பெரிய ட்விஸ்ட்.. ஷகீல் அக்தரை உள்ளே கொண்டு வந்த ஸ்டாலின்.. அப்போ இறையன்பு பதவி.. என்ன நடந்தது?
சென்னை: தமிழ்நாடு மாநில தகவல் ஆணையராக முன்னாள் டிஜிபி எம்.ஷகீல் அக்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளது கோட்டை வட்டாரத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் பதவி இத்தனை நாட்கள் காலியாக இருந்தது. பல ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் நடந்தும் கூட இந்த பொறுப்பிற்கு மட்டும் ஆணையர் நியமனம் நடக்காமல் இருந்தது.
தமிழ்நாட்டின் தலைமை தகவல் ஆணையராக இருந்த ஆர்.ராஜகோபால் பதவிக்காலம் முடிந்த பின் அந்த இடம் நிரப்பப்படாமல் இருந்தது. இவருக்கு கீழ் இயங்கிய தகவல் ஆணையர்களாக இருந்த எஸ்.செல்வராஜ், எஸ்.டி.தமிழ்ச்செல்வன், ஆர்.பிரதாப்குமார், எஸ்.முத்துராஜ், பி.தனசேகரன், எம்.ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலமும் மொத்தமாக முடிவிற்கு வந்தது.

இவர்களின் பதவி மட்டும் நிரப்பப்படாமல் இருந்தது. பொதுவாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிதான் இந்த பொறுப்பிற்கு நியமனம் செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது இந்த பதவிக்கு முக்கியமான மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான ஆலோசனை கடந்த சில நாட்களாக நடந்து வந்தது.
மொத்தமாக தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் தலைமை ஆணையர் மற்றும் 4 ஆணையர்களின் பதவிகள் காலியாக இருந்தன. இந்த பதவிகளை விரைவில் நிரப்பப்பட வேண்டும். பதவிக்குத் தகுதியானவர்களை தேர்வு செய்வதற்காக அக்பர் அலி தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்தது தமிழக அரசு.
தகுதியானவர்களை தேர்வு செய்து அந்த பட்டியலை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்பிப்பது கமிட்டியின் பணி. அந்த வகையில், தகுதியானவர்களை தேர்வு செய்வதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த பதவிகளுக்கு விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்தது அந்த விளம்பரம்.
திமுக, அதிமுக ஆட்சி நடந்த கடந்த காலங்களில் இப்படி கமிட்டியெல்லாம் அமைக்கப்பட்டது கிடையாது ; விளம்பரமும் தரப்பட்டது கிடையாது. முதல்வர் தலைமையில் இயங்கும் குழுவே நேரடியாக பரிசீலித்து தகுதியானவர்களை தேர்வு செய்யும்.
ஆனால், தற்போதைய திமுக ஆட்சியில், கமிட்டி அமைக்கப்பட்டு அந்த கமிட்டி தரும் பட்டியலை வைத்து, இறுதியில் முதல்வர் முடிவு செய்வார் என்கிற நடைமுறையை உயரதிகாரிகள் சிலர் கொண்டு வந்தனர். தகுதியானவர்களை தேர்வு செய்வதற்காக கொடுக்கப்பட்ட விளம்பரம் கூட , ரத்து செய்து, ரத்து செய்து மூன்று முறை விளம்பரம் செய்தனர்.
தலைமை செயலாளர் வெ இறையன்பு இந்த பதவிக்காக விண்ணப்பம் தாக்கல் செய்து இருந்ததாக கூறப்பட்டது. . தற்போது தலைமை செயலாளராக இருக்கும் வெ இறையன்பு இந்த மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் நல்ல அனுபவம் கொண்டவர் என்பதால் அவருக்கு இந்த பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.
இதையடுத்தே அவர் விண்ணப்பம் செய்து இருந்தார். இந்த குழுவில் இடம்பெற அனுபவம் கொண்ட தகுதியானவர்கள் பட்டியலை சமீபத்தில் தேர்வுக் குழு தலைவர் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி டீம் தயார் செய்தது. இறையன்பு பெயரும் இடம்பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.
இறையன்பு தவிர ஐ.பி.எஸ். அதிகாரி ஷகில் அக்தர் உள்பட பலரும் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், கடைசியில் இந்த போட்டியிலிருந்து விலகிக் கொண்டார் இறையன்பு. அவர் தற்போது தலைமை செயலாளராக இருக்கிறார். ஜூன் வரை அவரின் பதவிக்காலம் இருக்கிறது. அதனால், தனது பணி ஓய்வு காலமான ஜூன் மாதம் வரை தலைமைச் செயலாளர் பதவியில் இறையன்பு இருப்பார் .
அதையே முதலமைச்சர் விரும்புகிறார் . அதற்கு முன் இந்த பதவியை பெற வேண்டும் என்றால் அவர் விஆர்எஸ் வாங்க வேண்டும், என்று கோட்டை வட்டாரங்கள் சொல்கின்றன. எனவே அவர் தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பிக்காமல் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார் . இந்த நிலையில், அக்பர் தலைமையிலான கமிட்டி தனது தேர்வு பட்டியலை முதல்வர் ஸ்டாலினிடம் சமீபத்தில் ஒப்படைத்து விட்டது.
இந்த நிலையில்தான் தற்போது முன்னாள் டிஜிபி ஷகில் அக்தர் இந்த பதவியை பெற்றுள்ளார். முன்னாள் ஏடிஜிபிக்கள் தாமரைக்கண்ணன், பிரியாகுமார் உள்ளிட்டோர் ஆணையர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
முன்னாள் டிஜிபி ஷகில் அக்தர் இந்த பதவியை பெற்ற நிலையில் ஓய்வு பெற உள்ள இறையன்புவிற்கு என்ன பதவி கொடுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications