அம்பேத்கார் டூ திருமா! விஜய் எடுக்கும் அதிரடி அரசியல் ரூட்! எதிர்பார்க்கவே இல்லை! இப்படி ஒரு பிளானா?
சென்னை: நடிகர் விஜய் அரசியல் ரீதியாக முக்கியமான சில திட்டங்களை வகுத்து வருகிறாராம். முக்கியமாக கொள்கை ரீதியாக தன்னுடைய கட்சி எப்படி இருக்க வேண்டும் என்றும் விஜய் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறாராம்.
சேரி இல்லா ஊருக்குள்ள பொறக்க வேண்டும் பேரப்பிள்ளை, தீ பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து என்பது தொடங்கி பல இடங்களில் நடிகர் விஜய் ஜாதிக்கு எதிராக சினிமாவில் பாடல்கள் மூலம், வசனங்கள் மூலம் குரல் கொடுத்துள்ளார். இந்த நிலையில்தான் அரசியலில் கால் பதிக்க உள்ள விஜய் அதிலும் ஜாதியத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது அவரின் அரசியல் கொள்கை சமூக நீதி, தீண்டாமை எதிர்ப்பு, சம உரிமையை மையப்படுத்தி வகுக்கப்படும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக பெரும்பாலும் லெப்ட் லீனிங்.. அதாவது இடதுசாரி தத்துவத்திற்கு நெருக்கமான தத்துவமாக அவரின் அரசியல் கொள்கை இருக்கும் என்று விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் நம்மிடம் தெரிவித்துள்ளன.
விஜய் தொடங்க போகும் கட்சிக்கான கொள்கைகள் உருவாக்கப்பட்டு வருகிறதாம். தமிழ்நாட்டில் வலதுசாரி அரசியல் எடுபடாது என்பதால், இந்த நிலைப்பாட்டை விஜய் எடுக்க வாய்ப்பு உள்ளதாக அவருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் பெரியாரியம் பேச திமுக இருந்தாலும் அம்பேத்காரிசம் பேச பெரிதாக கட்சிகள் இல்லை.
விடுதலை சிறுத்தைகள் தவிர வேறு கட்சிகள் இல்லாது. இந்த நிலையில்தான் விஜய் அரசியலில் அம்பேத்காரிசம் அதிகமாக இருக்கும் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் கூறுகின்றன.
அம்பத்கார் பற்றி பேச்சு: விஜய் அரசியலுக்கு வருவதற்காக அதிரடி திட்டங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் 12 மற்றும் 10 ஆம்வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு சிறப்பு பரிசுகளை நடிகர் விஜய் வழங்கினார். 1500 மாணவர்களை சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு பரிசுகளை நடிகர் விஜய் அளித்தார். இதற்காக சென்னையில் தனியார் மகால் ஒன்றில் பிரம்மாண்ட கூட்டம் ஒன்றையும் நடத்தினார். அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இந்த கல்வி நிதி வழங்கும் விழா நடந்தது. இதில் பேசிய அவர், வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உன்னில் என்னை காண்பது போல உள்ளது.
படிப்பை மட்டும் உன்னிடம் இருந்து எடுக்க முடியாது என்ற வசனம் கவர்ந்தது. படிப்பை தாண்டி என்ன பேசுவது என்று தெரியவில்லை, என்று கூறினார். இந்த நிகழ்வில் அவர் பேசிய விஷயங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. முக்கியமாக பெரியார், அண்ணா, அம்பேத்கார், காமராஜரை மாணவர்கள் படிக்க வேண்டும். புதிய நல்ல தலைவர்களை வருங்கால வாக்காளர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
திருமா: அப்போதே அம்பேத்கார் பற்றி பேசிய விஜய் தற்போது விசிக தலைவர் எம்பி திருமாவளவனுக்கு போன் செய்து பிறந்த நாள் வாழ்த்தும் கூறி உள்ளார். இது பற்றி விஜய்க்கு நெருக்கமானவர்கள் நம்மிடம் பேசுகையில், விஜய் பொதுவாக இப்படி அரசியல் தலைவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல மாட்டார்.
ஆனால் திருமாவின் அரசியல் விஜய்க்கு பிடிக்கும். அதனால் அவருக்கு வாழ்த்து சொன்னார். இந்த வாழ்த்து காரணமாக திருமா மகிழ்ச்சி அடைந்து உள்ளார், என்று தெரிவித்துள்ளனர். விஜயின் இந்த செயல் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
அரசியல் வருகை: தமிழ்நாட்டில் கடந்த 2021ல் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் போட்டியிட்டனர். ஊரக உள்ளாட்சி தேர்தல் என்பதால் இவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். விஜய் மக்கள் இயக்க கொடியை வைத்தும், விஜய்யின் புகைப்படத்தை வைத்தும் பிரச்சாரம் செய்ய விஜய் மக்கள் இயக்கம் வேட்பாளர்களுக்கு அனுமதி அளித்து இருந்தது.
மொத்தம் 169 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். அதாவது மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் , ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் , பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல்களில் இவர்கள் போட்டியிட்டனர்.
இதில் மாவட்ட கவுன்சிலர் , ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி எதிலும் விஜய் மக்கள் இயக்கம் வெற்றிபெறவில்லை. மற்றபடி பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கான தேர்தலில் மக்கள் இயக்க நிர்வாகிகள் பலர் வென்றனர். இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தமாக 77 பேர் வெற்றி பெற்றுள்ளதாக விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். சுயேச்சையாக போட்டியிட்டு பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி உட்பட 77 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் இதன் மூலம் விஜய் மக்கள் இயக்கம் புதிய சாதனை படைத்து இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
-
விஜய்க்கு எதிராக களமிறங்கும் பாமக.. தேர்தலில் போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? எடப்பாடி அறிவிப்பு -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா!











Click it and Unblock the Notifications