வருமான வரி உச்சவரம்பை மத்திய அரசு ஏன் உயர்த்தவில்லை தெரியுமா? பட்ஜெட்டை விளக்கும் பாஜக சுந்தர் ராமன்
சென்னை: இடைக்கால பட்ஜெட்டை நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில் இது தொடர்பாக பாஜக அறிவு சார் பிரிவின் துணைத் தலைவர் சுந்தர் ராமன் ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்றைய தினம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதற்கிடையே பாஜக அறிவு சார் பிரிவின் துணைத் தலைவர் சுந்தர் ராமன் இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஒன் இந்தியாவுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், "இப்போது பட்ஜெட் முறையே மாறியுள்ளது. அதாவது முக்கிய அறிவிப்புகள் அனைத்தும் பட்ஜெட்டில் தான் அறிவிக்க வேண்டும் என்ற நிலை இப்போது இல்லை. அதுவும் ஜிஎஸ்டி வந்த பிறகு வரி விதிப்பு அனைத்தும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலேயே முடிவு செய்யப்படுகிறது. அது மட்டுமின்றி மற்ற அறிவிப்புகளும் கூட பட்ஜெட் வரை காத்திருப்பதில்லை. இதன் மூலம் மக்களுக்கு உடனுக்கு உடன் உதவிகள் கிடைக்கிறது.
அரசின் நிதி பற்றாக்குறை இப்போது 5.1%ஆக உள்ளது. இது வல்லுநர்களைக் கழித்ததை விடக் குறைவு.. இதை நாம் பாராட்டியே ஆக வேண்டும். இந்த 10 ஆண்டுகளில் என்ன செய்துள்ளனர் என்பதை நம்பிக்கையுடன் விளக்கியுள்ளனர். இதில் முக்கிய அறிவிப்புகள் இல்லை என்றாலும் மீண்டும் ஆட்சியைப் பிடித்து ஜூலை மாதம் முழு பட்ஜெட்டை தாக்கில் செய்துவிட்டுப் போகிறோம்.
இப்போது தனிநபர் வருமான வரியை உயர்த்தினால் கூட தேர்தல் காரணமாகவே உயர்த்தியுள்ளனர் என்ற விமர்சனம் வரவே செய்யும். மாதம் 17 ஆயிரம் சம்பாதித்தால் வருமான வரி இல்லை என்ற நிலையில் இருந்து இப்போது சுமார் 60 ஆயிரம் சம்பாதித்தால் வருமானவரி இல்லை என்கிறார்கள். இதுவரை செய்த சாதனைகளைக் குறிப்பிட்டுள்ளார்கள் அதைப் பாருங்கள்.
இந்த அரசின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தான். தொழில்நுட்பத்தை வளர்த்தெடுக்கத் தேவையான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். வேளாண் துறை தொடங்கி வருமான வரித் துறை வரை தொழில்நுட்பத்தைப் பல விஷயங்களில் புகுத்துள்ளனர். இதில் குறிப்பிட தகுந்த எடுத்துக்காட்டு என்றால் யுபிஐ.. டீ, இளநீர் என்று யுபிஐ பேமெண்ட் முறை அனைத்திற்கு இடங்களுக்கும் சென்றுள்ளது.
இந்த சின்ன பட்ஜெட்டிலும் கூட கிராமப்புறங்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் முன்னேறத்தை குறிவைத்தே இருக்கிறது. பணவீக்கம் அதிகரிக்கப் போக்குவரத்து செலவுகள் அதிகரித்து முக்கிய காரணம். அதேநேரம் உலக அளவில் பார்க்கும் போது விலைவாசி உயர்வு இங்குக் குறைவாகவே இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் மத்திய அரசின் பாலிசி நடவடிக்கையே காரணம். முதலீடுகளைப் பாதிக்காமல் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications