தோட்டத்தில் "தலைவரை" தனியாக சந்தித்து பேசிய புள்ளி.. என்னாக போகுதோ.. பொங்கி வழிந்த மகிழ்ச்சி
தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை சந்தித்து பேசினார் சிவி சண்முகம்
சென்னை: அரசியலில் திடீர் திடீர் என சில அதிசயங்கள் எல்லாம் நடக்கும்.. அப்படி ஒரு நெகிழ்ச்சி தருணம்தான் தைலாபுரத்தில் நடந்துள்ளது..!
ஒரு குட்டி பிளாஷ் இருக்கு.. பார்ப்போம்..!
சிவி சண்முகம் - பாமக இடையே எப்போதுமே சுமூக உறவு இருந்தது இல்லை.. கிட்டத்தட்ட 15 வருட பகை என்றே கூறப்பட்டது.
கடந்த 2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தது பாமக... அந்தத் தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்க, முக்கிய காரணமாக இருந்தவர் டாக்டர் ராமதாஸ்.

ராமதாஸ்
இதன்காரணமாக, ஜெயலலிதாவிடம் அப்போதைய நேரத்தில் மதிப்புமிக்கத் தலைவராகவும் இருந்தார்.. அந்த நேரம் பார்த்து, அமைச்சரவையில் விழுப்புரம் மாவட்டத்தில் யாருக்கு இடமளிக்கலாம் என்று யோசித்து கொண்டிருந்தார் ஜெயலலிதா.. பிறகு, ஆரணி ஏழுமலையின் பெயரை டிக் செய்துவிட்டார்.. ஆனால், இந்த விஷயம் தெரிந்த, சிவி சண்முகம், ராமதாஸிடம் சென்று இதுகுறித்து பேசினார்...

அமைச்சர் பதவி
ராமதாஸும், நண்பருமான சண்முகத்துக்காக ஜெயலலிதாவிடம் சிபாரிசு செய்தார் ராமதாஸ். இதையடுத்து ஏழுமலைக்கு பதிலாக சண்முகம் அமைச்சரானார்.. வணிக வரித்துறைக்கு அமைச்சரானார்... இதற்குப் பிறகு ராமதாஸுக்கும் சிவி சண்முகத்துக்குமான இனப்பற்று நெருக்கமானது. ஆனால், 2006ல் மறுபடியும் ஒரு பிரச்சனை எழுந்தது.. சட்டப்பேரவை தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்டார்... அப்போது, திமுக கூட்டணியில் திண்டிவனம் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது.

கருணாநிதி
அந்த தேர்தலில், சண்முகம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளரான கருணாநிதியை வீழ்த்தினார்.. இதையடுத்து, தேர்தல் முடிவுகள் வெளியான அன்று சி.வி. சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் வீட்டிலிருந்தபோது, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவர் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் இருந்து சிவி சண்முகம் உயிர் தப்பினாலும், அவரின் ஆதரவாளரான முருகானந்தம் கொலை செய்யப்பட்டார்...

தைலாபுரம் விருந்து
ராமதாஸ், அன்புமணி மீது குற்றச்சாட்டு, கொலை முயற்சி தாக்குதலுக்கு பாமகவினர்தான் காரணம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பாமக தலைமை நிலைய செயலாளருமான கருணாநிதி உள்பட 26 பேரின் மீது சிவி சண்முகம் புகார் அளித்தார். அப்போது ஆரம்பித்ததுதான் பஞ்சாயத்து.. இதற்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி பாமகவுடன் கூட்டணி வைத்த சமயம், கூட்டணி உறவை மேலும் வலுப்படுத்த தைலாபுரம் தோட்டத்தில் முதல்வர் உள்ளிட்ட தனது கூட்டணி சொந்தங்களுக்கு விருந்து கொடுத்து அசத்தினார் டாக்டர் ராமதாஸ்

