Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநர் அட்டாக் செய்த நிலையிலும்.. தேநீர் விருந்தில் ஸ்டாலின் பங்கேற்றது ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சென்னை ராஜ் பவனில் கொடுத்த தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின், தனது அமைச்சரவை சகாக்களோடு பங்கேற்றதும், ஆளுநருடன் சிரித்துச் சிரித்துப் பேசியதும் அனைவரது புருவங்களையும் உயரச் செய்திருக்கிறது. முதலில் இந்த தேநீர் விருந்தை புறக்கணிக்க முடிவெடுத்த ஸ்டாலின், இன்று பங்கேற்றது ஏன் என்பது குறித்த பின்னணி தகவல்கள் கசிந்துள்ளன.

சுதந்திர தினத்தையொட்டி இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கொடுத்த தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்டனர். திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டிருப்பது பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.

mk stalin Independence day 2024 2024

ஆளுநர் - தமிழக அரசு மோதல் போக்கு: தமிழக அரசோடும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினோடும் தொடர்ந்து மோதல் போக்கினை கடைப்பிடித்து வருகிறார் ஆளுநர் ரவி. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து உரசல்கள் தொடர்ந்து வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தது, ஆளுநர் அவ்வப்போது திராவிடத்தை விமர்சிப்பது என்பது தொடர்கதையாக இருந்து வருகிறது.

ஆளுநரின் செயல்பாடுகளுக்கு அதிருப்தி தெரிவிக்கும் விதமாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சுதந்திர தினத்தன்று மாலையில் ஆளுநர் மாளிகையில் தரப்படும் தேநீர் விருந்தை 3 ஆண்டுகளாக புறக்கணித்து வந்தன. இந்த ஆண்டும், திமுக மற்றும் தி.மு.க கூட்டணி கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன. ஆனால், இன்று நடந்த தேநீர் விருந்தில் அமைச்சர்கள் பட்டாளத்தோடு பங்கேற்றுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

மீண்டும் சீண்டிய ஆளுநர் ரவி: கடந்த ஒரு மாதமாக அமைதியாக இருந்த ஆளுநர் ரவி, நேற்று சென்னை ஐ.ஐ.டியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய போது, "திராவிட சித்தாந்தம் பிரிவினையை உருவாக்கியது" என்று மீண்டும் திமுகவின் கொள்கைகளைச் சீண்டினார். அவரது பேச்சு திமுகவில் கோபத்தை உருவாக்கியது.

இந்த நிலையில், ஆளுநரின் தேநீர் விருந்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று அவரும் அமைச்சர்களும் டீ பார்ட்டியில் கலந்து கொண்டதும், ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் இயல்பாக சிரித்து மகிழ்ந்திருப்பதும் திமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக உடன்பிறப்புகளிடம் முணுமுணுப்புகளும் எழுந்து உள்ளன.

முதல்வர் ஏன் பங்கேற்றார்?: திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்து அழைப்பை புறக்கணித்த நிலையில், திமுக அரசின் முதல்வரான ஸ்டாலின் ஏன் கலந்து கொள்ளவேண்டும்? என்று விசாரித்தபோது அறிவாலய வட்டாரத்தில் சில தகவல்கள் சொல்லப்படுகின்றன. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆளுநர் விருந்தில் பங்கேற்றதன் காரணம் அதுதானாம்.

"கலைஞர் கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழா வரும் 18 ஆம் தேதி நடக்கிறது. மத்திய பாஜக அரசின் பாதுக்காப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு நாணயத்தை வெளியிடுகிறார். இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பாஜகவினர் பலரும் அழைகப்பட்டுள்ளனர். ஆளுநரின் தேநீர் விருந்தை ஸ்டாலின் புறக்கணித்தால், கலைஞர் நினைவு நாணயத்தை வெளியிடும் நிகழ்வுக்கு ராஜ்நாத் சிங் வரமாட்டார் என்றும், அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் புறக்கணிப்பார்கள் என்றும், புறக்கணிப்பை அண்ணாமலை வெளிப்படையாகச் சொல்வார் என்றும் முதல்வருக்கு அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது.

இதுதான் காரணம்: அதைக்கேட்டு முதல்வர் ஸ்டாலின் கடுமையாக அப்-செட் ஆகியிருக்கிறார். தந்தையின் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா எவ்வித சர்ச்சைகளும் இல்லாமல், அனைத்து தரப்பினரின் வரவேற்போடும் நடக்க வேண்டும் என யோசித்துத்தான் ஆளுநரின் இன்றைய தேநீர் விருந்தில் கலந்துகொள்ள முடிவு செய்தார் முதல்வர் ஸ்டாலின்" என்கிறார்கள்.

முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி மூலமாக என்னை அன்போடு அழைத்தார். நமது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட உள்ளது. இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார். முதல்வரின் அன்பான அழைப்பை ஏற்று தமிழக பாஜக சார்பில் நானும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் கலந்து கொள்கிறோம்.

அண்ணாமலை சொன்ன முக்கியமான விஷயம்: மத்திய அரசு இந்த நாணயத்துக்கு அனுமதி கொடுத்திருப்பதை தமிழகத்துக்கு கிடைத்த பெருமையாகவும், கலைஞருக்கு கிடைத்த பெருமையாகவும் நான் பார்க்கிறேன். எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள், சித்தாந்த ரீதியாக கட்சி அடிப்படையில் இருக்கலாம். அது வேறு. ஆனால் மாநிலத்தின் முதல்வராக ஐந்து முறை பொறுப்பில் இருந்தவர், தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல கட்டங்களில் உழைத்தவர். எனவே இந்த நிகழ்வில் தமிழக பாஜக கட்டாயம் பங்கேற்கும். எப்படி பெருந்தன்மையோடு ராஜ்நாத் சிங் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வருகிறாரோ, அதே பெருந்தன்மையை தமிழக அரசும் காட்டும் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

அண்ணாமலை சொன்ன கடைசி விஷயம் தான் முக்கியமானது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எப்படி பெருந்தன்மையோடு தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வருகிறாரோ, அதே பெருந்தன்மையை தமிழக அரசும் காட்ட வேண்டும் எனக் கூறி இருந்தார் அண்ணாமலை. இன்று நடைபெற்ற தேநீர் விருந்து நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என்பதையே அண்ணாமலை அப்படி குறிப்பிட்டுச் சொன்னார் எனக் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+