Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆணவம்.. சென்னைக்கு பெரிய திட்டத்தோடு வந்த மகா விஷ்ணு.. முன்கூட்டியே கண்டுபிடித்த போலீஸ்.. திடுக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மூடநம்பிக்கை பேச்சாளர், போலி சாமியார் மகா விஷ்ணுவை கைது செய்து போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சிறப்பு விருந்தினர் மகாவிஷ்ணுவின் பேச்சு.. தமிழ்நாடு முழுக்க சர்ச்சையாகி உள்ளது. மூட நம்பிக்கையை தூண்டும் வகையில் பேசியது மட்டுமன்றி.. அரசு பள்ளி ஆசிரியரை அவமானப்படுத்தியதும் கண்டனங்களை சந்தித்து வருகிறது. மூடநம்பிக்கைப் பேச்சாளர் மகாவிஷ்ணுவை தமிழ்நாடு முழுக்க மக்கள் பலரும் கண்டித்து வருகின்றனர்.

tamilnadu anbil mahesh poyyamozhi

சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் மகாவிஷ்ணு எனும் பேச்சாளரை அழைத்து வந்து பேச வைத்துள்ளனர். இதில்தான் அவர் மூடநம்பிக்கையை தூண்டும் வகையில் பேசி உள்ளார். அதோடு அங்கே இருந்த பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவரையும் அவமானப்படுத்தி உள்ளார்.

இவரை மேடையிலேயே சங்கர் என்ற ஆசிரியர் ஒருவர் மட்டும் எதிர்த்து பேசிய சம்பவமும் கவனம் பெற்றுள்ளது. சங்கர் என்ற இந்த பார்வையற்ற ஆசிரியரை அங்கேயே மகா விஷ்ணு கிண்டல் செய்யும் வகையில் அவமானப்படுத்தி உள்ளார். ஆசிரியர் சங்கர் தமிழ்நாடு முழுக்க பாராட்டுகளை பெற்று வருகிறார். நேற்று கூட ஆசிரியர் சங்கருக்கு சால்வை அணிவித்து மேடையில் அமரவைத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கைது நடவடிக்கை: சர்ச்சைக்குரிய வகையில் பள்ளியில் பேசிய மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். முன்ஜென்ம பாவ, புண்ணியத்தால்தான் மாற்றுத்திறனாளிகளாக பிறக்கிறார்கள் என அவர் பேசியது எங்களுக்கு எதிரான வன்செயலாக கருதுகிறோம் என்று இந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில்தான் ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மூடநம்பிக்கை பேச்சாளர், போலி சாமியார் மகா விஷ்ணுவை கைது செய்து போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மகா விஷ்ணு முக்கியமான திட்டம் ஒன்றுடன் வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதன்படி விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்திக்கலாம். அதில் திமிராக பேசுவதோடு.. தன்னுடைய பேச்சு இந்து மத கருத்துக்களோடு ஒப்பிட்டு பேசி, பிரச்னையை திசை திருப்பலாம் என்று முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன் போலீசார் அவரை தூக்கி உள்ளனர்.

அவர் செய்தியாளர்களை சந்தித்து சர்ச்சையை கிளப்புவார் என்று போலீசார் யூகித்த நிலையில்தான் அவரை ஏர்போர்ட் உள்ளேயே வைத்து கைது செய்தனர். அதோடு அங்கேயே வைத்து அவரிடம் நீண்ட நேரம் விசாரணையையும் செய்துள்ளனர்.

பணியிட மாற்றம்: பள்ளியில் பிற்போக்குத்தனமான சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்த விவகாரத்தில் அரசு முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்விவகாரத்தில் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

என் ஏரியாவுக்குள்ள வந்து என்னுடைய ஆசிரியரை அவமானப்படுத்திட்டு போயிருக்க.. உன்னை அவ்வளவு சீக்கிரம் சும்மா விடமாட்டேன் என்று அந்த மூடநம்பிக்கைப் பேச்சாளர் மகாவிஷ்ணுவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்து உள்ளார். உன்னை சும்மா விட மாட்டேன் என்று எச்சரித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+