கவனிச்சீங்களா? வெற்றி மேல் வெற்றி பெற்ற எடப்பாடி.. ஆனாலும் வாயை திறக்காத 2 பெரும் தலைகள்.. ஏன்?
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி வென்று இருந்தாலும் அவருக்கு முக்கியமான இரண்டு தலைகளிடம் இருந்து வாழ்த்து வரவே இல்லை.
அதிமுக பொதுக்குழு வழக்கில் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் வழங்கப்பட்ட தீர்ப்பில் நேற்று எடப்பாடி பழனிசாமி வெற்றியடைந்தார்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கி இருந்தது.

பொதுக்குழு செல்லும்
இந்த நிலையில் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதிமுகவில் பொதுக்குழுவிற்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது தெளிவாகி உள்ளது. இந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான ஓபிஎஸ் தரப்பு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

தள்ளுபடி
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கியமான பாயிண்ட் ஒன்றை சொல்லி உள்ளது. அதில், பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகள் மூலம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதனால் அந்த தீர்மானங்களை நிராகரிக்க முடியாது. அதோடு பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதனால் பொதுக்குழு தீர்மானங்களும் செல்லும், என்று கூறி உள்ளது. இதையடுத்து நேற்று எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அதாவது அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அதிமுக தேர்தல் குழு நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

என்ன ஆச்சு?
இதற்கு பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். முக்கியமாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த வாழ்த்தில், அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள தமிழக முன்னாள் முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எடப்பாடி பழனிசாமி அவர்களை தொலைப்பேசி வழியாக தொடர்புகொண்டு எனது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டேன் என்று அண்ணாமலை குறிப்பிட்டு உள்ளார். அதேபோல் பாமக உள்ளிட்ட மற்ற கட்சிகளும் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

வாழ்த்து
அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி வென்று இருந்தாலும் அவருக்கு முக்கியமான இரண்டு தலைகளிடம் இருந்து வாழ்த்து வரவே இல்லை. அதன்படி எடப்பாடி பழனிசாமிக்கு இதுவரை டெல்லி பாஜகவில் இருந்து ஒருவரும் வாழ்த்து சொல்லவில்லை. பிரதமர் மோடி பொதுவாக இது போன்ற விஷயங்களில் வாழ்த்து சொல்லுவார். ஆனால் அவர் வாழ்த்து சொல்லவில்லை. எடப்பாடியின் பிறந்த நாளுக்கு முன்பெல்லாம் வாழ்த்து சொல்லும் மோடி, இந்த முறை வாழ்த்து சொல்லாமல் தவிர்த்தார். இப்போது பொதுச்செயலாளர் ஆனதற்கும் வாழ்த்து சொல்லவில்லை.

மோடி
அதேபோல் அமித் ஷாவும் எடப்பாடிக்கு வாழ்த்து சொல்லவில்லை. எடப்பாடி இப்போது பெற்ற வழக்கு வெற்றி என்பது சாதாரண வழக்கு வெற்றி கிடையாது. அவர் உட்கட்சி தேர்தலில் போட்டியின்றி வென்று பொதுச்செயலாளர் ஆகி உள்ளார். ஜெயலலிதாவிற்கு பின் அந்த பதவியை பெற்றுள்ளார். அப்படி இருக்கும் ஒருவருக்கு அமித் ஷா வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ஏன் டெல்லி பாஜக இதில் மௌனம் காக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர்












Click it and Unblock the Notifications