அதிமுக பக்கம் புதிய தமிழகம்! கிருஷ்ணசாமி ‘பக்கா ப்ளான்’ ? ரூட் க்ளியர்.. வெற்றி உறுதியா?
சென்னை: டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுக அணியை தேர்வு செய்தற்குப் பின்னால் உள்ள தேர்தல் அரசியல் கணக்கு என்ன? அதனால் யாருக்கு எந்த வகையில் இலாபம்?
அதிரடியாக பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு அதிமுக கூட்டணி பக்கம் வந்துள்ளார் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

இந்தக் கூட்டணி முறிவு நிச்சயம் நடக்கும் என்பது பலரும் எதிர்பார்த்த ஒன்றுதான். அதற்குக் காரணம், தேர்தல் அரசியல் கணக்கு. அதில் அதிக அனுபவம் பெற்றவர் கிருஷ்ணசாமி.
அவருக்கு திமுக கூட்டணியைவிட அதிமுக கூட்டணி அதிக லாபத்தைக் கடந்த காலத்தில் கொடுத்துள்ளது. 2014 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி இவர் 2,62,812 வாக்குகளைப் பெற்றார்.
அதே 2019 தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்குள் வந்தார். அப்போது இரட்டை இலை சின்னத்தில் நின்று 3,55,870 வாக்குகளைப் பெற்றார். கிட்டத் தட்ட 33.4% வாக்குகள்.

திமுக கூட்டணியில் சுமார் இரண்டரை லட்சத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்ற கிருஷ்ணசாமி, அதிமுக கூட்டணியில் மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார். சுமார் 1 லட்சம் வாக்குகள் அதிகம்.
ஆக, திமுக கூட்டணியைவிட அதிமுக கூட்டணி அவருக்கு அனுகூலமாக இருந்துள்ளது.
டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுகவை நம்பியே பாஜக கூட்டணி பக்கம் இருந்தார். அதுவும் மத்தியில் பாஜக ஆளும் கட்சியாக இருப்பதால், அவருக்கு பாஜகவின் உதவி தேவைப்பட்டது.

குறிப்பாகப் பல ஆண்டுகால கோரிக்கையை பாஜகவைக் கையில் போட்டுக் கொண்டு முடித்துவிடலாம் எனக் கணக்குப் போட்டார் கிருஷ்ணசாமி. ஏழு சாதியினரை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிக்க வேண்டும் என கிருஷ்ணசாமி மத்திய அரசை வலியுறுத்தி வந்தார். கூடவே இந்த 7 ஜாதிகளையும் பட்டியலினத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தார்.
ஆரம்பத்தில் பாஜக, இவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு விட்டதைப்போல ஒரு தோற்றத்தை உருவாக்கி நம்பவைத்தது.
ஆனால், 2021 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அதற்கான சட்டத்தை நிறைவேற்றிய பாஜக அரசு, அந்த 7 சாதிகளும் தொடர்ந்து பட்டியலின பிரிவுக்குள்ளாகவே வைக்கப்படும் எனச் சட்டத்தை நிறைவேற்றிவிட்டது. அதில் கிருஷ்ணசாமிக்கு மிகப்பெரிய இடி.

இருந்தாலும் காலப்போக்கில் அதை எப்படியாவது செய்து விடலாம் என்று நம்பினார். மோடியைப் பார்த்து வலியுறுத்தினார். காரியம் கடைசி வரை கைகூடவே இல்லை. ஆகவே, சீச்சீ.. இந்தப் பழம் புளிக்கும் என்று கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியே வந்துவிட்டார்.
டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுக பக்கம் வந்ததற்குப்பின்னால் சில அரசியல் கணக்குகள் உள்ளன. அது என்ன? அதை முதலில் பார்த்துவிடுவோம்.
தென்காசி தொகுதியில் 1957 முதல் அதிக காங்கிரஸ்தான் வென்றுள்ளது. அதாவது 57 தொடங்கி, 91 வரை இது காங்கிரசின் கோட்டையாக இருந்துள்ளது. 5 முறை மூ.அருணாசலம்தான் வெற்றிபெற்றார். அதன்பின்னர் அவர் தமிழ் மாநில காங்கிரசுக்கு வந்த பிறகு 1996இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 6வது முறையாக வெற்றிபெற்றார்.

