தேனாம்பேட்டை சிக்னல்ல "பியூட்டி பார்லர்" பெண்ணுக்கு முத்தம் தந்த "ரோமியோ".. கரெக்ட்டா வந்துட்டாங்களே
சென்னை: மேட்டுப்பாளைய பஸ்ஸில், நேற்றுதான் ஒரு சபலிஸ்ட் செருப்பாலேயே அடிவாங்கினார்.. இப்போது சென்னை மவுன்ட்ரோடில் இன்னொருத்தர் வசமாக சிக்கியிருக்கிறார்.
அண்ணாசாலையில் நடந்து சென்ற இளம் அழகுகலை நிபுணரை வழிமறித்து கட்டியணைத்து 'இச்இச்' என்று முத்தம் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்த, மென்பொறியாளர் ஒருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது.

பியூட்டி பார்லர்: சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் திவ்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 26 வயதாகிறது.. இவர் ஒரு அழகுக்கலை நிபுணர் ஆவார்.. தி.நகர் வெங்கட்நாராயணா சாலையிலுள்ள பிரபலமான பியூட்டி பார்லர் ஒன்றில், கன்சல்டன்ட்டாக வேலைபார்த்து வருகிறார்..
இவர் வழக்கமாக, மெட்ரோ ரயில் மூலம், அண்ணா சாலையில் உள்ள டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்து, பிறகு அங்கிருந்து அவர் வேலை செய்யும் பியூட்டி பார்லருக்கு நடந்து செல்வார்.. அப்படித்தான் நேற்றும், மெட்ரோவில் இருந்து இறங்கி, அங்கிருந்து பார்லருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். தேனாம்பேட்டை தனியார் வங்கி அருகே செல்லும்போது, எதிரே பைக்கில் ஒரு இளைஞர் வந்துள்ளார்.. எதிரே நடந்து வந்து கொண்டிருந்த திவ்யாவை பார்த்ததுமே, டக்கென பைக்கை நிறுத்திவிட்டார்.
உதட்டில் முத்தம்: பிறகு, ரோட்டை சுற்றுமுற்றும் ஆராய்ந்தார்.. யாராவது வருகிறார்களா? கவனிக்கிறார்களா? என்று பார்த்தார்.. அந்த நேரம் பார்த்து ஒருத்தரையும் காணோம்.. அப்போதுதான் மழை பெய்ததால், சாலை வெறிச்சோடி காணப்பட்டது.. உடனே அந்த இளைஞர், திவ்யாவின் அருகில் சென்று, திடீரென அவரை கட்டிப்பிடித்து, உதட்டில் சரமாரியாக முத்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.. பிறகு, பாலியல் ரீதியான தொந்தரவுகளை செய்ய துவங்கினார்..
இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத திவ்யா, அலறி துடித்தார்.. உதவி கேட்டு சத்தம் போட்டார்.. அந்த சத்தம் கேட்டு, அக்கம்ப்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர்.. ஆனால், அதற்குள் அந்த இளைஞர், பைக்கை எடுத்துக்கொண்டு, எகிறி தப்பினார்.
புகார்கள்: இதையடுத்து, திவ்யா, தேனாம்பேட்டை மகளிர் போலீசுக்கு சென்று புகார் தநத்ர்.. அந்த புகாரின்படி போலீசாரும், சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து வந்து, அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்தனர்.. இளைஞர் பைக்கில் தப்பி சென்றது அதில் பதிவாகி இருந்தது.. பிறகு அந்த பைக் நம்பரை வைத்து, விசாரணை ஆரம்பமானது.. ரோமியோ வசமாக சிக்கினார்.
அவர் பெயர் உதய சரவணன்.. குரோம்பேட்டையை சேர்ந்தவர்.. 31 வயதாகிறது.. இவர் ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியராம்.. ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் கம்பெனில் பணியாற்றி வருவது தெரியவந்தது...
மாமியார் வீடு: அதைதொடர்ந்து போலீசார் அவர் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.. பெண்ணுக்கு முத்தம் கொடுத்துவிட்டு போன கொஞ்ச நேரத்திலேயே போலீஸ் வந்து நிற்பதை பார்த்ததுமே அதிர்ந்து போனார் உதய சரவணன்.. அப்பறம் என்ன? அந்த சாப்ட்வேர் இன்ஜினியரை அள்ளிக்கொண்டு போய்விட்டார்கள்.. ரோமியோ இப்போது ஜெயிலுக்குள் இருக்கிறார்..!!
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications