செம ட்விஸ்ட்டா இருக்கே.. அண்ணாமலை ஏன் அப்படி சொல்றாரு தெரியுமா.. திமுகவுக்கு இப்படி பிரச்சனை வருதா?
என்ஐஏ விசாரணையை அண்ணாமலை கோர காரணம் என்ன
சென்னை: பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில், அதுகுறித்த கூடுதல் தகவல்கள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன..!
சென்னையில் தி.நகர் பகுதியில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.. 3 மது பாட்டில்கள் மூலம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.. பாஜக தலைமை ஆபீசில் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால், பெட்ரோல் குண்டுகள் வெளியே விழுந்துள்ளன..
இதனால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை... போலீசாருக்கு உடனடியாக தகவலும் தெரிவிக்கப்படவும், அவர்களும் விரைந்து வந்து விசாரணையை அப்போதே ஆரம்பித்தனர்..

வாக்குமூலம்
அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் வினோத் என்பவர் சிக்கினார்.. இவர் ஒரு ரவுடி.. கர்த்தா வினோத் என்று இன்னொரு பெயரும் இவருக்கு உண்டு.. நந்தனத்தை சேர்ந்தவர்.. இவரிடம் தீவிரமாக போலீசார் விசாரணை நடத்தப்பட்டது.. எதற்காக பெட்ரோல் குண்டு வீசினார் என்று வினோத் வாக்குமூலம் தந்தார்.. அதில், நீட் தேர்வுக்கு பாஜக தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்தான், பெட்ரோல் குண்டு வீசியதாகவும் வாக்குமூலம் தந்ததாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.

அண்ணாமலை
இதையடுத்து, இந்த விவகாரத்தில் சதி இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.. செய்தியாளர்களையும் உடனே சந்தித்து பேசினார்.. அப்போது,"இதன் பின்னணிகளின் உண்மைகள் கண்டறிய தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏவின் விசாரணை வேண்டும்.. அப்போதுதான் இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறாமல் இருக்கும்... இந்த பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் யார் உண்மையான குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டு அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.. ஆளும் கட்சி ஆட்சிக்கு வந்து 8 மாதம் காலத்தில் வன்முறை அதிகரித்துவிட்டது... இதுக்கு எடுத்துகாட்டாகத்தான் பாஜக ஆபீசில் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாக பார்க்கிறோம்" என்றார்.

அதிருப்தி
சமீப காலமாக நீட் விஷயத்தில் தமிழகம் அதிருப்தியிலும் ஏமாற்றத்திலும் நொந்து போயுள்ளது.. நீட் விஷயத்தில் அனைத்து கட்சிகள் எடுத்து வைக்கும் கோரிக்கைகள் ஒவ்வொரு முறையும் நிராகரிக்கப்படுவதுடன், தமிழகத்தின் குரல் மத்திய அரசின் காதில் விழாமலேயே உள்ள நிலையில், இது பொதுமக்கள் தரப்பிலும் கொந்தளிப்பையே ஏற்படுத்தி வருகிறது என்பதை மறுக்க முடியாது.. அதற்காக ஒரு கிரிமினல் குற்றவாளி, ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள ஒரு ரவுடி, நீட் விவகாரத்துக்கு அக்கறை கொண்டு, இப்படி பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபடுவாரா? என்ற சந்தேகமும் பரவலாக இருக்கத்தான் செய்கிறது.

பெட்ரோல் குண்டு வீச்சு
ஒரு மாநில கட்சியின் தலைமை அலுவலகத்திலேயே, பெட்ரோல் குண்டு வீச்சு என்பது அதிர்ச்சிக்குரிய விஷயம்தான் என்றாலும், இது தொடர்பான விசாரணையை போலீசார் துரிதமாக எடுத்து, சம்பந்தப்பட்டவரையும் கைது செய்து விசாரித்து வரும் நிலையில், "சதி, என்.ஐ.ஏ. விசாரணை" என்ற அளவுக்கு அண்ணாமலை ஏன் பெரிதுபடுத்தி இதை பேசுகிறார்? என்ற ஆச்சரியங்களும் பரவலாக எழுந்து வருகின்றன.

என்ன காரணம்?
சதி, என்ஐஏ விசாரணை என்றெல்லாம் அண்ணாமலை குற்றம்சாட்டுவது ஏன் என விசாரித்தபோது, 'ஒரு சிலர் இந்த சம்பவத்தை வைத்து பிம்பத்தை உருவாக்கியிருக்கிறார்கள். நீட் தேர்வு விலக்கு தராமல் பாஜகதான் முட்டுக்கட்டை போடுவதாக மாணவர்கள் சமூகத்திற்கு சொல்லவே இப்படிப்பட்ட சம்பவத்தை யாரோ நடத்தியுள்ளார்கள் என்று அண்ணாமலை நினைக்கிறாராம்.. இதனை அம்பலப்படுத்த வேண்டுமாயின் என்.ஐ.ஏ. விசாரணை நடந்தால் தான், தனது அனுமானத்தின்படி ரிப்போர்ட் வெளிவரும் வாய்ப்பு உள்ளது என்பதே அவரது திட்டம். அதனால்தான் இப்படி பேசியிருக்கிறார் அண்ணாமலை" என்கிற தகவல்கள் பாஜக தரப்பில் சொல்லப்படுகிறது.

வினோத் யார்?
ஆனால் குண்டுவீசியதாக கைதானவர் இதேபோல பல சர்ச்சைகளில் சிக்கியவர்... நீட் தேர்வுக்கும் இவருக்கும் சம்பந்தம் இருக்க வாய்ப்பில்லை.. ஆனாலும் பொதுநலவாதியாக இருந்தால், நீட் தேர்வுக்கான தன்னுடைய எதிர்ப்பை எத்தனையோ வகைகளில் காட்டியிருக்க முடியும்.. ஏன், அதை வெளிப்படையாகவே கூட வினோத் காட்டியிருக்கலாம்.. ஆனால், சம்பந்தமே இல்லாமல் பெட்ரோல்குண்டை வீசிவிட்டு போனதன் நிஜ காரணம் என்னவென்று தெரியவில்லை.. எனவே தமிழ்நாடு போலீஸ் இதை முறையாக விசாரித்தாலே போதும், எல்லா உண்மையும் தெரியவரும் என்றும் காவல்துறை தரப்பிலேயே கூறப்படுகிறது...!
-
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி!












Click it and Unblock the Notifications