Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆமா.. ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு முதல்வர் அஞ்சலி செலுத்தாதது ஏன் தெரியுமா? "ப்ரோட்டோகால்" ஒரு விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேமுதிக தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தாதது ஏன் என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுந்துள்ளது. இந்த நிலையில் இதற்கு காரணம் என்ன என்பது குறித்தான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சென்னை நகரை இன்னும் பரபரப்பிலேயே வைத்திருக்கிறது தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவரான ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை சம்பவம்.

Armstrong Bahujan Samaj Party mk stalin

சென்னை பெரம்பூரில் தான் கட்டி வரும் புதிய வீட்டின் பணிகளை பார்த்துக் கொண்டிருந்தபோது மாலையில் ஆறு பேர் கொண்ட மர்ம நபர்களால் ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

டெலிவரி ஊழியர்கள் போல வந்த ஆறு பேர் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக, பொன்னை பாலு மற்றும் அவரது கூட்டாளிகள் 8 பேர் சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். மேலும் 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவரது உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தை ஏழு மணி நேரத்தில் அவரது இறுதி ஊர்வலம் கடந்து ஆம்ஸ்ட்ராங்-ன் உடல் ஆனது அடக்கம் செய்யப்பட்டது. தற்போது அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள், பகுஜன் சமாஜ் கட்சியினர் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அவர் கொலை செய்யப்பட்ட இடத்திலும் பலரும் மாலை மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இன்று சென்னையில் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங்-ன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்த அவரது படத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு ஆறுதல் தெரிவித்த ஸ்டாலின், உறவினர்களிடம் சிறிது நேரம் உரையாடினார்.

இந்த நிலையில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் மறைவின் போது, அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன் என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக அரசு வட்டாரத்திடம் விசாரித்த போது, பொதுவாகவே இயற்கை மரணங்களை தவிர கொலை உள்ளிட்ட துர் மரணங்கள் நிகழும் போது முதலமைச்சர் செல்லக்கூடாது என புரோட்டோகால் இருப்பதாக கூறப்படுகிறது என்கின்றனர்.

மேலும் அரிதிலும் அரிதாக சில மரணங்களுக்கு முன்னாள் முதலமைச்சர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர். ஆனால் தற்போது நடைபெற்று இருப்பது படுகொலை என்பதோடு காவல்துறை விசாரணையில் இருப்பதால் முதலமைச்சர் அங்கு செல்லாமல் இருந்திருக்கலாம் என கூறுகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்த உடனேயே அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அங்கு அதிக அளவில் கூடினர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாலும் முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு செல்லாமல் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+