ஜெயிச்சே ஆகணும்.. இதுவரை இல்லாத முக்கியத்துவம்.. டாப் தலைகளை எல்லாம் தமிழகத்தில் இறக்கிய பாஜக.. ஏன்?
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக சார்பாக நாடாளுமன்ற தேர்தலுக்கு அதி முக்கியமான வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர். பாஜகவின் இந்த தீவிர வேட்பாளர் தேர்வு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
2024 லோக்சபா தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு அடிப்படையில் பார்த்தால் திமுக பெரும்பாலும் சிட்டிங் எம்பிக்கள் + புதியவர்கள் என்று களமிறக்கி உள்ளது. அதிமுக பெரும்பாலும் கட்சியின் புது முகங்களை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.

பாஜகவோ கட்சியின் பெரிய டாப்போ முகங்கள் எல்லோரையும் களமிறக்கிவிட்டது. எச். ராஜா தவிர கட்சியின் பிரபல முகங்கள் எல்லோரும் களமிறக்கப்பட்டுவிட்டனர்.
தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுக்கான பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. இது தேசிய அளவில் பாஜகவின் மூன்றாவது வேட்பாளர் பட்டியல் ஆகும்.
தென்சென்னை - தமிழிசை
மத்திய சென்னை - வினோஜ் செல்வம்
வேலூர் - ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி)
கிருஷ்ணகிரி - நரசிம்மன்
நீலகிரி - எல்.முருகன்
கோவை - அண்ணாமலை
பெரம்பலூர் - பாரிவேந்தர் (இ.ஜ.க)_
நெல்லை- நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரி - பொன் ராதாகிருஷ்ணன்
இன்று மீதம் உள்ள தொகுதிகளுக்கான பாஜகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்
1) திருவள்ளூர் - பாலகணபதி
2) வட சென்னை - பால் கனகராஜ்
3) திருவண்ணாமலை - அஸ்வத்தாமன்
4) நாமக்கல் - கே.பி.ராமலிங்கம்
5) திருப்பூர் - முருகானந்தம்
6) பொள்ளாச்சி - வசந்தராஜன்
7) கரூர் - செந்தில்நாதன்
8) சிதம்பரம் - கார்த்தியாயினி
9) நாகை - எஸ்.ஜி.எம்.ரமேஷ்
10) தஞ்சை - எம்.முருகானந்தம்
11) சிவகங்கை - தேவநாதன் யாதவ்
12) மதுரை - ராம சீனிவாசன்
13) விருதுநகர் - ராதிகா சரத்குமார்
14) தென்காசி - ஜான் பாண்டியன்
15) புதுச்சேரி - நமச்சிவாயம்
டாப் வேட்பாளர்கள்:
இதில் தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநர் , துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தென் சென்னையில் போட்டிக்கு இறங்கி உள்ளார். அதேபோல் இன்னொரு பக்கம் ராஜ்ய சபா எம்பியாக இருந்தும், மத்திய இணை அமைச்சராக இருந்தும் கூட எல்.முருகன் நீலகிரி வேட்பாளர் ஆகி உள்ளார்.
நயினார் நாகேந்திரன் பாஜகவின் தமிழக சட்டசபை உறுப்பினராக இருந்தும் கூட நெல்லை வேட்பாளர் ஆகி உள்ளார். மேலும் திமுக சின்னத்தில் எம்பியான பாரிவேந்தர் (இ.ஜ.க) பெரம்பலூரில் பாஜக சார்பாக நிற்கிறார்.
தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்ற அண்ணாமலை கோவையில் நேரடியாக களமிறங்கி உள்ளார். மத்திய சென்னை - வினோஜ் செல்வம், வேலூர் - ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி), தஞ்சை - எம்.முருகானந்தம் ஆகியோர் களமிறக்கப்பட்டு உள்ளனர்.
இது போக சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்து இரண்டு வாரங்கள் கூட ஆகாத நிலையில் விருதுநகரில் ராதிகா சரத்குமார் களமிறக்கப்பட்டு உள்ளார்.
ஏன் இப்படி; இப்படி தமிழ்நாட்டில் பாஜக சார்பாக நாடாளுமன்ற தேர்தலுக்கு அதி முக்கியமான வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர். பாஜகவின் இந்த தீவிர வேட்பாளர் தேர்வு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தலில் வடக்கில் பாஜக மெஜாரிட்டி பெறாத பட்சத்தில் தமிழ்நாட்டில் பெறக்கூடிய ஒவ்வொரு இடமும் அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும். அதை மனதில் வைத்தே பாஜக இங்கே இந்த முறை டாப் வேட்பாளர்களை இறக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
ஒருவேளை நிலைமை மோசமானால்.. ஒவ்வொரு சீட்டும் கைகொடுக்கும் என்பதால் தமிழ்நாடு மீது பாஜக ஸ்பெஷல் கவனம் செலுத்தி உள்ளதாக அரசியல் வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.
-
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
என் பெயரை பயன்படுத்த கூடாது.. பதவிக்கு 'மூச்'.. அண்ணாமலை முக்கிய அறிவிப்பு -
"அண்ணாமலையை விட்ற கூடாது!" புதிய இயக்கத்தில் முதல் ஆளாக இணைந்த கூமாபட்டி தங்கபாண்டி! பின்னணி என்ன? -
கொங்கு மண்டலத்தில் அஸ்திவாரம்.. அதிமுக திமுக மாஜிக்களுக்கு வலை.. அண்ணாமலை பலே பிளான் -
அண்ணாமலையிடம் கேளுங்கள்.. தாமரையில் ஒரு இதழை கூட அசைக்க முடியாது..தமிழிசை சௌந்திரராஜன் -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா -
அண்ணாமலையை நம்பி ஏமாறாதீங்க! ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வேண்டாம்! நயினார் அட்வைஸ் -
அண்ணாமலை மாயமான்.. ஆர்எஸ்எஸ்-இன் புதிய அவதாரம்.. வீரமணி விமர்சனம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம்












Click it and Unblock the Notifications