ஆஹா.. இவ்வளவு நடந்து இருக்கா? மோடியை ஸ்டாலின் ஐஎன்எஸ்சில் வரவேற்றது ஏன்? பரபரக்கும் உளவு ரிப்போர்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் சுமார் 31,400 மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைப்பதற்காக சமீபத்தில் சென்னை வந்தார் பிரதமர் மோடி. இவரது சென்னை வருகையின் போது வெளி வராத சில நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.
பிரதமர் மோடியை சென்னை ஏர்போர்ட்டிற்கு சென்று முதல்வர் ஸ்டாலின் வரவேற்கவில்லை. அடையாறு ஐ.என்.எஸ். விமானத் தளத்தில்தான் மோடியை வரவேற்றார் ஸ்டாலின்.
ஏர்போர்ட்டுக்கு ஸ்டாலின் ஏன் வரவில்லை ? மோடியை ஏர்போர்ட்டில் வரவேற்பதை தவிர்த்தாரா? என்றெல்லாம் அதிகாரிகள் தரப்பிலும் தமிழக அரசியலிலும் அப்போது எதிரொலித்திருந்தன. அதற்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது.

ஸ்டாலின்
பிரதமர் மோடியை ஏர்போர்ட்டில் வரவேற்க முதல்வர் ஸ்டாலின் நினைத்திருந்தார். ப்ரோட்டகால் படி அவரை வரவேற்பதில் ஸ்டாலினுக்கு எந்த தயக்கமும் இல்லை. வரவேற்க மாட்டேன் என மோடியை அவர் புறக்கணிப்பதாக இருந்திருந்தால் ஐ.என்.எஸ். விமான தளத்திற்கும் செல்லாமல் ஸ்டாலின் தவிர்த்திருக்கலாம். அவரை பொறுத்த வரை பிரதமருக்கு உரிய மரியாதையை தர வேண்டும் என்றே நினைத்தார்.

கேசிஆர்
பிரதமர் மோடி அதே நாளில் தெலுங்கானா சென்ற போதும்.. அதற்கு முன்பு தெலுங்கானா சென்ற போதும் அம்மாநில முதல்வர் கே சந்திரசேகர ராவ் பிரதமர் மோடியை சந்திக்கவில்லை. கேசிஆர் மாதிரி இல்லாமல் பிரதமர் மோடியை வரவேற்க வேண்டும் என்ற திட்டத்தில்தான் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருந்திருக்கிறாராம். பிரதமருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்று எண்ணத்தில் முதல்வர் ஸ்டாலின் இருந்துள்ளார்.

உளவுத்துறை ரிப்போர்ட்
அப்படியிருக்கும் நிலையில், ஏர்போர்ட்டுக்கு ஸ்டாலின் ஏன் செல்லவில்லை? என்று உளவுத்துறை தரப்பில் நாம் விசாரித்தபோது, '' சென்னை ஏர்போர்ட்டில் 3 ஹெலிகாப்டர்களை ஏற்பாடு செய்திருந்தது மத்திய அரசு. ஒரு ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் முருகன், தமிழக கவர்னர் ரவி, பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் ; மற்றொரு ஹெலிகாப்டரில் தமிழக தலைமைச் செயலர் இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் அதிகாரிகள் செல்வதாக இருந்தது. பழைய விமான நிலையத்தில் இருந்து ஐஎன்எஸ் நோக்கி செல்வதற்கான ட்ரிப் இது.

இன்னொரு ஹெலிகாப்டர்
மற்றொரு ஹெலிகாப்டரில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் பயணிப்பது என ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தன. மோடியை வரவேற்க ஏர்போர்ட்டிற்கு ஸ்டாலின் வந்தால், மோடியின் ஹெலிகாப்டரில்தான் ஐ.என்.எஸ். தளத்துக்கு செல்ல வேண்டும். அதுதான் முதலமைச்சருக்கு கொடுக்கக் கூடிய மரியாதை. அப்படி மோடியுடன் ஸ்டாலின் செல்வதை பிரதமர் அலுவலகம் தமிழ்நாடு அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

அழைக்கவில்லை
அதாவது, மோடியுடன் செல்ல ஸ்டாலினை அழைக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் ஸ்டாலினுக்கு அழைப்பில்லை. மோடியுடன் ஹெலிகாப்டரில் செல்லாமல் தமிழக அரசு அதிகாரிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹெலிகாப்டரில் ஸ்டாலின் சென்றால் அது முதலமைச்சர் பதவிக்கு கௌரவமாக இருக்காது என்று நினைத்தே ஏர்போர்ட்டுக்கு செல்வதை தவிர்த்தார் முதல்வர் ஸ்டாலின் என்கிறார்கள். அதாவது, மோடியின் ஹெலிகாப்டரில் செல்ல ஸ்டாலினுக்கு அழைப்பில்லை என்பதால் ஏர்போர்ட்டுக்கு ஸ்டாலின் செல்லவில்லை'' என்று கூறுகின்றனர் உளவுத்துறை அதிகாரிகள்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
"மோடியை மிரட்டுவது ஆபத்து.." புதின் சொன்ன வார்த்தை.. அப்படியே டிரம்ப் மீதும் பாய்ச்சல் -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications