என்ன ரியாக்சன் தருவது? மோடி பேச்சால்.. பாஜக கேம்பில் தொற்றிய குழப்பம்.. "தாமரை" பிரச்சாரம் சறுக்குதா

Subscribe to Oneindia Tamil

சென்னை; 2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி பிரச்சார யுக்தியை நாளுக்கு நாள் மாற்றி வருகிறார். அவரின் பிரச்சார யுக்தி தற்போது பாஜகவினரையே குழப்ப தொடங்கி உள்ளது என்று கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அரசியலில் தேர்தல் யுக்திகளை மாற்றியதில் பாஜகவிற்கு பெரிய பங்கு உண்டு. இதற்கு பாஜகவை பாராட்ட வேண்டும் என்று கூட கூறலாம். அமெரிக்காவில் அதிபர் தேர்தல்களில் இருந்த ஸ்ட்ராட்டஜிக் திட்டங்களை இந்தியாவிற்கு கொண்டு வந்தது பாஜகதான்.

Why BJP camp is big silent on Modi speech against Ambani and Adani

அதாவது ஒரு தலைவர் வாய்க்கு வந்ததை பேசாமல்.. தலைவருக்கு கீழ் ஒரு டீம் போட்டு. அந்த டீம் டேட்டா, கள நிலவரம், சமூக வலைதள நிலவரம் எல்லாவற்றையும் ஆய்வு செய்து., அதன்பின் அந்த தலைவர் என்ன பேச வேண்டும் என்பதை முடிவு செய்யும். தலைவர் தானாக பேசாமல் டீம் சொல்வதையே பேசுவார்.

பிரச்சார திட்டம்; இதன் மூலம் மக்களுக்கு தேவையானதை சொல்ல முடியும். அதே சமயம் எதிர்க்கட்சிகள் லேசாக சொதப்பினால் கூட அதை அப்படியே பூதாகரமாக்கி narrative செட் செய்ய முடியும். உதாரணமாக ராகுல் மோடி என்றால் திருடன் என்று சொன்னதை இடைநிலை ஜாதிக்கு எதிராக ராகுல் பேசிவிட்டதாக narrative செட் செய்தது போல மாற்ற இது போன்ற டீம் உதவி தேவை.

அதில் பாஜக இத்தனை காலம் கிங்காக இருந்தது. ஆனால் இப்போது அதே பார்முலாவை மற்ற கட்சிகள் பின்பற்றி.. பாஜகவை முந்த தொடங்கிவிட்டன. உதாரணமாக ராகுலின் வெள்ளை டீ ஷர்ட், அவர் பேசும் விதம், வீடியோ போடும் விதம் எல்லாம் பக்கா டீம் வேலை என்பது அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரியும்.

ஏன் முதல்வர் ஸ்டாலினின்.. எரியுதடி மாலா ஃபேனை போடு என்ற வாக்கியமும் கூட அவருக்கு பின் சிறப்பான டீம் ஒன்றில் திட்டமிடல் இருக்கிறது. இளைஞர்களை கவர பக்கா பிளான் உள்ளது என்பதையே காட்டுகிறது.

இதற்கெல்லாம் இந்திய அரசியலில் முன்னோடியாக இருந்த பாஜக இப்போது இதே விஷயத்தில் சொதப்பி வருகிறது. முக்கியமாக "பிராண்ட் மோடி" இப்போது பாஜகவிற்கே எதிராக திரும்ப தொடங்கி உள்ளது.

மோடி பேச்சு: உதாரணமாக தொடக்கத்தில் லோக்சபா தேர்தல் உள்ளூர் பிரச்சனை, முதலீடுகள், ஜிஎஸ்டி, கச்சத்தீவு, டோல் கேட், நீட், ரயில்வே பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை என்று ஆக்கபூர்வமான விஷயங்களை மையப்படுத்தியே பிரச்சாரம் நடந்தது. தமிழ்நாட்டில் மத ரீதியாக பிரச்சனை நடக்கவில்லை.

பல முறை தமிழ்நாட்டிற்கு வந்த மோடி எங்கும் மதம் பற்றி பேசவே இல்லை. ஆனால் தமிழ்நாடு லோக்சபா தேர்தலில் மதம் தொடர்பான பிரச்சனைகள் பெரிய அளவில் கவனம் பெறாத நிலையில் தமிழ்நாடு தேர்தல் முடிந்ததும் வடஇந்தியாவில் மத ரீதியான விஷயங்களை பாஜக கையில் எடுத்துள்ளது.

உதாரணமாக ராஜஸ்தானில் பேசிய மோடி, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள்.

