Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சதி பண்றாங்க".. ஸ்டாலின் காதுக்கு சென்ற புகார்.. 2வது முறையாக "ஸ்டிராங்க்" உத்தரவு.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுக்கு முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். கடந்த ஐடி விங் மாநாட்டில் திமுக நிர்வாகிகளிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன சில விஷயங்களை நேற்று அவர் கடிதம் மூலம் மீண்டும் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

தமிழ்நாட்டில் திமுக தனது ஐடி விங் பிரிவை புனரமைத்து வருகிறது. ஆளும் கட்சியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் திமுக அவ்வளவு வலுவான கட்சி கிடையாது. அதிமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் திமுகவை விட வேகமாக டிரெண்ட் மேற்கொள்ளும் அளவிற்கு ஐடி விங்கை வைத்து இருக்கிறது.

அதோடு பாஜகவும் தமிழ்நாடு சோஷியல் மீடியா களத்தில் மிக வலிமையாக இருக்கிறது. மாறாக திமுக முன்பே ஐடி விங்கை தொடங்கிவிட்டாலும் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சம் வேகம் காட்டி வருகிறது.

திமுக

திமுக

திமுகவின் ஐடி விங் பிரிவு செயலாளராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ராஜினாமா செய்த நிலையில் அந்த பதவிக்கு திமுக சார்பாக மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் வருகைக்கு பின் ஐடி விங் மொத்தமாக மாற்றம் அடையும் என்று கட்சி நிர்வாகிகள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர் . கட்சி தலைமையும் இவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதை முன்னிட்டே ஐடி விங் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனை

ஆலோசனை

டிஆர்பி ராஜா கலந்து கொண்ட மீட்டிங்கில் ஐடி விங் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் பேசினார். இதில் அவர் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு பேசிய விஷயம் "ஃபேக் நியூஸ்".. நிர்வாகிகள் மாநாட்டில் போலி செய்தி குறித்து மீண்டும் மீண்டும் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அதில், நம்ம ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சதி பண்றாங்க.. . தமிழ்நாடு அரசு கடந்த 8 மாதங்களில் பல முக்கியமான சாதனைகளை செய்து உள்ளது. தேசிய அளவில் கவனமும், பாராடுட்ம் பெறும் வகையில் நாம் ஆட்சி நடத்தி வருகிறோம்.

ஸ்டாலின் அறிவுரை

ஸ்டாலின் அறிவுரை

ஆனால் இதை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் நமது ஆட்சியின் சாதனைகளை மறைக்கும் வகையிலும் திசை திருப்பும் வகையில் செயல்படுகிறார்கள். நமக்கு எதிராக வதந்திகளை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். நாம் கோவில்களை இடிப்பதாக பொய் செய்தி பரப்புகிறார்கள். நூற்றுக்கணக்கில் கோவில்களை இடித்துவிட்டோம் என்று பொய் சொல்கிறார்கள். இதை எல்லாம் பொய் என்று நிரூபிக்க வேண்டும். வதந்திகளை நம் முறியடிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

புகார்

புகார்

வாட்ஸ் ஆப்பில் பரவும் சில வதந்திகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் இப்படி வருத்தப்பட்டதாக தெரிகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் மாவட்ட அளவில் நிறைய வாட்ஸ் ஆப் குழுக்கள் உள்ளன. பாஜகவிற்கு இப்படி நிறைய குழுக்கள் உள்ளன. இந்த குழுக்களில் திமுகவிற்கு எதிராக நிறைய செய்திகள் பரவி வருகின்றன. அதேபோல் சில குழுக்களில் திமுகவிற்கு எதிராக பொய்யான செய்திகளும், கோவில் இடிப்பதை பற்றிய நிரூபிக்கப்படாத செய்திகளும் பரவி வருகின்றன.