விரோதம்
அந்த விருந்துக்கு போகவே மாட்டேன் என்ற சூளுரைத்து கொண்டிருந்த, சிவி சண்முகம், இறுதியில் கலந்து கொண்டது நெகிழ்ச்சியாகவே பார்க்கப்பட்டது.. அதேசமயம், எதையாவது கொளுத்தி போட்டு, சர்ச்சையில் சிக்கி கொள்பவராக சண்முகம் அறியப்பட்டு வந்தார்.. எனினும், விழுப்புரம் அதிமுகவையே பல காலமாக தன் கைப்பிடிக்குள் வைத்திருப்பதாலும், வன்னியர் சமூகத்தின் வாக்குகளை, பெரும்பாலான தேர்தல்களில் அள்ளுவதாலும், எடப்பாடிக்கு மிகவும் விசுவாசமான மற்றும் நெருக்கமான ஆதரவாளராகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.. சசிகலாவை, எடப்பாடியைவிட சிவி சண்முகம் எதிர்த்ததுதான் அதிகம்.. இதையெல்லாம் கணக்கு செய்தே இந்த முறை எம்பி பதவி தரப்பட்டது சண்முகத்துக்கு.

டாமினேட்
இதனிடையே திமுக பலம் பொருந்தி மேலெழுந்துவிட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.. பாஜக ஒருபக்கம் அதிமுகவை டாமினேட் செய்து கொண்டிருக்கும் சூழலில், பாஜகவை ஓபனாகவே அட்டாக் செய்ய ஆரம்பித்துள்ளது பாமக.. "பாமக இளைஞர்கள் பாஜகவில் இணைந்துவிடாமல் பார்த்து கொள்ளுங்கள்" என்று நிர்வாகிகளுக்கு டாக்டர் ஐயா உத்தரவு போடும் நிலைமை வந்துள்ளது.. அதேபோல, அதிமுகவின் 2ம்கட்ட தலைவர்களும், தங்கள் அதிருப்தியை, எதிர்ப்புகளை பாஜக மீது காட்டி வருகிறார்கள்.

தைலாபுரம்
இப்படிப்பட்ட சூழலில்தான், தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாசை சிவி சண்முகம் சந்தித்து பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றே கூறப்படுகிறது.. அப்போது டாக்டர் ராமதாஸ் சிவி சண்முகத்துக்கு பூங்கொத்து, சால்வை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்... அதன்பிறகு 2 பேரும் தனியாக அரசியல் நிலவரம் குறித்து சிறிது நேரம் பேசினர்.. ஆனால், என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை..

எடப்பாடி பழனிசாமி
இருந்தாலும், பாமக தலைவரானதும் அன்புமணி, எடப்பாடியை மட்டுமல்லாமல் முதல்வர் ஸ்டாலினையும் சந்தித்து ஆசி பெற்றார்.. அதேபோல ஆயிரம் பிரச்சனைகள், பகைகள் இருந்தாலும் மூத்த தலைவர் ராமதாஸை சந்தித்து சிவி சண்முகம் வாழ்த்து பெறுவதும், மிகுந்த கவனத்தை ஈர்த்து வருகிறது.. எவ்வளவுதான் கருத்து மோதல்கள் ஒருவர் மீது இன்னொருவருக்கு இருந்தாலும், தமிழகத்தில் நாகரீக அரசியல் ஒரேடியாக மக்கி போய்விடவில்லை என்பதும், அது இதுபோன்ற ஏதாவது ஒரு தருணத்தில் அடிக்கடி துளிர்த்து கொண்டே இருக்கிறது என்பதும் தெரியவருகிறது..!
-
சீட் தரேன்.. யாராவது இருக்கீங்களா? தேடி தேடி ஆள் பிடிக்கும் ராமதாஸ்.. இப்படி ஒரு மோசமான நிலையா? -
சினிமாவில் சிகரெட் தடை டூ ‘மாற்றம் முன்னேற்றம்’ வரை - 2016இல் அன்புமணி செய்த கார்ப்பரேட் பிரச்சாரம் -
“மாம்பழத்தை ஜூஸ் ஆக்கிவிடாதீர்கள்..” பாமக வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து! -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications