்த்தை கூட சொல்லாத.. மணியான டீம்! அதிர்ந்து நின்ற எடப்பாடி.. இதை எதிர்பார்த்து இருக்க மாட்டாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சம் அடைந்து உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் கடுமையாக போர்க்கொடி தூக்கி உள்ளார். கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளார். ஆனால் செங்கோட்டையன் நீக்கத்திற்கு ஆதரவாக.. அதாவது எடப்பாடியை ஆதரித்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் யாரும் பேசாமல் அமைதியாகி உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் செங்கோட்டையன் திடீரென கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தார். அதில், எம்ஜிஆர் தொடங்கிய காலத்தில் இருந்தே அதிமுகவில் இருக்கிறேன். எம்ஜிஆரின் செல்வாக்கு நாடே வியக்கத்தக்க அளவில் இருந்தது. எம்ஜிஆர் வழியில் என்றும் செயல்படுபவன் நான். அதிமுகவிற்கு மாபெரும் வெற்றிகளை ஈட்டித்தந்த தலைவர் எம்ஜிஆர். என்னை அழைத்து மனதார பாராட்டி புகழ்ந்தவர் எம்ஜிஆர்.

Edappadi Palaniswami

செங்கோட்டையன் எடப்பாடி பேச்சு

இப்போது அதிமுக தொடர் தோல்விகளை தழுவி வருகிறது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை, உடனே சேர்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் காலக்கெடு விதித்தார். அதோடு, கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை தான் நீக்குவதாக எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறாரே என கேட்டபோது 2009 ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்களால் அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கப்பட்டு இருக்கிறார்.

பத்து நாட்களில் கழகத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்க்கப்படவில்லை என்றால் அவர்களுடன் சேர்ந்து கட்சியை ஒருங்கிணைக்கும் வேலைகளில் ஈடுபடுவேன் என செங்கோட்டையன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

செங்கோட்டையன் சந்திப்பு

இந்த நிலையில் கடந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு டி.டி.வி.தினகரன், செங்கோட்டையன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எடப்பாடி பழனிசாமி தான் எங்களின் எதிரி என்று டிடிவி தினகரன், ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் இணைந்து பேட்டி கொடுத்துள்ளனர். துரோகத்தை வீழ்த்தவே நாங்கள் மூவரும் இணைந்துள்ளோம் என்று கூறிய டிடிவி தினகரன், சசிகலா வருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஊடகங்களிடம் பேசிய டிடிவி தினகரன், எங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமே பழனிசாமிதான். துரோகத்தை வீழ்த்தவே அமமுக தொடங்கப்பட்டது. அந்த துரோகத்தை வீழ்த்தும் வரை அமமுக ஓயாது. துரோகத்தை வீழ்த்தி ஜெயலலிதா ஆட்சியை உருவாக்கவும், ஜெயலலிதாவின் தொண்டர்களை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஒன்றிணைந்துள்ளோம், என்று டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

கட்சியில் இருந்து நீக்கம்

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் எனப் போர்க்கொடி தூக்கிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பதவிகளை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்தார். மேலும், செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனை அதிரடியாக நீக்கினார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

ஆனால் செங்கோட்டையன் நீக்கத்திற்கு ஆதரவாக.. அதாவது எடப்பாடியை ஆதரித்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் யாரும் பேசாமல் அமைதியாகி உள்ளனர். முக்கியமாக எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமாக பார்க்கப்படும் கட்சியின் மூத்த நிர்வாகிகளான.. மணியான குழுவினர் யாரும் எடப்பாடியை ஆதரித்தும்.. செங்கோட்டையனை எதிர்த்தும் பேசவில்லை.

இன்று செங்கோட்டையன் பேசுகையில் கூட.. கட்சியில் மூத்த தலைகள் என்னுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்று வெளிப்படையாக கூறி உள்ளார். மணியான குழுவினர் யாரும் இதில் வாய் திறக்காமல் இருப்பது எடப்பாடி தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+