 வாட்ஸ் ஆப் குழுக்கள்

வாட்ஸ் ஆப் குழுக்கள்

எதிர்க்கட்சிகள் வாட்ஸ் ஆப் குழுக்களில் ஆக்டிவாக இருக்கும் அளவுக்கு திமுக வாட்ஸ் ஆப் குழுக்கள் இயங்கவில்லை. இதை பற்றிய புகார்கள் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் காதுக்கு சென்றதாக கூறப்படுகிறது. முக்கியமாக அறநிலையத்துறை நிர்வாகிகள் இதை பற்றி முதல்வரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. நாம் அறநிலையத்துறை மூலமாக கோவில் நில மீட்பு தொடங்கி கும்பாபிஷேகம் வரை எல்லாம் செய்தோம்.. ஆனாலும் வாட்ஸ் ஆப்பில் பொய்யான செய்திதான் பரவுகிறது என்று புலம்பி இருக்கிறார்களாம்.

இரண்டாவது முறை

இரண்டாவது முறை

நாம் என்ன செய்தும் பயன் இல்லை என்று புலம்பி இருக்கிறார்களாம். இதை தொடர்ந்தே முதல்வர் ஸ்டாலின் ஐடி விங் கூட்டத்தில் வாட்ஸ் ஆப் ஃபேக் நியூஸ் குறித்து பேசி இருக்கிறார். ஐடி விங் மாநாட்டில் திமுக நிர்வாகிகளிடம் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்ட இதே விஷயங்களை நேற்று அவர் கடிதம் மூலம் மீண்டும் கட்சி நிர்வாகிகளுக்கு கடுமையாக அறிவுறுத்தினார். நேற்று முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், வெறும் வாயையே மென்று சுகம் காணும் அவர்களுக்கு, வெல்லமும் அவலும் கலந்து வாயில் போட்டது போலாகிவிடும் என்பதே என் எண்ணம்.

ஆக்கபூர்வம் இல்லை

ஆக்கபூர்வம் இல்லை

மலையளவு பொய்யாக இருந்தாலும், அதை உடைக்க உண்மை ஒன்றே போதும். காற்றேற்றப்பட்ட பலூன், கண்ணுக்குத் தெரியாத குண்டூசி குத்தினாலே, உருத் தெரியாமல் சிதறிவிடும் அல்லவா! நீங்கள் உண்மைகளை மக்களிடம், உரிய வகையில் எடுத்துச் சொன்னாலே போதும்.எந்தவொரு ஆக்கப்பூர்வமான - பொறுப்பான விமர்சனத்தையும் முன்வைக்க முடியாத எதிர்க்கட்சியினர், ஈரைப் பேனாக்கி இட்டுக் கட்டும் வேலையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

வாட்ஸ் ஆப்

வாட்ஸ் ஆப்

புதிய புதிய வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்குங்கள். சாதாரண மக்கள் பார்வையிடும் குடும்ப வாட்ஸ்அப் குழுக்கள், பொதுவான குழுக்கள் ஆகியவற்றில் நமது செய்திகளைக் கச்சிதமாகப் பகிருங்கள். தொலைக்காட்சி ஊடகங்கள், இணையதளங்கள், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றின் வரிசையில் அதிகப்படியான மக்களால் பார்க்கப்படுவதும், படிக்கப்படுவதும், பகிரப்படுவதும் வாட்ஸ்அப் செய்திகள்தான். பொய் சொல்வதற்கே சிலர் கொஞ்சமும் கூச்சப்படாதபோது, உண்மையைப் பேசுவதற்கு நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்?

ஏன் தயக்கம்

ஏன் தயக்கம்

அந்தத் தயக்கத்தைத் தகர்த்தெறிந்து, உண்மையான செய்திகளை உரக்கச் சொல்லி எல்லாருக்கும் கொண்டு சேர்ப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அதன்படி திமுக கட்சி சார்பாக மாவட்டத்தோறும் பல வாட்ஸ் ஆப் குழுக்களை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் பிரச்சாரம் செய்வது, கட்சியை வளர்ப்பது பாஜகவின் கேம் பிளான்களில் ஒன்றாகும்.. அதை தற்போது திமுகவும் கையில் எடுத்துள்ளது.. இது ஆளும் தரப்பிற்கு எந்த அளவிற்கு உதவும் என்பது போக போக தெரியும்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+