"மாசத்துல 3 முறை".. ஒரே ரூமுக்குள்.. பெண்ணிடம் சைஸாக சொன்ன ஓனர்.. நைஸாக தட்டி தூக்கிய காக்கிகள்..!

இன்டர்வியூ வந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபரை கைது செய்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேலை கேட்டு வந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசி, உறவுக்கு அழைத்த கம்பெனி ஓனரை, தட்டி தூக்கிவிட்டனர் சென்னை போலீசார்..!

அந்த நபர் பெயர் கணேஷ்பாபு.. சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர்.. மாதவரம் 200 அடி சாலையில் பெயின்ட் விநியோகம் செய்யும் கம்பெனி ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறார்.

இந்த பெயிண்ட் கம்பெனிக்குதான் "பிரைவேட் செக்ரட்டரி" போஸ்டிங் வேலைக்கு, ஆள் தேவை என்று விளம்பரம் செய்திருந்தார்.

 இன்டர்வியூ

இன்டர்வியூ

இதை பார்த்துவிட்டு, ஒரு இளம்பெண்ணும் அந்த கம்பெனிக்கு வேலை தேடி வந்துள்ளார்.. கடந்த 22ம் தேதி காலை 11.30 மணிக்கு இன்டர்வியூ என்று சொல்லி உள்ளார்கள்.. அந்த பெண்ணும், அதே நேரத்துக்கு அங்கே சென்றுள்ளார்.. கம்பெனியின் மேனேஜிங் டைரக்டர் கணேஷ்பாபுதான் இன்டர்வியூ நடத்தியிருக்கிறார்.. ஆரம்பமே அசிங்கமாக பேசியிருக்கிறார்.. டபுள் மீனிங்கில்தான் பேச்சை துவங்கி உள்ளார்..

இன்டர்வியூ

இன்டர்வியூ

அத்துடன், இன்டர்வியூக்கு அந்த பெண் வந்துள்ளார் என்று தெரிந்தும், ஆயிரம் ரூபாய் பணம் தந்து தன்னுடன் ஜாலியாக இருக்கும்படியும் சொன்னாராம். இதையெல்லாம் கேட்டு அந்த பெண் பதறிப்போய்விட்டார்.. உடனடியாக அந்த கம்பெனியில் இருந்து வெளியேறி, மாதவரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார்.. நடந்ததையெல்லாம் புகாராக எழுதி கொடுத்து, கணேஷ்பாபு மீது நடவடிக்கை கேட்டார்.. போலீசாரும் அந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து, கணேஷ்பாபுவை அதிரடியாக கைது செய்தனர்...

வாக்குமூலம்

வாக்குமூலம்

அவரிடம் விசாரணையும் ஆரம்பமானது.. கணேஷ்பாபுவின் வாக்குமூலத்தை கேட்டு அதற்கு மேல் போலீசார் ஆடிப்போய்விட்டார்களாம். எந்த பெண் வேலைக்கு வந்தாலும் இப்படித்தான், ஜாலியாக இருக்க கூப்பிடுவாராம்.. கையோடு அட்வான்ஸ் பணமும் தருவாராம்.. புகார் கொடுத்த பெண்ணை தான் எப்படி அணுகினேன் என்பது குறித்தும் போலீசாரிடம் விலாவரியாக சொல்லி உள்ளார்..

செக்ரட்டரி

செக்ரட்டரி

நேர்காணலுக்கு வந்த பெண்ணிடம், "இந்த கம்பெனிக்கு என்று சில ரூல்ஸ் உள்ளது.. என் கம்பெனியில் செக்ரட்டரி வேலைக்கு சேர்ந்தால் மாதத்தில் 3 முறை வெளியூர்களுக்கு கட்டாயம் போக வேண்டியிருக்கும்.. அப்படி போனால், தன்னுடன் ஒரே ரூமில்தான் தங்க வேண்டும், அதுக்கு ஓகே என்றால், நல்ல சம்பளம், காஸ்ட்லி லைப் போன்றவற்றுக்கு நான் கியாரண்ட்டி" என்றாராம்.

 காஸ்ட்லி டிரஸ்

காஸ்ட்லி டிரஸ்

அதுமட்டுமல்ல, "இன்டர்வியூ வரும்போது காஸ்ட்லி டிரஸ் போட்டுக் கொண்டு வர மாட்டியா? இந்த டிரஸ், மேக்கப் எல்லாம் ரொம்ப கேவலமாக இருக்கு.. காஸ்ட்லியான துணிமணிகள் வாங்கி கொள்" என்று சொல்லிதான், அந்த 1000 ரூபாயை தந்தாராம்.. அந்த பணத்தை வாங்காமல்தான், அப்பெண் அங்கிருந்து வெளியில் வந்துவிட்டார் என்று சொல்லி உள்ளார்.. எனினும் பெண் அளித்த புகார் அடிப்படையில் கணேஷ்பாபுவை கைது செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+