கடந்த முறை நடந்த மாதிரி நடக்க கூடாது! அடித்து பேசிய ஸ்டாலின்! ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை! குட்நியூஸ்
சென்னை: மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்திற்காக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000/- உரிமைத் தொகையாக வழங்கிட தமிழக அரசால் 'கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்' செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெற 24.07.2023 முதல் 04.08.2023 வரை முதல் கட்டமாகவும், 05.08.2023 முதல் 14.08.2023 வரை இரண்டாவது கட்டமாகவும், மேற்சொன்ன இரண்டு கட்டங்களிலும், விடுபட்டவர்களுக்கு 18.08.2023 முதல் 20.08.2023 வரை சிறப்பு முகாம் வழியாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும் மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதார்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு 18.09.2023 முதல் அனுப்பி வைக்கப்பட்டது.. இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும்.
இரண்டாவது கட்டணம்: முதல் மாத தொகை கடந்த மாதம் செலுத்தப்பட்டது. கடந்த மாதம் 15ம் தேதி முதல் மாத கட்டணம் செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து இரண்டாவது மாத கட்டணம் இந்த மாதம் இன்னும் 5 நாட்களில் செலுத்தப்பட உள்ளது. எப்போதும் 15ம் தேதி கட்டணம் செலுத்தப்படும். ஆனால் 15ம் தேதி இந்த மாதம் வங்கி விடுமுறை.
அதனால் அதற்கு முன்னதாக ஒருநாள் 14ம் தேதி விண்ணப்பம் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனால் இந்த முறை முன்கூட்டியே மக்கள் பணம் பெறுவார்கள். இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி மகளிர் உரிமை தொகையை வங்கிகள் எவ்வித பிடித்தமும் செய்ய கூடாது என்று அரசு மீண்டும் வங்கிகளை அணுகி உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த முறை வங்கிகள் இது போல பணம் பிடித்தது. அப்போதே மகளிருக்கு அளிக்கப்படும் உரிமைத் தொகையில் இருந்து வங்கிகள் பிடித்தம் செய்யக்கூடாது.
மாநில அரசுக்கும், வங்கிகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்தங்களை மீறும் வங்கிகளின் பரிவர்த்தனைகள் வேறு வங்கிக்கு மாற்றப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும். உரிமைத் தொகையில் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், அதுகுறித்து 1100 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம், என்று அறிவித்தது.
இந்த நிலையில்தான் இந்த முறை மகளிர் உரிமை தொகையில் வங்கிகள் எவ்வித பிடித்தமும் செய்ய கூடாது என்று அரசு மீண்டும் வங்கிகளை அணுகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த முறை அது போல நடக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