இஸ்லாமியர்கள் அதிக குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமிய பெண்களுக்கு கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. "அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது,​​தேசத்தின் செல்வத்தில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள்.

கடுமையான சர்ச்சை; இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு தர போகிறீர்களா. இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள்.

பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மங்களத்தை கூட விட்டுவைக்காது, என்று பிரதமர் மோடி கடுமையாக பேசி இருக்கிறார்.

மோடி குழப்பம்; அதன்பின் மோடி பின்வரும் விஷயங்களை பேசினார்.

1.இந்திய கிரிக்கெட் அணியில் காங்கிரஸ் இஸ்லாமியர்களை சேர்க்கும்.

2. குடியரசுத்தலைவர் முர்மு கருப்பு என்பதால் அவரை காங்கிரஸ் ஆதரிக்கவில்லை.

3. உங்கள் வீட்டில் உள்ள எருமை மாட்டை காங்கிரஸ் பிடுங்கிக்கொள்ளும் என்று பேசினார்.

அம்பானி அதானி பேச்சு: இப்போது அவரின் பேச்சு ஒரு கட்டம் மேலே போய் தெலங்கானாவின் கரீம்நகரில் இன்று நடைபெற்ற பேரணியின் போது, ​​பிரதமர் நரேந்திர மோடி, அம்பானி, அதானி ஆகியோருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் "டீல்கள்" குறித்து கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2024 மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அம்பானி, அதானி ஆகியோரை விமர்சனம் செய்வதை ராகுல் காந்தி ஏன் நிறுத்தினார் என்று பிரதமர் மோடி தனது உரையில் கேள்வி எழுப்பி உள்ளார்.

பிரதமர் மோடி தனது பேச்சில், கடந்த ஐந்தாண்டுகளாக காங்கிரஸின் இளவரசர், காலையில் எழுந்தவுடன் அம்பானி, அதானி என்று கோஷமிட்டதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ரஃபேல் விவகாரம் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதையடுத்து கடந்த ஐந்து ஆண்டுகளாக, அவர் அம்பானி, அதானி என்று கோஷமிட்டார். அம்பானி-அதானி, அம்பானி-அதானி என்று மீண்டும் மீண்டும் ராகுல் காந்தி சொல்ல ஆரம்பித்தார். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, அம்பானி-அதானியை பேசுவதை அவர் நிறுத்திவிட்டார்

இந்த தேர்தலில் இளவரசர்ராகுல் காந்தி அம்பானி-அதானியிடம் இருந்து எவ்வளவு வாங்கினார் என்று இன்று தெலுங்கானா நிலத்தில் இருந்து கேட்க விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சியிடம் எவ்வளவு கறுப்புப் பணம் உள்ளது? நோட்டுகள் நிரப்பப்பட்ட டெம்போ காங்கிரசுக்கு வந்துவிட்டதா? அம்பானி-அதானியை பற்றி பேசுவதை இரவோடு இரவாக நிறுத்திவிட்டீர்கள் என்றால் என்ன ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று சொல்லுங்கள். என்று அம்பானி அதானி பற்றி பேசி உள்ளார்.

குழப்பம்: மோடியின் இந்த பேச்சு காரணமாக.. அம்பானி அதானி மீது அமலாக்கத்துறை ரெய்டு இருக்குமா என்று ராகுல் காந்தி பதிலடி கொடுக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. அம்பானி அதானி பற்றி மோடி பற்றி பேசினால் பங்குச்சந்தை காலியாகும், மோடி ஏன் கருப்பு பணத்தை ஒழிக்கவில்லை என்ற கேள்வி எல்லாம் வரும். அதோடு அதானி - அம்பானி பற்றி ராகுல் பதில் கேள்வி எழுப்பி வாய்ப்பு உள்ளது. அம்பானி அதானி மீது அமலாக்கத்துறை ரெய்டு இருக்குமா என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்ப வாய்ப்பு உள்ளது என்று மோடியின் டீம் எதிர்பார்க்கவே இல்லையா?

அதை பற்றி யோசிக்காமல் மோடி இப்படி பேசியதால் உண்மையில் மோடிக்கு பின் திறமையான டீம் உள்ளதா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜக உருவாக்கிய பார்முலாவில் பாஜகவே சொதப்புகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. மோடியின் பேச்சை இப்போது ஆதரிப்பதா.. அம்பானி அதானியை எதிர்ப்பதா.. இல்லை மோடியை எதிர்ப்பதா என்று தெரியாமல் பாஜக கேம்ப் குழம்பும் நிலைக்கு சென்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+