சட்டென கண்கள் சிவக்க.. நான் உள்ளே போவட்டுமா? பிரஸ் மீட்டிற்கு முன் முகத்தை சுளித்த ரஜினி! என்னாச்சு?
சென்னை: சென்னையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திக்கும் முன் கோபமாக காணப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
நடிகர் ரஜினிகாந்த் ஆளுநர் ஆர். என் ரவி இடையே நடைபெற்ற சந்திப்புதான் இன்று தமிழ்நாட்டில் ஹாட் டாப்பிக். அரசியலில் இருந்து கடந்த சில மாதங்களாக ஒதுங்கி இருந்த ரஜினிகாந்த் மீண்டும்.. தமிழ்நாடு அரசியலில் கவனம் பெற்றுள்ளார்.
இன்று ஆளுநரை சந்தித்து சுமார் 30 நிமிடங்கள் ரஜினிகாந்த் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்தவர்.. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இருந்தாலும் இதில் அரசியல் பேசினோம். ஆனால் அதை பற்றி உங்களிடம் சொல்ல முடியாது என்றார்.
அவரின் இந்த பேட்டி பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.

என்ன சொன்னார்
நாடாளுமன்ற தேர்தல், ஜிஎஸ்டி குறித்த கேள்விகளுக்கு இன்று ரஜினிகாந்த் பதில் அளிக்க மறுத்துவிட்டார். தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் இருக்கும் ஆன்மீக உணர்வு ஆளுநர் ரவிக்கு பிடித்து இருக்கிறது. . தமிழ்நாட்டின் நன்மைக்காக நான் என்ன செய்யவும் தயாராக இருக்கிறேன் என்று அவர் என்னிடம் தெரிவித்தார். அரசியல் பற்றிய திட்டம் என்னிடம் எதுவும் இல்லை என்று ரஜினிகாந்த் கூறினார். இவர் பேட்டி வைரல் ஆனாலும்.. அவர் பேட்டிக்கு முன் நடந்து கொண்ட விதமும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பிரஸ் மீட்
இன்று பிரஸ் மீட்டில் ரஜினிகாந்த் கலந்து கொள்வதற்கு முன்பாக அவர் கோபமாக காணப்பட்டார். மாஸ்க்கை அணிந்து கொண்டு வீட்டு வாசலுக்கு வந்த ரஜினிகாந்த் அங்கு செய்தியாளர்களை தள்ளி நிற்கும்படி கூறினார். மாஸ்க்கை கழற்றி பேச வேண்டும் என்பதற்காக அவர் செய்தியாளர்களை தள்ளி நிற்கும்படி சைகை செய்தார். ஆனால் செய்தியாளர்கள் தள்ளி நிற்காமல் முன்னே முன்னே வந்து கொண்டு இருந்தனர். அங்கு நிறைய செய்தியாளர்கள் இருந்தனர்.

ரஜினி அருகே சென்றனர்
இதனால் ஒருவரை ஒருவர் தள்ளி அவர்கள் முண்டியடித்துக்கொண்டு ரஜினி அருகே சென்றனர். ரஜினிகாந்த் மீண்டும் கைகளால் பின்னால் செல்லுங்கள் பின்னால் செல்லுங்கள் என்பது போல அசைத்தார். ஆனால் செய்தியாளர்களால் கூட்டம் காரணமாக பின்னால் செல்ல முடியவில்லை. இதை பார்த்ததும் ரஜினிகாந்த் லேசாக கோபம் அடைந்தார். அதோடு முகத்தையும் சுளித்துக்கொண்டார்.

வீட்டிற்கு போக முயன்றார்
சட்டென திரும்பி வீட்டிற்குள் செல்ல முயன்றார். நான் உள்ளே போகட்டுமா என்பதை போல கேட்டிற்கு உள்ளே திரும்பிக்கொண்டு செல்ல முயன்றார். பின்னால் திரும்பி ரஜினிகாந்த் செல்ல முயன்றதும் செய்தியாளர்கள்.. சார்.. சார் வேண்டாம் .. ஓகே ஓகே சார்.. என்று கூறி பின்னால் நகர்ந்து சென்று நின்றனர். இதன்பின்பே ரஜினிகாந்த் கோபம் தணிந்து மீண்டும் வந்து செய்தியாளர்களிடம் பேசினார். இவர் மாஸ்க்கை கழற்றினாலும் வெளியே வைத்து மறைத்தபடி பேசியது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications