பெரிய ஐஏஎஸ்ஸை களமிறக்க போகும் ஸ்டாலின்.. வர சான்ஸ் இல்லங்க.. குறுக்கே நிற்கும் எடப்பாடி.. என்னாச்சு?
சென்னை: தமிழ்நாட்டில் முக்கியமான பொறுப்பு ஒன்றிற்கு அதிகாரி ஒருவரை நியமிக்க ஸ்டாலின் திட்டமிட்டு வருகிறாராம். ஆனால் இந்த விவகாரத்தில் எடப்பாடியும் தலையிட வேண்டி உள்ளதால் விவகாரம் சிக்கல்களுக்கு உள்ளாகி இருக்கிறதாம்.
தமிழக லோக் ஆயுக்தா அமைப்பின் முழு நேர தலைவர் பதவி நீண்ட மாதங்களாக காலியாக இருக்கிறது. முழு நேர தலைவரை தேர்வு செய்வது குறித்து தமிழக அரசு கவனம் செலுத்தாத நிலையில், பொறுப்பு சேர்மனாக இருந்து வருகிறார் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும் லோக் ஆயுக்தா அமைப்பின் உறுப்பினருமான ராஜாராம்.

இந்த அமைப்புக்கு முழு நேர தலைவர் தேர்வு செய்யப்பட்டாத விவகாரம் மெல்ல சர்ச்சையாகி வருவதால், தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த 16-ந்தேதி தலைமைச் செயலகத்தில் நடத்த திமுக முடிவு செய்திருந்தது.
சிக்கல்: தலைவரை தேர்வு செய்வதற்கான கமிட்டியில் முதலமைச்சர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இருக்கின்றனர். இந்த கமிட்டியின் கூட்டம் தான் 16-ந்தேதி நடப்பதாக இருந்தது. ஆனால், 16-ந்தேதி காலையில் இந்த கூட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கான காரணத்தை அறிய கோட்டை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, "எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத சூழலைத் தெரிவித்திருக்கிறார். அதனால் ஆலோசனைக் கூட்டத்தை தள்ளிவைக்க முதல்வர் கோரியதால், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு விட்டது " என்கிறார்கள்.
முழு நேர தலைவர் ஒருவரை தேர்வு செய்யப்படும் வரை இந்த அமைப்பின் பொறுப்பு சேர்மனாக ராஜாராமே தொடர்வார் என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
அதிகாரிகள் மாற்றம்: முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பெயரில், தமிழ்நாடு அரசில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பல்வேறு முக்கியமான அதிகாரிகள், ஆட்சியர்கள், ஆணையர்கள் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளனர்.
ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரஹ்மான், நகராட்சி நிர்வாக இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய டி.ஆர்.ஓ., துர்கா மூர்த்தி, வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
தமிழ்நாடு கைவினைப் பொருள் வளர்ச்சி வாரிய நிர்வாக இயக்குநர் கவிதா ராமு, அருங்காட்சியகங்களின் இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். POWERFIN நிறுவன நிர்வாக இயக்குநர் அம்பலவானன், தொழில்முனைவோர் வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். நிதித்துறை இணைச் செயலாளர் கிருஷ்ணனுன்னி, கருவூலத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
ஸ்டாலின் முடிவு: இந்த விவகாரத்தில் ஸ்டாலின் சுயமாக முடிவெடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதாவது இவர்களை தேர்வு செய்ய ஸ்டாலின் யாரிடமும் ஆலோசனை செய்யவில்லை. அவராகவே தேர்வு செய்தவர்கள்தான் இவர்கள் எல்லோரும். இவர்களை கைப்பட டிக் அடித்து ஸ்டாலின் பணியிட மாற்றம் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இப்படி இதுவரை தமிழக அரசியலில் பொதுவாக நடக்காத விஷயம் இந்த அதிகாரிகள் மாற்றத்தில் நடந்து உள்ளதாக கூறப்படுகிறது.











Click it and Unblock the Notifications