வெறும் 3 நிமிஷம் தான்.. கோவையன்ஸ் மெட்ரோவுக்கெல்லாம் வர மாட்டாங்க! மத்திய அரசின் புது விளக்கம்!
சென்னை: கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிக்கையை, மத்திய அரசு தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளது. இதனைக் கண்டித்து இரு நகரங்களிலும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தை திருப்பு அனுப்ப காரணம் என்ன? என்பது குறித்து மத்திய அரசு விளக்கியுள்ளது. அதில், கோவையில் சராசரியாக 30 கிலோமீட்டர் வேகத்தில் வாகனங்கள் இயக்கப்படும் நிலையில் மெட்ரோவின் சராசரி வேகம் மணிக்கு 34 கிலோ மீட்டர் எனவும், ஒரு சில நிமிடங்களுக்காக மக்கள் மெட்ரோ பயணத்தை நாட மாட்டார்கள் என்பதற்காகவே திருப்பி அனுப்பியுள்ளதாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அடுத்த கட்ட நகரங்களான மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதை அடுத்து இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு செய்தது. மதுரையில் திருமங்கலம் ஒத்தக்கடை இடையே சுமார் 31 கிலோமீட்டர் தூரத்திற்கும், கோவை அவிநாசி சாலையிலிருந்து கருமத்தம்பட்டி வரை, உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரை 39 கிலோமீட்டர் தூரத்திற்கும் இந்த மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.

கோவை மெட்ரோ
தொடர்ந்து ஆய்வு பணிகள் நிறைவடைந்த நிலையில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பியது. மத்திய அரசின் ஒப்புதல் விரைவில் கிடைத்துவிடும் என்பதால் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகளும் மதுரை மற்றும் கோவையில் ஆய்வை முடித்தனர். இந்த நிலையில் இந்த இரண்டு மெட்ரோ ரயில் திட்டங்களின் திட்ட அறிக்கையை மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் திருப்பி அனுப்பி உள்ளது.
மதுரை மெட்ரோ திட்ட அறிக்கை
20 லட்சத்திற்கும் மேல் மக்கள் வசிக்கும் நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், கோவையில் தற்போது 15 லட்சமும் மதுரையில் 15 லட்சம் மக்கள் தான் வசிக்கிறார்கள் என்பதால் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடியாது எனவும், இரு நகரங்களிலும் தனி பாதையில் பேருந்துகளை இயக்கலாம் அல்லது பிஆர்டிஎஸ் போன்ற திட்டத்தை செயல்படுத்தலாம் என பரிந்துரைத்தது. இதனால் தமிழக அரசு அதிர்ச்சி அடைந்த நிலையில் திமுக கூட்டணி சார்பில் கோவை மற்றும் மதுரையில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசு
இந்த நிலையில் கோவை மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை திருப்பி அனுப்பியது ஏன் என மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில்," கோவையில் சராசரியாக மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் வாகனங்களில் பயணப்படும் நிலையில் மெட்ரோவின் சராசரி வேகம் மணிக்கு 34 கி.மீ ஆகும். சாலையில் வாகனங்களின் சராசரி வேகம் மெட்ரோ ரயிலின் வேகத்திற்கு கிட்டத்தட்ட சமமாக உள்ளது.
நேர சேமிப்பு
கார், பேருந்து, இரு சக்கர வாகனத்திற்கு பதில் மெட்ரோ ரயிலில் பயணித்தால் பயணியால் 3 நிமிடங்கள் வரையே சேமிக்க முடியும். குறைந்த நேர சேமிப்பு காரணமாக பயணிகள் மெட்ரோவை நாட வாய்ப்பில்லை. 2 கோவையில் 34 கி.மீ. தூர மெட்ரோ சேவையில் தினசரி 5.9 லட்சம் பயணங்கள் மேற்கொள்ள முடியும் என திட்டமிடப்பட்டுள்ளது. மெட்ரோ திட்டம் கோவையில் கொண்டு வரப்பட்டால் எதிர்பார்த்த அளவுக்கு பயணிகள் அதனை நாட மாட்டார்கள்.
மக்கள் தொகை
22 மீ. அகலத்திற்கு மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க திட்டமிட்டப்பட்டுள்ள நிலையில், அவ்வாறு திட்டத்தை முன்னெடுத்தால் பல கட்டிடங்களை இடிக்க நேரிடும். 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள நகரங்களில் மெட்ரோ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது கொள்கை. 2011 கணக்கீட்டின்படி மதுரையின் மக்கள் தொகை 15 லட்சமாக உள்ளதாக அங்கு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த இயலாது." என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications