மாஸ்டர் பிளான்.. அமித்ஷாவை சந்தித்து பேச இதுதான் காரணம்.. இன்று டெல்லி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
பிரதமர் மோடியை நாளை நேரில் சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: இன்று இரவு டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின், நாளைய தினம் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்திக்க உள்ளார்.
துபாய் பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு வந்த முதல்வர் ஸ்டாலின், இன்று டெல்லி செல்கிறார்.. 4 நாள் பயணமாக இன்று இரவே புறப்பட்டு செல்கிறார்.
டெல்லியில் திமுகவின் தலைமையகமான அண்ணா - கலைஞர் அறிவாலய கட்டிடத்தின் திறப்பு விழா வரும் 2-ம் தேதி நடக்க போகிறது..
இதற்கான ஏற்பாடுகள் கடந்த சில தினங்களாகவே நடந்து கொண்டிருக்கிறது.. அதேபோல இந்த கட்டிடமும் ஸ்பெஷலாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அறிவாலயம்
இந்த அண்ணா- கலைஞர் மாளிகையின் முதல் தளத்தில் முக்கிய நிர்வாகிகள் அமர்ந்து பேசுவதற்கான இடமும், தலைவருக்கான பிரத்யேக ரூம்களும் அமைக்கப்பட்டுள்ளது. .. 2-வது தளத்தில் கான்ப்ரன்சிங் ரூம்கள் அமைக்கப்பட்டுள்ளது... இங்கு சென்னை அறிவாலயத்தில் உள்ளது போலவே அங்கும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.. 3-வது தளத்தில் எம்பிக்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து வரும் நிர்வாகிகள் தங்குவதற்கான அறைகள் அமைந்துள்ளன.. இந்த 3 தளங்களுமே நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நிதி ஒதுக்க கோரிக்கை
இதில் பங்கேற்பதற்காகத்தான், முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு டெல்லி புறப்படுகிறார்... நள்ளிரவு 12 மணியளவில் டெல்லி சென்றடையும் அவர், நாளை பிற்பகல் ஒரு மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது, தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதியை ஒதுக்க வலியுறுத்த உள்ளார்.

பிரதமர் மோடி
இதை தவிர, வடகிழக்கு பருவமழையின்போது ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அளிக்க வேண்டிய நிவாரண தொகையை வழங்க வேண்டும், தமிழகத்திற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது குறித்தும் பிரதமரிடம் நம் முதல்வர் வலியுறுத்துவார் என்று தெரிகிறது.. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் ஸ்டாலின் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது... அப்போது திமுக அலுவலக திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.. தொடர்ந்து ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோரையும் சந்திக்க உள்ளார்.

அழைப்பு
அன்றைய தினம் இரவு டெல்லியில் தங்கும் முதல்வர், 1-ம் தேதி டெல்லியில் சோனியா காந்தி, ராகுல்காந்தி உட்பட முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசுகிறார்... திமுக அலுவலக கட்டட திறப்பு விழாவில் பங்கேற்க அப்போது அழைப்பு விடுக்க உள்ளார்... அப்போது பாஜகவுக்கு எதிராக வலுவான அணியை அமைப்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர்களிடமும் ஆலோசனை மேற்கொள்வார் என கூறப்படுகிறது..

முதல்வர் ஸ்டாலின்
ஏப்ரல் 2ம் தேதி மாலை 5 மணிக்கு கலைஞர் அறிவாலயத்தை, கட்சிக் கொடி ஏற்றி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்... விழாவை முடித்துக் கொண்டு, ஏப்ரல் 2ம் தேதி இரவே டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ஸ்டாலின் சென்னை திரும்ப உள்ளார்... அதாவது ஆரம்பத்தில் ஒரு நாளாக திட்டமிடப்பட்டு இருந்த முதல்வரின் டெல்லி பயணம், திடீரென 4 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது, தேசிய அளவில் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது...!
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications