ஒடிசாவிலிருந்து உதயநிதி சொன்ன வார்த்தை! அப்படியே கண்கலங்கிய ஸ்டாலின்! அடுத்த நொடி நடந்த பரபர சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் பேசிய போது முதல்வர் ஸ்டாலின் கண்ணீர்விட்டதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்து இந்தியாவையே உலுக்கி உள்ளது. ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 294 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் பலி எண்ணிக்கை 400 ஐ தாண்டலாம் என்று கூறப்படுகிறது. 600 பேர் வரை காயம் அடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Why did CM Stalin cry while meeting with Udhayanidhi stalin on Odisha train accident issue?

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வரும் பிரபல கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரில் இருந்து ஹவுரா வரும் எக்ஸ்பிரஸ் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அங்கே இருந்த சரக்கு ரயிலுடன் கோரமண்டல் ரயில் மோதியதில் அடுத்த சில நிமிடங்களில் பெங்களூர் ரயிலும் மோத பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த கோரமண்டல் ரயிலில் தமிழர்கள் பலர் பயணம் செய்து இருக்கலாம் என்றும் அஞ்சப்பட்டது. இதையடுத்து கோரமண்டல் ரயில் கோர விபத்தில் சிக்கிய தமிழர்களின் நிலையறியவும், தேவையான நடவடிக்கைகளை விரைந்து செய்யவும் அமைச்சர் உதயநிதி தலைமையில் ஒரு குழுவினரை ஒடிசாவுக்கு உடனடியாக அனுப்பி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

இதில் முதல்கட்ட தகவல்களின்படி தமிழர்கள் யாரும் அதிகாரப்பூர்வமாக இதுவரை மரணம் அடைந்ததாக தெரியவில்லை. அதே சமயம் விபத்திய சிக்கிய ரயிலில் இருந்தவர்களில் 11 தமிழர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்று மீட்பு குழுவில் இடம்பெற்றுள்ள பணீந்திர ரெட்டி ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் தமிழ்நாடு அமைச்சர்கள், அதிகாரிகள் 2 குழுக்களாக பணிகளை செய்து வருகின்றனர்.

முன்னதாக முதல்வர் ஸ்டாலினிடம் ஒடிசாவின் நிலைமைகளை உடனுக்குடன் தெரிவித்தபடி இருந்தார் உதயநிதி ஸ்டாலின். நேற்று மாலை, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அரசின் உயரதிகாரிகளுடன் இணைந்து, ஒடிசாவில் இருக்கும் உதயநிதி குழுவினரோடு காணொளி காட்சி வழியாக உரையாடினார் ஸ்டாலின்.

ஒடிசாவின் நிலைமைகளை மிக துயரத்துடன் உதயநிதி பகிர்ந்து கொண்டபோது, ஸ்டாலின் உள்பட அதிகாரிகள் அனைவரும் கண்கலங்கியிருக்கிறார்கள். குறிப்பாக, "இப்படி கோர விபத்தை மனித குலம் இனி சந்திக்கக் கூடாது. அந்தளவுக்கு ஜீரணிக்க முடியாதவையாக இருக்கிறது.

தண்டவாளங்கள் எங்கும் மனித உடல்கள் சிதறிக்கிடக்கின்றன. இதயம் பலகீனமானவர்கள் பார்க்கக்கூடாது என்கிற அளவுக்கு விபத்து மிக கோரமாக இருக்கிறது " என்று உதயநிதி விவரித்த போது, துக்கம் தாளாமல் கண் கலங்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

"தமிழர்கள் 127 பேர் பயணித்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து மருத்துவ சிகிச்சையளித்து தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் " என முதல்வரிடம் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

விபத்துக்கான காரணம் குறித்து முதல்வர் கேட்டதற்கு, மனித தவறென்று முதலில் சொன்னார்கள். ஆனால், பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது. முழுமையாக கிடைத்ததும் தெரிவிக்கிறோம் என்று குழுவில் இருக்கும் பனீந்தர்ரெட்டி கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து அவர்களிடம் பேசிய முதல்வர், "ஒடிஸா அரசின் உதவிகள் கிடைக்கிறதா? நாங்கள் ஒடிஸா அரசுடன் பேச வேண்டுமா? ஒடிசா முதல்வரிடம் நாம் பேசிக்கொண்டுதானிருக்கிறோம். தமிழர்களை கண்டறிந்து அவர்களுக்குரிய மருத்துவ சிகிச்சையில் எந்த காலதாமதமும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒருமுறை நிலைமையை எங்களுக்குத் தெரியப்படுத்திக் கொண்டே இருங்கள்" என உதயநிதி குழுவினருக்கு உத்தரவிட்டிருக்கிறார் ஸ்டாலின்.

காணொளி மூலம் நடந்த உரையாடல் முடிந்ததும், "உதயநிதி சொன்னதை கேட்டீங்களா? கேட்கிற நமக்கே இப்படின்னா... உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எப்படி இருக்கும் ? நினைத்தாலே நெஞ்சு பதறுகிறது " என்று அதிகாரிகளிடம் வேதனைப்பட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+