Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தடை நீங்கினாலும்.. நிர்வாகிகளுக்கு அனுமதி இல்லை.. அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸார்.. பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தொண்டர்களும், நிர்வாகிகளும் செல்வதற்கான தடை நீங்கிய பிறகு அங்கு அவர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி, ஓபிஎஸ் ஒரே அணியில் வர வேண்டும் - ஓ.பி.ரவீந்திரநாத்

    கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுகவில் ஒற்றைத் தலைமையை தேர்வு செய்வதற்காக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ்ஸும் அவரது ஆதரவாளர்களும் கலந்து கொள்ளவில்லை.

    இந்த நிலையில் வானகரத்தில் அதிமுக பொதுக் குழு கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது ஓபிஎஸ்ஸும் அவரது ஆதரவாளர்களும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றனர்.

    அலுவலகம்

    அலுவலகம்

    அப்போது அந்த அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. இதனால் பூட்டை உடைத்து கொண்டு ஓபிஎஸ் தரப்பினர் உள்ளே சென்றனர். இதையடுத்து எடப்பாடி தரப்புக்கும் ஓபிஎஸ் தரப்புக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர். அங்கிருந்த ஓபிஎஸ், இபிஎஸ் பேனர்களை பரஸ்பரம் கிழித்தெறிந்தனர்.

    நாற்காலிகள்

    நாற்காலிகள்

    மேஜை, நாற்காலிகள் உடைக்கப்பட்டு அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது. இதையடுத்து வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு அந்த அலுவலகத்திற்கு சீல் வைத்துவிட்டு சென்றனர். இதையடுத்து அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிசாமியும் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    நீதிமன்றம்

    நீதிமன்றம்

    இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த மாதம் 20 ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதில் அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது. மேலும் ஒரு மாத காலத்திற்கு அதாவது ஆகஸ்ட் 20 ஆம்தேதி வரை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தொண்டர்களும் நிர்வாகிகளும் செல்லக் கூடாது என உத்தரவிட்டது.

    தடை உத்தரவு

    தடை உத்தரவு

    இந்த நிலையில் இந்த தடை உத்தரவு நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் இன்று முதல் அதிமுகவினர் தலைமை அலுவலகத்திற்கு செல்வர் என எதிர்பார்க்கப்பட்டது. ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிசாமியும் சென்னையில் இல்லை, அவர்கள் இருவரும் சொந்த ஊருக்கு சென்றிருக்கிறார்கள். இதனால் அவர்கள் இருவரும் வரமாட்டார்கள். அது போல் அவரது நிர்வாகிகளும் வர வாய்ப்பில்லை என்றே தெரிந்தது.

    அதிமுக தலைமை அலுவலகம்

    அதிமுக தலைமை அலுவலகம்

    இந்த நிலையில் தடை நீங்கிய பிறகு அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் செல்ல அதிமுகவினருக்கு அனுமதி இல்லை. அதிமுகவினருக்கு அனுமதி இல்லை என்ற பெயர் பலகையும் அப்புறப்படுத்தாமல் அங்கேயே இருக்கிறது. அலுவலகத்தின் வெளியே ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த வன்முறை சம்பவத்தில் ஆதாரங்களை போலீஸார் சேகரித்து வருகிறார்களாம்.

    ஏமாற்றம்

    ஏமாற்றம்

    இதனால் தற்போது தொண்டர்களும் நிர்வாகிகளையும் உள்ளே விட்டால் அவர்கள் ஆதாரத்தை அழிக்க நேரிடும் என்பதால் இன்றைய தினம் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. அது போல் அங்கு கலவரத்தின் போது சிதறிய பொருட்கள் இன்னும் சீரமைக்கப்படவில்லை என்பதும் காரணமாக சொல்லப்படுகிறது. தலைமை அலுவலகத்திற்கு ஆசையாய் திரண்ட தொண்டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதையடுத்து தலைமை அலுவலகமே வெறிச்சோடி கிடக்கிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+