அந்தக் காலகட்டங்களில் அரசியல் களத்தில் டாக்டர் கிருஷ்ணசாமியும் அவரது கட்சியும் உருவாகவே இல்லை.
கொடியன்குளம் சாதிய வன்முறைதான் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஒரு அரசியல் அங்கீகாரத்தைத் தந்தது. பின்னர் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்காக 1999இல் திருநெல்வேலியில் புதிய தமிழகம் கட்சியில் சார்பில் நடத்தப்பட்ட பேரணி தமிழ்நாட்டையே உலுக்கியது. அன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிப்பதற்காகத் தாமிரபரணி ஆற்றுக்குள் மக்கள் குதித்தனர். அதில் 17 உயிர்கள் பலியாகின.
இதன் மூலம் டாக்டர் கிருஷ்ணசாமியின் முகம் தமிழ்நாடு முழுவதும் பிரபலமானது. இவர் முதன் முதலாக 1996இல் ஒட்டப்பிடாரம் தான் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு முதல் வெற்றியைத் தந்தது. இந்தத் தொகுதிக்குள்தான் கொடியன்குளம் இருந்தது. 2011இல் மீண்டும் ஒட்டப்பிடாரத்தில் வெற்றி.

இரண்டுமுறை இந்தத் தொகுதியில் வெற்றிபெற்ற கிருஷ்ணசாமி, 3 முறை சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். அவரது செல்வாக்கு சொந்தத் தொகுதிக்குள் கடந்த சில ஆண்டுகளில் சரிந்துள்ளது.
இதைப்போலவே கிட்டத்தட்ட 5 முறை நாடாளுமன்றத் தேர்தல் கலத்தில் நின்று முட்டி மோதினார். ஆனால், ஒருமுறை கூட அவர் வெற்றி பெறவில்லை.
தென்காசி மக்களவைத் தேர்தலை பொறுத்தளவில் 2004இல் 1,01,122 வாக்குகளையும் 2009இல் 1,16,685 வாக்குகளையும் பெற்றுள்ளார். இந்தத் தொகுதியில் அவருக்குக் குறைந்த பட்சம் உத்தரவாதம் உள்ளது உறுதி.

தென்காசிக்குள் மூன்று சட்டமன்ற தனித் தொகுதிகள் வருகின்றன. அதில் ஸ்ரீவில்லிப்புத்தூர் அதிமுக வெற்றிபெற்றுள்ளது. கடையநல்லூர் அதிமுக கையில் தான் உள்ளது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செ. கிருஷ்ண முரளி 88,474 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
2021 ஸ்ரீவில்லிப்புத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இ. மா. மான்ராஜ் 70,475 வாக்குகளைப் பெற்றுள்ளார். 2016 சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி சார்பாக நின்ற முத்துக்குமார் 51,430 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்பும் இந்தத் தொகுதிகள் அதிமுகவைக் காப்பாற்றியுள்ளன. தென்காசி தொகுதிக்குள் பாஜகவுக்கு எந்த செல்வாக்கும் இல்லை.
எப்படிப் பார்த்தாலும் அதிமுக- புதிய தமிழகம் கூட்டணி இந்தத் தொகுதியில் பலமானதுதான்.

2019இல் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் கிருஷ்ணசாமி நின்றதால், தேவேந்திரகுல வேளாளர் சாதியைச் சார்ந்த கிறிஸ்துவ மக்கள் இவருக்கு வாக்களிக்கவில்லை. அதனால் 20 ஆயிரம் சிதறிவிட்டன. அந்த வாக்குகள் இப்போது இவர் அதிமுகவில் சேர்ந்து நிற்பதால் கிடைக்கக் கூடும். பாஜக பக்கம் போனால் கிடைக்காது.
இது இல்லாமல் இந்தத் தொகுதிக்குள்ளாக வரும் கடையநல்லூரில் இஸ்லாமியர் வாக்குகள் அதிகம் உள்ளன. அதுவும் அதிமுக கூட்டணியில் இருப்பதால் கிடைக்கும்.
மேலும், அதிமுகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் வெளியேறி இருப்பதால், முக்குலத்தோர் ஓட்டுகள் அதிமுகவுக்குக் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. அதற்குப் பதிலாக அதிமுக பக்கம் கிருஷ்ணசாமி சென்றுள்ளதால், அந்தத் தொகுதிக்குள் உள்ள 3 லட்சத்திற்கும் மேலான தேவேந்திரகுல வேளாளர் வாக்குகள் நிச்சயம் அதிமுக அணிக்கு வரும்.
இதை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்துத்தான் டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுக பக்கம் தலைவைத்துள்ளார். .
-
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம் -
இறுதியான பாஜக வேட்பாளர்கள் பட்டியல்.. பியூஷ் கோயல் ஆலோசனையில் நடந்தது என்ன? அண்ணாமலைக்கு வாய்ப்பு? -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே? -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி












Click it and Unblock the Notifications