சாலை விபத்துக்கு 3 லட்சம், கள்ளச்சாராய சாவுக்கு 10 லட்சம் வழங்கிய தமிழ்நாடு அரசு.. காரணம் இதுவா?
சென்னை: விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து இருப்பது சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்பி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இன்று 9 ஆக அதிகரித்து உள்ளது. அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கையும் 4 ஆக உயர்ந்து உள்ளது.

விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 6 ஆக இருந்த நிலையில் இன்று காலை மேலும் மூவர் உயிரிழந்து உள்ளனர். சித்தாமூரில் ஏற்கனவே மூவர் இறந்த நிலையில் நள்ளிரவில் மேலும் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இறந்தவர்கள் குடித்த கள்ளச்சாரம் ஒரே வகையானது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து மூவர் இறந்ததாக செய்தி வந்தவுடனே முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கலுடன் நிவாரண உதவியும் அறிவித்தார். இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "விழுப்புரம் மாவட்டம். மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திரு கரேஷ், திரு.சங்கர் மற்றும் திரு.தரணிவேல் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன்.
கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க இந்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இச்சம்பவம் நடைபெற்ற பகுதியைச் சேர்ந்த மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.அருள் வடிவழகன், உதவிஆய்வாளர் திரு.தீபன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் திருமதி.மரியா சோபி, மஞ்சுளா மற்றும் உதவி ஆய்வாளர் திரு.சிவகுருநாதன் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த அமரன் த/பெ வேணு கைது செய்யப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய இதர குற்றவாளிகளைத் தேடும் பணியும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்திட அறிவுறுத்தி உள்ளேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்சம் ரூபாயும் மருத்தவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதேபோல், செங்கல்பட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கும் முதலமைச்சர் ஆறுதலுடன் நிதியுதவி அறிவித்து உள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், "செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம். சித்தாமூர் குறுவட்டம், பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த திருமதி.வசந்தா, க/பெ.ராஜா (வயது 50), திரு.செல்வம், த/பெ.செல்வம் (வயது 35), திரு.மாரியப்பன், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தாமூர் குறுவட்டம் பேரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திரு.வள்ளியப்பன் (வயது 65) மற்றும் திருமதி.சந்திரா, க/பெ. வள்ளியப்பன் (வயது 60) ஆகியோர் கள்ளச்சாராயம் அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன்.
இச்சம்பவம் நடைபெற்ற பகுதியைச் சேர்ந்த மேல்மருவத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிரேம் ஆனந்த், சித்தாமூர் காவல்நிலைய உதவிஆய்வாளர் திரு.மோகனசுந்தரம் மற்றும் மதுராந்தகம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. துரைபாண்டியன் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த குற்றவாளிகள் மூன்றுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் திரு.த.மோ.அன்பரசன் அவர்கள் முன்னதாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது இரங்கலையும், உயிரிழந்தவர்களின் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு. குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்சம் ரூபாயும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த நிலையில் அரசின் விதிகளை மீறி கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவதா? என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்திட்டு வருகிறார்கள். இது ஒரு தவறான முன் உதாரணம் என்றும் அவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். குறிப்பாக சாலை விபத்தில் உயிரிழந்தால் ரூ.5 லட்சம், தீ விபத்தில் இறந்தால் ரூ.5 லட்சம், மின்விபத்தில் இறந்தால் ரூ.5 லட்சம், வெடிவிபத்தில் இறந்தால் ரூ.5 லட்சம், கள்ளச்சாராயம் குடித்தால் மட்டும் ரூ.10 லட்சம் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பான மீம்களும் சமூக வலைதளங்களில் அணிவகுக்கத் தொடங்கி உள்ளன. ஆனால், திமுக ஆதரவாளர்களோ, "மூலப்பொருட்களை சேகரித்து, பல நாட்களாக காய்ச்சி விற்கப்படும் கள்ளச்சாராயத்தை தடுக்காதது அரசின் பிழை என்பதால் ரூ.10 லட்சத்தை தனக்கு தானே அபராதம் விதித்துக்கொண்டதைபோல் அரசால் நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதுவே அரசு பேருந்து விபத்துகள் ஏற்படுவது ஓட்டுநரின் தனிப்பட்ட பிழையின் காரணமாகவே தவிர, அரசால் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டு யாரும் இறக்கவில்லையே?" என்று வாதிட்டு வருகிறார்கள்.
அரசின் கவனக்குறைவால் ஏற்பட்ட உயிரிழப்பு என்பதால் 10 இலட்ச ரூபாய் இழப்பீடு என்று விளக்கம் அளிக்கிறார்கள்.
— பூதம் (@angry_birdu) May 15, 2023
மாநகர பேருந்து மோதி ஏற்பட்ட உயிரிழப்பு அரசின் கவனக்குறைவால் ஏற்பட்ட உயிரிழப்பாக கருதப்படாதா? அதற்கு வெறும் 3 இலட்ச ரூபாய் இழப்பீடு ஏன்? https://t.co/x9H44sMrgu pic.twitter.com/0B0Xx99o7j
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எப்படி வழங்கப்படும்? இப்போதே திட்டத்தை கையில் எடுக்கும் திமுக? கசிந்த தகவல்! -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து!












Click it and Unblock the Notifications