என்ன இது? திடீரென மத்திய அரசுக்கு எதிராக சிஏஜி முறைகேடு புகார்.. நிதின் கட்கரிக்கு குறியா? பின்னணி
சென்னை: மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு எதிராக சிஏஜி அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக தேசிய அரசியலில் நிதின் கட்கரிக்கு எதிரான இந்த புகார் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
2024 லோக்சபா தேர்தலுக்கு பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெரிய கூட்டணியை உருவாக்கி உள்ள நிலையில் பாஜக தற்போது என்டிஏ கூட்டணியை வலுப்படுத்த தொடங்கி உள்ளது. என்டிஏ கூட்டணி கட்சிகளை பாஜக சந்திக்க தொடங்கி உள்ளது. கூட்டணி கட்சிகளோடு பாஜக நெருக்கமாக செயல்பட தொடங்கி உள்ளது.

இந்த நிலையில்தான் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தற்போது கவனம் பெற்றுள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விதான் தற்போது மிக முக்கியமான விவாதமாக உருவெடுத்து உள்ளது. மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று சில குரல்கள் எழுந்தது.
இவருக்கு ஆர்எஸ்எஸ் தரப்பில் பெரிய ஆதரவு இருப்பதாகவும் தகவல்கள் வந்தது. நிதின் கட்கரி கூட சமீபத்தில், வெற்றி என்றால் கட்சியில் சிலர் கொண்டாடுகிறார்கள். தோல்வி என்றால் காணாமல் போய் விடுகிறார்கள். தோல்விக்கு இவர்கள் பொறுப்பேற்பதே இல்லை என்று அமித் ஷா, மோடியை ரகசியமாக தாக்கும் விதமாக பேசி இருந்தார்.
நிதின் கட்கரியை பிரதமர் வேட்பாளராக்க வேண்டும் என்று பாஜகவிற்குள் குரல் வர தொடங்கி உள்ளதாக தகவல்கள் வருகின்றன. பாஜக கட்சியிலேயே மோடிக்கு எதிராக சிலர் நிலைப்பாடு எடுத்து இருக்கிறார்கள். தேர்தல் சமயத்தில் அவர்கள் மோடிக்கு எதிராக பேச வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.
தொங்கு சட்டசபை: மோடிக்கு பதிலாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை பிரதமர் வேட்பாளராக பாஜக நிறுத்த வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகிறது. அதன்படி பிரதமர் வேட்பாளரை பாஜக அறிவிக்காமல் தேர்தலை சந்தித்துவிட்டு அதன்பின் தேர்தலில் வெற்றி பெற்றால் நிதின் கட்கரியை பிரதமராக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வருகிறது.
2024 லோக்சபா தேர்தலில் ஒருவேளை தொங்கு சட்டசபை உருவாகி பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் மோடியை பிரதமராக ஏற்க கூட்டணி கட்சிகள் தயங்கும். கூட்டணி கட்சிகள் ஏற்கும் தலைவரை பாஜக பிரதமராக முன்னிறுத்த வேண்டும். அப்படி இருக்கும் போது நிதின் கட்கரியை பிரதமராக களமிறக்கி கூட்டணி ஆட்சியை பாஜக முன்னெடுக்கும் வாய்ப்புகளும் உள்ளன.
முறைகேடு புகார்: இந்த நிலையில்தான் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு எதிராக சிஏஜி அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக தேசிய அரசியலில் நிதின் கட்கரிக்கு எதிரான இந்த புகார் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரதமர் ரேஸில் நிதின் கட்கரி வர உள்ளதாக பேச்சு எழுந்ததுமே அவருக்கு எதிராக இந்த ரிப்போர்ட் வெளியாகி உள்ளது., அதன்படி சுங்கச்சாவடி ஊழல் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. சிஏஜி அறிக்கையின் படி உத்தேசமாக 5 சுங்கச்சாவடிகளில் ஆய்வு செய்ததில் வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ132 கோடி அதிக தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது.
நான்கு வழிச்சாலைகள் ஆறு வழிச்சாலையாகவோ, எட்டு வழி சாலையாகவோ தரம் உயர்த்தப்படும் போது கட்டுமான பணிகள் முடிவடையும் வரை ஏற்கனவே வசூலிக்கப்பட்ட சுங்க கட்டணத்தில் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் அதை மீறி அதிக தொகை வசூல் என புகார் வைக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் பரனூர் சுங்கச்சாவடி மையத்தில் மட்டும் கட்டணம் குறைக்காமல் இருந்ததால் 28 கோடி ரூபாய் வரை கூடுதலாக பொதுமக்களிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல் துவாரகா நெடுஞ்சாலை ஊழல் கவனம் பெற்றுள்ளது. 1கிமீ சாலை அமைக்க ரூ18 கோடி ஆகும் என முடிவு எடுக்கப்பட்ட நிலையில் தற்போது 1 கிமீ ரூ250 கோடி என அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது 14மடங்கு அதிகம். மேலும் பாரத்மாலா ஊழல் புகாரும் கவனம் பெற்றுள்ளது. 34,800 கிமீ சாலை அமைக்க ரூ.5,35,000 கோடி ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 26,316 கிமீ சாலை அமைக்க ரூ.8,46,588 கோடிக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் படி ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க 15 .37 கோடி ஆகும் செலவு. ஆனால் வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி ஆகும் செலவு 32.17 கோடி .அதாவது முறைகேடாக இந்தத் திட்டத்தின் நிதி இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டு இருப்பதாக ஊழல் புகார் வைக்கப்பட்டு உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications