தஞ்சையில் தலைதூக்கும் கொரோனா கேஸ்கள்.. அதிர வைக்கும் காரணம்.. ராதாகிருஷ்ணன் ஆய்வில் தகவல்
சென்னை: தஞ்சாவூரில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க காரணம் என்ன என்பது ஆய்வின் போது தெரியவந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது. கொங்கு மண்டலத்தில் குறையாமல் இருந்த நிலையில் தற்போது அதுவும் குறைந்துவிட்டது.
ஆனால் டெல்டா மண்டலமான தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 29 ஆம் தேதி தஞ்சையில் 215 பேருக்கும், அடுத்த நாள் 30-ஆம் தேதி 197 பேருக்கும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டது.

விளக்கம்
இந்த நிலையில் நேற்று முன் தினம் 248 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அது போல் நேற்றைய தினம் 239 பேர் புதிதாக தஞ்சாவூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுகுறித்து சென்னையில் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

கவனம்
அவர் கூறுகையில் வரும் மாதங்களில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். பொது இடங்களில் மக்கள் எச்சில் துப்பக் கூடாது. மக்கள் வெளியே வரும்போது முகக் கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கொரோனா இறப்பு எண்ணிக்கையை தமிழ்நாடு அரசு மறைக்கவில்லை.

கொரோனா
டெங்குவை எப்படி ஒழித்தோமோ அதைப் போல் கொரோனாவை ஒழிக்க செயல்பட வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு செய்த போது அங்கு யாரும் முகக் கவசம் அணியாதது தெரிந்தது. டெல்டா பிளஸ் மட்டுமின்றி அனைத்து வகையான தொற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.

அபராதம்
முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. எனினும் தமிழகத்தில் சில இடங்களில் மக்கள் முகக் கவசம் அணிவதில்லை. இதனால் நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. தற்போது டெல்டா + மற்றும் 3ஆவது அலைக்கு இந்தியா ஆயத்தமாகி வரும் நிலையில் முகக் கவசம் அணியாமல் தொற்றை மேலும் மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications