Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"2 தலைகள்".. பாஜகவின் பிளானே இதுதானாமே.. டென்ஷனில் அறிவாலயம்.. கடுப்பான எடப்பாடி

2 துறைகளின் ஊழல்களை நாளைய தினம் அண்ணாமலை அம்பலப்படுத்துவாரா

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரண்டு துறைகளின் ஊழல் ஆதாரங்களை 3 அல்லது 4ம் தேதி வெளியிட போகிறோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளதையடுத்து, திமுகவில் லேசான பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.. இதையடுத்து அவருக்கு பதிலடியை தரவும் திமுக தயாராகி வருகிறதாம். ஊழல் பட்டியல் வெளியிடுவதன் மூலம் திமுக தலைமையிலான அரசு திருந்திக் கொள்ள வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.

மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செய்து, அதன்மூலம் மக்களை கவர்ந்திழுத்து, ஒவ்வொரு தேர்தலிலும் பெரும்பான்மை இடங்களை பிடிப்பது என்பது ஒருவகை.. ஆளும் தரப்பை மட்டுமே குறிவைத்து, ஆளும் கட்சியை மட்டுமே விமர்சித்து, புகார்களை கூறி, அதன்மூலம் தங்களை நிலைநிறுத்தி கொள்ள முயல்வது இன்னொரு வகை.

அப்படித்தான், தமிழக பாஜகவும் அரசியல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.. சில தினங்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு பேட்டி தந்திருந்தார்.

2 பேர் யார்?

2 பேர் யார்?

அதில், ஊழல் செய்த 2 திமுக அமைச்சர்களின் பெயர்களை அறிவிக்க போவதாக கூறியிருந்தார்.. இதை கேள்விப்பட்டதில் இருந்து திமுக கலங்கி போனது.. அந்த 2 பேர் யார்? ஒருவேளை நம் மாவட்டத்தை சார்ந்த அமைச்சராக இருக்குமோ? என்ற பீதி கிளம்பியது.. நேற்றைய தினம் திருச்சியல் அண்ணாமலை பேட்டி தந்து கொண்டிருந்தபோது, ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.. "ஊழல் புரிந்த 2 திமுக அமைச்சர்கள் பெயர்களை வெளியிட போவதாக சொன்னீங்களே? நிஜமாகவே சொன்னீங்களா? அல்லது மிரட்டல் விடுக்க சொன்னீங்களா? என்று கேட்டார்.

ரிலீஸ் பண்றோம்

ரிலீஸ் பண்றோம்

அதற்கு அண்ணாமலை, "நான்தான் சொல்றேன்னு சொல்லிட்டேனே.. இரண்டு துறைகளின் ஊழல் ஆதாரங்களை வரும் 3 அல்லது 4ம் தேதி வெளியிட உள்ளோம்... இது மிரட்டல் இல்லை.. திமுக 3,4ம் தேதி ரிலீஸ் பண்ண போறோம்.. அன்னைக்கு பிரஸ்மீட் வைக்கிறேன்.. ஆதாரத்தோடு ஊழல்களை அறிவிக்க போகிறேன்.. பார்த்துட்டே இருங்க.. நான் என்ன செய்ய போறேன்னு.. ஊழல் பட்டியல் வெளியிடுவதன் மூலம் திமுக தலைமையிலான அரசு திருத்திக் கொள்ள வேண்டும்.. மற்றபடி திமுக ஆட்சியைக் கவிழ்ப்பது எங்கள் நோக்கம் கிடையாது" என்றார் அண்ணாமலை.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இந்த முறை அட்சி அமைத்ததில் இருந்து, திமுக மீதான ஊழல் புகாரை முதன்முதலில் கையில் எடுத்தது எடப்பாடி பழனிசாமிதான்.. பொங்கல் தொகுப்பில் ஊழல் என்று ஆரம்பித்தவர், ஒவ்வொரு துறை ரீதியாகவும் திமுகவை டேமேஜ் செய்து கொண்டே இருந்தார்.. ஆனால், நாளுக்கு நாள் கொடநாடு விவகாரம், ஜெ.மரணம் தொடர்பான விசாரணை என நெருக்கடிகள் சூழவும், அதை சமாளிக்கவே பெரும்பாலும் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.. இதுபோக, சசியின் ஆளுமை, ஓபிஎஸ்ஸின் சைலண்ட் யுத்தம், போன்ற உட்கட்சி விவகாரங்களிலும் தீவிரம் காட்ட வேண்டிய நிலைமைக்கு ஆளாகினார்.

கெட்ட பெயர்

கெட்ட பெயர்

இந்த சந்தர்ப்பத்தைதான் தமிழக பாஜக பயன்படுத்தி கொண்டது.. திமுகவின் ஊழல் குறித்து நாங்கள் அறிவிக்க போகிறோம் என்ற அறிவிப்பையும் வெளியிட ஆரம்பித்தது.. நேற்றைய தினம், அதற்கான நாளையும் அண்ணாமலை குறித்தது பலரது கவனத்தை ஈர்த்தும் வருகிறது.. அதுமட்டுமல்ல, நாளை மறைந்த கருணாநிதியின் பிறந்த நாள் என்பதால், அதனை கொண்டாட ஒட்டுமொத்த திமுகவும் தயாராகி கொண்டிருக்கிறது.. அதனாலேயே, நாளைய தினத்தை அண்ணாமலை தேர்ந்தெடுத்திருக்கலாம், திமுகவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தவே இப்படி பிளான் இருக்கலாம் என்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இதனிடையே, தங்களின் பிரதான எதிர்க்கட்சி வேலையை பாஜக செய்து கொண்டிருப்பது, அதிமுகவுக்கே எரிச்சலை தந்து வருகிறதாம்.. அதனாலேயே அதன் தலையில் கொட்டு வைக்க பொன்னையன் "வார்த்தையை" விட்டதாக சொல்கிறார்கள்.. எனினும், அண்ணாமலை 3வது முறையாக இந்த ஊழல் புகாரை கிளப்பி உள்ளது, திமுகவுக்கே சற்று ஷாக் ஆக இருக்கிறதாம்.. யார் பெயரை அண்ணாமலை சொல்ல போகிறார் என்று தெரியாவிட்டாலும், அவருக்கு பதிலடி தர, அறிவாலயம் மும்முரமாகி கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.. எனினும் நாளைய தினம், கருணாநிதி பிறந்த நாளில் என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+