அப்போ ஜெயலலிதா சொன்ன பாயிண்ட்.. இன்று நீட் போராட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைக்காதது ஏன்? பரபர பின்னணி
சென்னை; இன்று திமுக சார்பாக தமிழ்நாடு முழுக்க நடத்தப்பட உள்ள நீட் எதிர்ப்பு உண்ணாவிரத போராட்டதை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்காதது ஏன் என்ற விவரம் வெளியாகி உள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க.வினர் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர். சென்னையில் நடக்கும் போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். திமுக . இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளது.

இந்த போராட்டத்தை மாநிலம் முழுக்க அமைச்சர்கள் நடத்தினாலும் முதல்வர் ஸ்டாலின் போராட்டத்தை நடத்தவில்லை. போராட்டத்திலும் கலந்து கொள்ள போவதில்லை.
காரணம் என்ன?: இதற்கு பின் முக்கிய காரணம் உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி 2007 சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற அப்போதைய முதல்வர் கருணாநிதி பந்த் அறிவித்தார். இதை எதிர்த்து ஜெயலலிதா உயர் நீதிமன்றத்திலும், அதன்பின் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார்.
ஆளும் கட்சியே பந்த் நடத்த கூடாது என்று கூறினார். இதையடுத்து உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் இந்த பந்திற்கு கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து பந்தை கைவிட்ட ஆளும் திமுக அடையாள உண்ணாவிர போராட்டம் நடத்தியது. அதிலும் அப்போதைய முதல்வர் கருணாநிதி சில நிமிடங்கள் மட்டுமே போராட்டத்தில் கலந்து கொண்டார்.
முதல்வர் ஒருவர் இப்படி பந்த், போராட்டம் செய்வது சட்ட ரீதியாக சிக்கல் கொண்டது. அதிலும் குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் இருப்பதும் சட்ட சிக்கல் கொண்டது. இந்த நிலையில்தான் இன்று திமுக சார்பாக தமிழ்நாடு முழுக்க நடத்தப்பட உள்ள நீட் எதிர்ப்பு உண்ணாவிரத போராட்டதை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க வேண்டாம் என்ற முடிவு செய்துள்ளார்.
இன்று நடக்கும் போராட்டம் கூட திமுக அணிகள் சார்பாக நடத்தப்படுகின்றன. அமைச்சர்கள் என்ற வார்த்தை பயன்படுத்தப்படாமல், வெறுமனே கட்சி பதவிகள் பயன்படுத்தப்பட்டு போராட்டத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. ஒரு மாநில அரசு குடியரசுத் தலைவரை எதிர்க்க முடியாது என்பதால் இந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டு உள்ளது.
திமுக போராட்டம்: தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்பு மீண்டும் தீவிரம் அடைந்து உள்ளது. சமீபத்தில் நீட் தேர்வில் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காத சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (19) என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்த எதிர்ப்பை தீவிரம் ஆக்கி உள்ளது.
இந்த நிலையில்தான் நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க.வினர் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர். சென்னையில் நடக்கும் போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.
மதுரை தவிர்த்து தமிழ்நாடு முழுக்க இன்று போராட்டம் நடைபெறுகிறது. மதுரையில் வரும் 23ம் தேதி போராட்டம் நடத்தப்படுகிறது. அதிமுக பொதுக்கூட்டம் காரணமாக மதுரையில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படவில்லை. நீட் குறித்து ஆளுநரின் பேச்சு, மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தராததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுக்க மாவட்ட தலைநகரங்களில் இந்த போராட்டம் நடைபெறுகிறது. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த போராட்டம் நடைபெறுகிறது.
கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். தூத்துக்குடியில் நடக்கும் போராட்டத்தில் எம்பி கனிமொழி கலந்து கொள்கிறார். மாவட்ட தலைநகரங்களில் அமைச்சர்கள் இந்த உண்ணாவிரத போராட்டங்களை தொடங்கி வைக்க உள்ளனர். இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடக்க உள்ளது.
முன்னதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நீட் தொடர்பான மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று கோரி, இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications