பாஜக உள்ளேயே உருவான 2 குரூப்.. அறிவிக்கப்பட்ட "போர் நிறுத்தம்".. அண்ணாமலை பேசுனதை கவனிச்சீங்களா?
சென்னை: பாஜக பற்றி பேச கூடாது, பாஜகவை விமர்சனம் செய்ய கூடாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். தற்போது அண்ணாமலை அதிமுக பற்றி பேசாமல் தவிர்த்து உள்ளார், என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் பேட்டி அளித்துள்ளார்.
நேற்று பாஜக உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும். கூட்டணியில் இருந்து போனால் போகட்டும், அது அவர்களது விருப்பம். கூட்டணி விவகாரம் குறித்து பாஜக தலைமை தான் முடிவு எடுக்கும். நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன். இனி டெல்லி முடிவு எடுக்கட்டும். தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அண்ணாமலை தனது பேச்சில் குறிப்பிட்டார்.

இதையடுத்து அண்ணாமலை பேச்சு குறித்து மூத்த பத்திரிகையாளர் பிரியன் பேட்டி அளித்துள்ளார். ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், என்டிஏவில் சில கட்சிகள் வருகிறது.. சில கட்சிகள் போகிறது .. தேசிய தலைமைதான் இதில் முடிவு எடுக்கும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். கூட்டணி பற்றி எல்லாம் தேசிய தலைமையே முடிவு செய்யும் என்று அவர் கூறியுள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அவர் அதிமுக பற்றி இங்கே பேசவில்லை. அதிமுக என்ற பெயரை நேரடியாக சொல்லவில்லை. அதிமுக கூட்டணி பற்றி டெல்லி யோசிக்கும் என்று அவர் சொல்லவில்லை. அதேபோல் அண்ணாமலை அண்ணா பற்றியும் பேசவில்லை.
அண்ணா குறித்த கருத்திற்கு அவர் பதில் சொல்லவில்லை. பதில் சொல்ல முடியாது என்று தவிர்த்துவிட்டார். பாஜகவிற்கு - திமுகவிற்கு நேரடியாக போட்டி என்று மட்டுமே கூறியுள்ளார். அதிமுகவை பிரிந்து உள்ள நிலையில் பாஜகவை முன்னிறுத்தி பேசி உள்ளார். அதிமுக இல்லாத நிலையில் பாஜகவை அவர் முன்னிறுத்தலாம். அதில் தவறு இல்லை. ஒரு மாநில தலைவராக அவர் பேசலாம். அவர் பாஜக - திமுக இடையே போட்டி என்பதில் தவறு இல்லை.

இது ஒரு பக்கம் போர் நிறுத்தம் என்றும் கூட கூறலாம். அதாவது அதிமுக - பாஜக இடையிலான போர் நிறுத்தம் என்று கூறலாம். ஏற்கனவே பாஜக பற்றி பேச கூடாது, பாஜகவை விமர்சனம் செய்ய கூடாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். தற்போது அண்ணாமலை அதிமுக பற்றி பேசாமல் தவிர்த்து உள்ளார்;. கூட்டணி பற்றி பேசாமல் தவிர்த்து உள்ளார். இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் விமர்சனம் செய்யாமல் தவிர்த்து உள்ளார். அதனால் இதில் பிரச்சனை இல்லை என்றே நினைக்கிறேன்.
இன்னொரு பக்கம் மோடியை எடப்பாடி எதிர்க்க மாட்டார். பாஜக தலைவர்களை எடப்பாடி எதிர்க்க மாட்டார். அப்படி இருப்பதால் அண்ணாமலையும் இங்கே அதிமுகவை எதிர்க்க மாட்டார். அதிலும் அதிமுகவின் ஊழல் பற்றி கேள்விக்கும் கூட அண்ணாமலை பதில் அளிக்கவில்லை. அதனால் தேர்தல் நேரத்தில் இவர்கள் என்ன செய்வார்கள். கூட்டணி வைப்பார்களா? கூட்டணி தொடருமா ? தேர்தல் நேரத்தில் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நேற்று இரண்டு பிரஸ் மீட் நடந்துள்ளது. பாஜக உள்ளேயே இரண்டு குழுக்கள் உள்ளன. அண்ணாமலை காரணமாகவே கூட்டணி முறிந்தது. நன்றாக சென்ற கூட்டணியை உடைத்துவிட்டார் என்று சிலர் நினைக்கின்றனர். அதனால் அண்ணாமலை மீது கோபத்தில் உள்ளனர். சில சீனியர்கள் அண்ணாமலை மீது கோபத்தில் உள்ளனர். இன்னொரு பக்கம் பாஜக கூட்டணி முறிந்தது சரியே என்று சில தலைவர்கள் நினைக்கின்றனர். அதேபோல் அதிமுகவில் பாஜக ஆதரவு கோஷ்டி உள்ளது.
அதிமுகவில் உள்ளவர்கள் பாஜகவை விமர்சனம் செய்யாமல் இருக்கின்றனர். இரண்டு பக்கமும் இதனால் கூட்டணியில் குழப்பங்கள் உள்ளன. இப்போதைக்கு இருப்பது கூட்டணி குழப்பத்தில் சிறிய போர் நிறுத்தம்தான், என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் பேட்டி அளித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications