Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பூரா வாந்தி".. ஓடோடி வந்த செல்வப்பெருந்தகை.. "தலைவரை" புட்டுபுட்டு வெச்சிட்டாரே.. கடுப்பில் கமலாலயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாட்ஸ் அப்பில் வந்ததை எல்லாம் வாந்தி எடுக்கிறார் அண்ணாமலை என்று, தமிழக காங்கிரஸ் கடும் கண்டனத்தை பாஜக மீது வீசியுள்ளது.. என்ன காரணம்?

பாஜகவை விமர்சித்து, அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசியிருந்தது மிகப்பெரிய அதிர்வலையை தேசிய அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது.

ராகுல் அப்போது பேசும்போது, ''செங்கோல் நிறுவப்பட்டது மக்களை திசை திருப்பும் ஒரு நாடகம். நாட்டின் உண்மையான பிரச்சினைகளான வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு மற்றும் சிதைந்து வரும் கல்வி குறித்து பாஜகவால் விவாதிக்க முடியாது. முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் தலித் சமூகங்களின் மீது வெறுப்பு உருவாகிறது. அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக உணருகின்றனர்'' என்பது உட்பட பல்வேறு விஷயங்களை விமர்சித்திருந்தார்.

Why did congress mla selvaperundhai condemns bjp leader annamalai

விமர்சனம்: இதற்கு தமிழக பாஜக தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ராகுல் காந்தியை சரமாரி விமர்சித்தார்.

ராகுல்காந்தி சான்பிரான்சிஸ்கோவில் இன்னைக்கு காலையில்தான் போய் இறங்கினார்.. போனதுமே, முதல்கூட்டத்தில் செங்கோல் பற்றி பேசியிருக்கிறார்.. செங்கோலை இப்படி படுக்க வெச்சிருந்தாங்க.. செங்கோலை அப்படி படுக்க வெச்சிருந்தாங்க..ன்னு சொல்லியிருக்கிறார்.. காந்தி குடும்பத்துக்கு தொடர்ந்து செங்கோலை இழிவுபடுத்துவதை ஒரு கடமையாகவே கருதுகிறார்கள்.

"வாக்கிங் ஸ்டிக்: செங்கோலை "வாக்கிங் ஸ்டிக்" என்று ஆனந்தபவனில் நேரு வைத்திருந்தார்.. இன்று அதே வம்சாவழியில் வந்த ராகுல் காந்தி, வழக்கம்போல் செங்கோலை அவமானப்படுத்தி உள்ளார்.. வழக்கம்போல் ஆதீனத்தை அவமானப்படுத்தி உள்ளார்.. அதுவும் வழக்கம்போல் இந்திய மண்ணில் இல்லை.. அமெரிக்காவில் அவமானப்படுத்துகிறார். ராகுல்காந்தி இதை ஒரு வேலையாகவே வைத்திருக்கிறார்.. இப்படித்தான், அன்று ஜல்லிக்கட்டை தமிழ்நாட்டிற்கு தடை செய்து காங்கிரஸ் அவமானப்படுத்தியது.. இப்போது செங்கோலையும் அவமானப்படுத்துகிறார்கள்" என்றெல்லாம் சரமாரி விமர்சித்துள்ளார்.

அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.. அதுவும் முதல் நபராக வந்து, தன் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் சட்டமன்றக் குழு தலைவர் செல்வபெருந்தகை.

இதுகுறித்து ஒரு அறிக்கையும் வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், "இந்திய நாட்டு மக்கள் பிரச்சனைக்குப் பதிலளிக்காத, பிரதமர் மோடி தன்னை முன்னிலைப் படுத்துவதற்காக புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கிறார் என்று ராகுல்காந்தி அமெரிக்கா வாழ் இந்தியர்களிடம் பேசியதை, செங்கோலையும், ஆதீனத்தையும் அவமதித்துவிட்டார் என்று தமிழ்நாட்டின் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Why did congress mla selvaperundhai condemns bjp leader annamalai

வாந்தி எடுத்துள்ளார்: செங்கோலைக் கைத்தடியாக பயன்படுத்தியது காங்கிரஸ் என்றும், ஜல்லிக்கட்டை தடுத்தது காங்கிரஸ் அரசு என்றும் உண்மைக்குப் புறம்பாக பொய்யாக ஒரு குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். வாட்ஸ் அப்பில் வந்ததை வாந்தி எடுத்துள்ளார் அண்ணாமலை. அவர் பேசியதற்கு வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்கின்றேன்.

திருவாவடுதுறை ஆதீனம் செங்கோலை பண்டித ஜவஹர்லால் நேருவிற்கு அன்பளிப்புப் பரிசாக அளித்தார். அதை அலகாபாத் காட்சியகத்தில் திருவாவடுதுறை ஆதீனம் நேருவுக்கு பரிசாகக் கொடுத்த செங்கோல் என்றுதான் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. எங்கேயும் கைத்தடி என்று எழுதப்படவில்லை. ஆட்சி மாற்றத்திற்காக கொடுக்கப்பட்டதில்லை இந்த செங்கோல் என்று தெளிவாகவும், அதற்கான எந்த வரலாற்றுச் சான்றும் இல்லையென்று அனைவரும் கூறும் நிலையில், உண்மைக்கு மாறாக பொய்யை மட்டும் பேசித் திரியும் அண்ணாமலை முதலில் வரலாற்று உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அறியாமையின் உச்சம்: கடந்த 7.5.2014 அன்று பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி சார்ந்துள்ள பீட்டா அமைப்பு தொடுத்த வழக்கின் அடிப்படையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரமாக தடை விதித்தது. அதற்குக் காரணம் காங்கிரஸ் அரசுதான் என்று சொல்வது அறியாமையின் உச்சம். மேலும், அப்போது 2014 நாடாளுமன்றத் தேர்தல் நடந்து கொண்டிருந்தது.

மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கொண்டு வந்தது பாஜக அரசுதான். தற்போது தமிழ்நாட்டில் 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்து மேலும் 500 மருத்துவம் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கியது மத்திய அரசு.

அரிச்சுவடி: நாட்டுக்காக கடுமையாக உழைத்து ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த ஒரு மாதமாக பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக எம்.பி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றியெல்லாம் பேசாத வரலாற்றின் அரிச்சுவடி தெரியாத அண்ணாமலை அரசியல் பரபரப்புக்காக பொத்தாம், பொதுவாக பேசுவதெல்லாம் நகைப்பிற்குரியது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+