அப்போ அண்ணாமலை? திடீரென டாமினேட் செய்யும் தமிழிசை - எச். ராஜா.. பழைய கைகளுக்கு பவர்? கவனிச்சீங்களா?
சென்னை: பாஜகவில் இருக்கும் மூத்த தலைவர்கள் மீண்டும் ஊடகங்களில் தோன்றி செய்தியாளர்களை சந்திக்க தொடங்கி உள்ளனர். அதிலும் இன்று கொடுக்கப்பட்ட பிரஸ் மீட்கள் கவனம் பெற்றுள்ளன.
இன்று தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் மையக்குழு ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. தேர்தலுக்கு பின் நடைபெறும் முதல் மையக்குழு கூட்டம் ஆகும் இது. தேர்தல் படுதோல்வி தொடர்பாக இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த மீட்டிங் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் தமிழ்நாடு பாஜகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் தொடர்பாக கட்சியின் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனனிடம் தமிழிசை புகார் அளித்துள்ளார் . சமூக வலைதளங்களில் பாஜக நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கருத்துகள் பதிவிடுவதை தடுக்க வேண்டும் என கட்சியின் மையக் குழு கூட்டத்தில் அவர் வலியுறுத்தியும் உள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு: இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜகவில் இருக்கும் மூத்த தலைவர்கள் மீண்டும் ஊடகங்களில் தோன்றி செய்தியாளர்களை சந்திக்க தொடங்கி உள்ளனர். அதிலும் இன்று கொடுக்கப்பட்ட பிரஸ் மீட்கள் கவனம் பெற்றுள்ளன.
தமிழிசை, எச். ராஜா உள்ளிட்ட பழைய கைகள்தான் இன்று பேட்டி கொடுத்தனர். அதன்படி கட்சி நிர்வாகிகள் மீது எனக்கு எந்த வேற்றுமையும் இல்ல... நான் எல்லாரையும் மதிக்கிறேன். எல்லோரும் இணைந்து தான் பணியாற்றி கொண்டிருக்கிறோம் என்று விமர்சனங்களுக்கு தமிழிசை விளக்கம் அளித்தார்.
அதேபோல் யார் நினைத்தாலும் நீட்டை தவிர்க்க முடியாது இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு; பிரச்னைகள் களையப்பட வேண்டும் என்றுதான் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. நீட் தேர்வை பொதுமக்கள் ஏற்றுக் கொண்டார்கள்; நீட் தேர்வில் சில குளறுபடிகள் நடந்துள்ளது; அந்த குளறுபடிகள் தடுக்கப்படும் என மத்திய அரசு தெளிவாக சொல்லி உள்ளது; தமிழ்நாட்டில் நீட் தேர்வு மூலமாக பல பேர் பயனடைந்து வருகிறார்கள், என்று தமிழிசை, எச் ராஜா கூட்டாக பேட்டி அளித்தனர்.
ஆனால் அண்ணாமலை கூட்டத்திற்கு பின் பேட்டி கொடுக்கவில்லை. திடீரென அண்ணாமலை ஏன் பேட்டி கொடுக்கவில்லை. அவர் பேட்டி கொடுக்காமல் தவிர்த்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
,மோதல்; தமிழ்நாட்டில் அண்ணாமலை - தமிழிசை சௌந்தரராஜன் இடையே மோதல் நிலவி வருகிறது. தமிழ்நாட்டின் பாஜக செயல்பாடு குறித்து மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார். அதில்., நான் கட்சிக்காக கடுமையாக உழைக்க கூடியவர்கள். நான் உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன். எச்சரிக்கிறேன்.
தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன். நான் இங்கேதான் இருப்பேன்.
ஆளுநர் பணியை விட்டு நான் ஏன் இங்கே பணிகளை செய்கிறேன் என்றும் சிலர் அப்படி இப்படி பேசுகிறார்கள். கட்சியினருக்கே கேட்கிறேன். ஆளுநர் பணியை விட்டு விட்டு வந்ததற்கு நானே கவலைப்படவில்லை. உங்களுக்கு என்ன கவலை?.
இன்னொன்று நாங்கள் எல்லாம் 2 இடம் வரக்கூடியவர்கள் இல்லை.. வியூகம் அமைத்து கூட்டணி அமைத்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்.. தேர்தலில் வியூகம் அமைத்தால்தான் வெற்றி பெறலாம். தேர்தல் கூட்டணி என்பது வியூகம். நாங்கள் வெற்றிபெற கூடிய நபர்கள். ஆனால் இரண்டாம் இடம் வந்துவிட்டோம், என்றெல்லாம் கூறினார்.
அமித் ஷா கண்டிப்பு: இன்னொரு பக்கம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பதவி ஏற்பு விழாவின் போது தமிழிசை சௌந்தரராஜனிடம் அதிருப்தியை வெளிப்படுத்திய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் வீடியோ இணையம் முழுக்க டிரெண்டாகி வருகிறது. இந்த வீடியோ தொடர்பாக தற்போது திமுகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழிசையை அழைத்து கண்டிப்பது போல கையால் சைகையை காட்டுகிறார். இதற்கு தமிழிசை பதில் அளிக்கும் போது அதை ஏற்றுக்கொள்ளாமல் தமிழிசையை கண்டிக்கும் விதமாக அமித் ஷா மறுத்து பேசுகிறார். இந்த வீடியோ டிரெண்டானது.
அண்ணாமலை அமைதி; இன்னொரு பக்கம் அண்ணாமலை, பாஜகவில் இனி பேட்டிகளை ஒழுங்கு செய்ய போகிறோம். இனி பேட்டிகளை பாஜக அலுவலகத்தில் மட்டுமே கொடுப்போம். பாஜக அலுவலகத்தில் மட்டுமே பேசுவோம். ஏர்போர்ட்டில் எல்லாம் பேச மாட்டேன் என்று அண்ணாமலை கூறினார். தனக்கு மட்டுமின்றி பாஜகவில் எல்லா பேட்டியையும் ஸ்ட்ரீம் லைன் செய்ய போவதாக கூறினார்
எல்லோரும் அமைதி: இப்படிப்பட்ட நிலையில்தான் அண்ணாமலை - தமிழிசை அதன்பின் நேரில் சந்தித்து சமூகம் ஆனார்கள். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் அண்ணாமலை அப்படியே அமைதியாகிவிட்டார்.
அண்ணாமலை இப்போதெல்லாம் பேட்டி கொடுப்பது இல்லை. பெரிதாக ஊடகங்கள் முன் வருவது இல்லை. ஏதாவது கருத்துக்களையும் சொல்வது இல்லை. லைம்லைட்டிலேயே இருக்கும் இவர் பேட்டிகளை தவிர்த்து வருகின்றனர். பாஜகவில் நிலவும் இந்த தீவிர அமைதி நிர்வாகிகள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications