ஓபிசி மக்களை ஏமாற்றும் பாஜக அரசு.. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம்.. சொல்வது காங்கிரஸ்!
சென்னை: மக்கள் தொகைக்கு ஏற்ப உரிமைகள் என்ற அடிப்படையில் உடனடியாக சாதிவாரியாக மக்கள் தொகைக்கணக்கு எடுக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ் கட்சி, ஓபிசி பிரிவினருக்கு இந்த மசோதாவில் உரிய இடம் வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டியது. ராகுல் காந்தியும் இதுதொடர்பாகப் பேசினார். இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை 20.09.2023 அன்று வாக்கெடுப்புடன் நிறைவேற்றியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது 9.3.2010 அன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றியது. பின்னர், மசோதாவை அனைத்துக் கட்சியினரின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால் மக்களவையில் நிறைவேற்ற முடியவில்லை.
தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் மசோதாவில், பெண்களுக்கான இட ஒதுக்கீடு 15 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் என்றும், பெண்களுக்கான மூன்றில் ஒரு பங்கு இடஒக்கீட்டில் பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடும் அடங்கியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு பெண்களுக்கான இட ஒத்துக்கீடு இல்லாமல் இருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
நாட்டின் மக்கள் தொகையில் அதிக அளவில் இருக்கும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்யாமல் இருப்பதிலேயே அந்தப் பிரிவு பெண்களின் முன்னேற்றத்தில் துளியும் அக்கறையில்லாமல் இருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு என்பது தெளிவாகிறது. ஓ.பி.சி. பிரிவு மக்களை வேண்டுமேன்றே பலிவாங்குகிறது, ஏமாற்றுகிறது பா.ஜ.க. அரசு.
பெண்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு கொண்டு வர பெரிய அளவில் முயற்சி செய்தவர் முன்னாள் பிரதமர், பாரத ரத்னா ராஜிவ்காந்தி அவர்கள். ஆனால், அந்த மசோதா மாநிலங்களவையில் 7 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. அதன் பிறகு முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் அவர்கள் ஆட்சிக் காலத்தில்தான் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், இன்று நாட்டில் 15 லட்சத்திற்கும் அதிகமான தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் தலைவர்கள் உருவாகி இருக்கிறார்கள்.
ஆனால், தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நடைமுறைக்கு வரும் தேதி குறித்த தெளிவு இல்லாமல் உள்ளது, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகே மசோதா அமலாகும் என ஒன்றிய அரசு கூறுவது மிகப்பெரிய துரோகம் ஆகும். 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பையே இன்னும் மத்திய அரசு நடத்தவில்லை, ஜி20 கூட்டமைப்பு நாடுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளத் தவறிய நாடு இந்தியா மட்டுமே. எனவே, மக்கள் தொகைக்கு ஏற்ப உரிமைகள் என்ற அடிப்படையில் உடனடியாக சாதிவாரியாக மக்கள் தொகைக்கணக்கு எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் நாட்டின் மக்கள் தொகையில் அனைத்து வகுப்பினரின் உண்மையான கணக்கீடு தெரியவரும்.
எந்தவொரு சமூக நீதிப் பணியைத் தொடங்குவதற்கான முதல்படி பிரச்சினையின் அளவைப் புரிந்து கொள்வது ஆகும். அதனால்தான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியமாகிறது. இதன் மூலம் மட்டுமே, மக்கள்தொகையில் சாதிவாரியான மக்களின் வருமானம், கல்வி, சுகாதாரம் மற்றும் பல்வேறு பிரிவினர்களின் சமூக நகர்வு பற்றிய சரியான விவரங்களைப் பெற முடியும். எனவே, உடனடியாக சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கு எடுக்கப்பட வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications